அரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்

இப்போதைய உலகில் பொருளியலுக்கும் இதர பலவற்றுக்கும் இன்றியமையாததாக இருப்பது ஆங்கில மொழி.
ஐரோப்பிய மூலத்தைக் கொண்டு இருந்தாலும் உலகைச் செம்மைப்படுத்துவதற்கு உதவியது முதல் அறிவியல், ஆண்-பெண் சமத்துவம், சமூக நியதிகள், உலக வர்த்த கம் வரை பலவற்றுக்கும் அந்த மொழி பொது வான தொடர்பு மொழியாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
காலனித்துவம் மூலம் பரவிய ஆங்கில மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டுள்ள ஐரோப்பா அல்லாத நாடுகள் இருக்கின்றன. ஆங்கில மோகம், சூழல்நிலை காரண மாக தங்கள் அடையாளங்களை, மூலத்தை, வேரை இழந்துவிட்ட நாடுகள் அவற்றில் பல.
பேச்சு மொழி ஆங்கிலமாக இருந்தாலும் ஆங்கில நாடாக ஆகிவிடாமல் தனது தனித் தன்மைகளைக் கட்டிக்காக்கும் நாடுகளும் உண்டு. இத்தகைய ஒரு நாடுதான் சிங்கப்பூர்.
சிங்கப்பூர் உலகளாவிய ஒரு நகர நாடு. ஆங்கிலம் பேசும் நாடு. ஆனால் ஆங்கில நாடு அல்ல. மொழியைக் பொறுத்தவரை, பல நாடுகளுக்கு இல்லாத தனிச் சிறப்பு சிங்கப் பூருக்கு உண்டு. நம் நாட்டின் அரசமைப்புச் சட்டம், பல இன, பல மொழி சிங்கப்பூரைக் கட்டிக்காக்கிறது. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகியவை ஆட்சிமொழிகள் என்று அந்தச் சட்டம் சொல்கிறது.
பெரும்பான்மையினர் சீனர்கள் என்றாலும் அரசமைப்புச் சட்டத்தின்படி மலாய் மொழியே தேசிய மொழியாக இருந்துவருகிறது. சிங்கப்பூரின் அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் சீனமும் செம்மொழிகள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் மக்கள் குடியேறிகளாக இருந்தாலும் அவர்கள் தங்கள் மூலத்தை, அடையாளத்தை இழந்து உலக நீரோட்டத்தில் கலந்து வேர் தெரியாமல் போய்விடுவதைத் தடுத்து அவர்களைப் பெரும் பெரும் கலாசாரங்களுக்குச் சொந்தக்காரர்களாக, பழம்பெருமை உள்ளவர்களாக, நவீன உலகில் வாழ்ந்தாலும் பழமைப் பண்பாடுகளை இழக்காதவர்களாக வாழவைப்பது சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டம்தான்.
உரிய மரியாதையுடன் அந்தச் சட்டத்தைக் கடைப்பிடித்து நடக்கவேண்டிய பொறுப்பு மக்கள் அனைவருக்கும் உண்டு.
அத்தகைய குடிமக்களில் ஒருவர் தவறுத லாகச் செய்துவிட்ட ஒரு காரியம், சிங்கப்பூரின் பல இன பல மொழித் தன்மையைப் பின்பற்றி நடப்பதில் தவறு இடம்பெறக்கூடாது என்பதை நினைவூட்டுவதாக இருக்கிறது.
தனது ஈரச்சந்தைக் கடை வேறு இடத் துக்கு மாறுவதைப் பற்றி நான்கு அதிகாரத் துவ மொழிகளில் மக்களுக்குத் தெரிவிக்க விரும்பிய கடைக்காரர் ஒருவர், அதற்கான துண்டு பிரசுரத்தை ஆங்கிலத்தில் அச்சடித்து பிறகு அதை இதர அதிகாரத்துவ மொழிகளில் மொழிபெயர்த்தபோது அறியாமல் அதிகார பூர்வ மொழியையே மாற்றி தமிழ் மொழிக்குப் பதில் இந்தியை இடம்பெறச் செய்துவிட்டார்.
தவறை உணர்ந்து அதைச் சரிப்படுத்த முயன்றபோது மறுபடியும் தமிழ்மொழியில் பிழை செய்துவிட்டார். மலாய் மொழி பெயர்ப் பும் சரியில்லை என்று குறை எழுந்தது.
இவை எல்லாமே அறியாமல் தெரியாமல் செய்த பிழைதான். ஆனால் மொழி என்பது மிக முக்கியமான ஓர் விவகாரம் என்பதால் இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலை யிட்டு விளக்கம் அளித்து விடை காண வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆங்கிலத்துக்கு மேலாக இதர மொழி களில் விளம்பரம் செய்ய விரும்புவோர் அதி காரத்துவ மொழிகளில் கவனம் வைப்ப தோடு அவற்றைப் பிழை இல்லாமல் பயன் படுத்தவேண்டியதையும் உணரவேண்டும்.
தமிழ் ஆனாலும் இதர தாய்மொழி ஆனா லும் சரியாக பிழை இன்றி மொழி பெயர்க்க சிங்கப்பூரில் வளங்கள் அதிகம்.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்புக்காக கூகல் தளத்தை நாடினாலும் அதை மொழி தெரிந்த வர்களிடம் சரிபார்த்துக்கொண்டு செயல்படு வதுதான் நல்ல அணுகுமுறையாக இருக்கும்.
சிங்கப்பூரில் மொழி என்பது மக்களின் அடையாளம் மட்டுமல்ல. அது எல்லா மக் களின் ஐக்கியத்துக்கும் பயன்படக்கூடிய ஆயுதமாக இருக்கிறது என்பதை உணர்ந்து அரசமைப்புச் சட்டத்தின்படி பல இன பல மொழித் தன்மைக்கு இணங்கி அதற்கு உரிய மரியாதையை அளித்து நடந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
இதைத்தான் கடைக்காரரின் தவறுகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!