சுடச் சுடச் செய்திகள்

இஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்

உலகம் எவ்வளவோ பயங்கரவாதத்தைப் பார்த்து வருகிறது. ஆனால் அமைதிக்குப் பெயர்பெற்ற நியூசிலாந்தில் அண்மையில் இரண்டு பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம், இதுவரை அவ்வளவாக வெளியே தெரியாத ஒரு பெரும் அச்சத்தை வெளிச்சம்போட்டு காட்டி உள்ளது. 
வெள்ளை இன மேலாதிக்கவாதி என்று கூறிக்கொண்டு ஒருவர் நடத்திய அந்தத் தாக்குதல், இஸ்லாம் வெறுப்பு உணர்வு என்ற ஒரு சித்தாந்தம் பூதாகரமாக  பயங்கரவாதச் செயல்வடிவம் பெறுகிறது என்பதை உலகுக் குச் காட்டுவதாகவே தெரிகிறது. 
அணையாமல் கனல் போல் இருந்துவரும் இந்த வெறுப்பு உணர்வை இதுவரையில் உலகம் போதிய அளவுக்குக் கண்டுகொண்ட தாகத் தெரியவில்லை. 
இஸ்லாமிய சமயத்தின் பெயரால் தவறாக வழிகாட்டப்பட்டவர்கள், மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் அரங்கேற்றிவந்த பயங்
கரவாதச் சம்பவங்களில் கவனம் செலுத்திய அளவுக்கு, இந்த இஸ்லாம் வெறுப்புணர்வு அம்சத்தில் கவனத்தைச் செலுத்தி இந்த உணர்வைத் துடைத்து ஒழிக்க, இதுவரை போதிய  நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று கருதப்படுகிறது. இதன் விளைவால் நியூசிலாந்து தாக்குதல் நடந்துள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது. 
அந்த நாட்டில் தாக்குதல் நடத்திய பிரான் டன் டர்ரண்ட் என்ற ஆஸ்திரேலியர், ஐரோப் பாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அரங் கேற்றப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் களுக்குப் பழி தீர்க்க விரும்புவதாகத் தெரி வித்து துப்பாக்கியால் கண்டபடி 50 பேரைச் சுட்டுக்கொன்றுவிட்டார்.
குடியேறிகளைச் சகித்துக்கொள்ள முடி யாது என்பதும் அவரின் சித்தாந்தம். 
வெள்ளை இன மேலாதிக்கச் சிந்தனையும் பாசிசபோக்கும் உள்ள, வன்செயல்மிக்க வலதுசாரி பேர்வழிகள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இதர இடங்களிலும் இருக்கிறார்கள். 
அவர்களிடம் இத்தகைய பழிதீர்ப்புச் சிந் தனையும் குடியேறிகளுக்கு எதிரான சித் தாந்தமும் குடியேறி உள்ளன. 
குடியேறிகள், முஸ்லிம்கள், யூதர்கள், வேறு சமயத்தைத்  தழுவியோர் முதலானோர் அவர்களின் குறியாக உள்ளனர். 
அனைத்துலக நாஸி ஆதரவு இயக்கம் என்று ஒன்று இருக்கிறது. இதுவும் பயங்கர வாதத்தைக் கையில் எடுப்பதுண்டு.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ள 427 பேரில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட கொலைகளுக்கு வலதுசாரி தீவிரவாதிகளே காரணம் என்று அந்த நாட்டின் ‘அவதூறு எதிர்ப்பு லீக்’ என்ற அமைப்பு தெரிவித்து
உள்ளது. 
இந்த அளவு, இடதுசாரி தீவிரவாதிகள் அல்லது உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாதி கள் அரங்கேற்றிய கொலைகளைவிட மிகவும் அதிகம். 
ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் நடத் திய தாக்குல்களைவிட முஸ்லிம் தீவிரவாதி கள் நடத்திய தாக்குதல்களை அமெரிக்க ஊடகங்கள் 357 விழுக்காடு அதிகமாக ஊதி பெரிதாக்கின என்று அலபாமா பல் கலைக்கழக ஆய்வார்கள் சொல்கிறார்கள்.
எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில், இஸ்லாம் வெறுப்புணர்வு என்பது உலக சமூகத்துக்கே பெரும் மிரட்டல் என்பதையும் அந்த மிரட்டல் அறவே துடைத்து ஒழிக்கப் படவேண்டும்; அத்தகைய உணர்வு அறவே கூடாது என்பதையும் அது முற்றிலும் நிரா கரிக்கப்படவேண்டும் என்பதையும் சமூகங் கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நியூசி லாந்து சம்பவம், இதை நினைவுப்படுத்தி  உலகை விழிப்பூட்டி இருக்கிறது. 
இதில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல் லாத இதர உலக மக்களுக்கும்  பங்குள்ளது. குறிப்பாக அரசியல் தலைவர்களுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. 
பேச்சு சுதந்திரம், வன்செயலைக் கிளப்பி விடும் அளவுக்கு வெறுப்புப் பேச்சாக மாறு வதைத் தடுக்கும் வகையில் சட்டதிட்டங்களும் இருக்கவேண்டும். சமய அவதூறுகளைத்  தடுக்கும் முயற்சிகள் இடம்பெறவேண்டும். 
சகிப்புத்தன்மை இல்லாத போக்கு ஆபத் தானது என்பதைத்தான் நியூசிலாந்து தாக்கு தல் நினைவூட்டுவதாக சிங்கப்பூர் முஸ்லிம் சமயத் தலைவர்கள் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்கள்.
இதை மிக முக்கியமானதாகக் கருதி உலக மக்கள் செயல்படும்பட்சத்தில், முஸ்லிம் வெறுப்புணர்வு உள்ளிட்ட எல்லாவித தீவிர வாத, பயங்கரவாத உணர்வுகளையும்  துடைத் தொழித்து அமைதியான, செழிப்பான,  உலகை நிலைநாட்டி, எல்லாரும் சகோதரத் துவ சகவாழ்வு வாழலாம்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon