நமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்

நாங்கள், கடந்த சில ஆண்டுகளில், மாதங்களில் நமது கல்வி முறையில் படிப்படியாக மாற்றங்களைச் செய்து வரு கிறோம்.
மன உளைச்சலைக் குறைத்தல், எதிர்காலப் பொருளியலுக்கு ஏற்ற தேவையான திறன்கள் நமது பிள்ளைக ளிடம் உள்ளதை உறுதி செய்தல், வாழ்க் கையில் வெற்றி பெற பல பாதைகளை உருவாக்குதல் போன்றவை கல்வி முறை மாற்றங்கள் கொண்டிருக்கும் இலக்கு கள், நோக்கங்கள்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் நடை பெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக் கீட்டு விவாதத்தில் நாங்கள் மேலும் இரண்டு மாற்றங்களை அறிமுகப்படுத்தி னோம்.
ஒன்று, உயர்நிலைப் பள்ளிகளில் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்படுத்துதல்.
இரண்டாவது, 'அப்லிஃப்ட்' எனும் மாணவர் வாழ்க்கை மேம்பாடு, குடும்ப ஊக்குவிப்புப் பணிக்குழுவின் பரிந்து ரைகள்.

மாணவர்களின் பலங்களை வளர்க்க உதவும் பாட அடிப்படையிலான
வகைப்படுத்துதல்

அடுத்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப் பட்ட பள்ளிகளில் பாட அடிப்படையிலான வகைப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
அதை வரும் 2024ஆம் ஆண்டுக்
குள் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் படிப்படியாக ஏற்றுக்கொள்ளும். இது நமது கல்விப் பயணத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மைல்கல் என்று சொல்லலாம்.
'பிஎஸ்எல்இ' எனப்படும் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வுக்குப் பிறகு, முழு மையான பாட அடிப்படையிலான வகைப் படுத்துதல், தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள விரைவுக்கல்வி, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்க நிலை (தொழில்நுட்பம்) ஆகிய தரநிலைக் குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படும்.
1970களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி முறை இருந்தபோது, பலர் தங்கள் 'பிஎஸ்எல்இ' தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
ஆறு ஆண்டுகள் பள்ளியில் முறை யான கல்வி வழங்கப்பட்டும் பலருக்கும் சரிவர எழுதவோ படிக்கவோ முடியாத நிலையில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தனிநபர் ஒருவருக்கு ஏற்றவாறு அவ ரது சொந்த வேகத்தில் கற்கும் நிலையை ஏற்படுத்த தரம் பிரித்தல் முறை அறிமுகப் படுத்தப்பட்டது.
தரம் பிரித்தல் முறை மிகச் சிறந்த பயனை வெளிப்படுத்தியது. அதன் மூலம் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விடும் சம வயதுடைய மாணவர்களின் விகிதம் மூன்றில் ஒரு பங்கிலிருந்து தற் போது ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான நிலைக்கு இறங்கியுள்ளது.
இருப்பினும், தரம் பிரித்தல் அப்போது மிகப் பொருத்தமான மாற்றமாக இருந்தா லும் யாரும் எதிர்பாராத வகையில் மாண வர்களிடேயே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி யது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, நாங்கள் கடந்த சில ஆண்டு களாகப் பணியாற்றி வந்தோம். வழக்க நிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) ஆகிய நிலைகளில் கல்வி அமைச்சு படிப்படியாக மாற்றங் களைக் கொண்டு வந்தது.
அந்த வகையில் மேற்கண்ட இரண்டு நிலைகளில் மாணவர்கள் தொடக்க ஆண்டுகளில் சில பாடங்களில் சிறப்பா கச் செய்திருந்தால், அந்தப் பாடங்களை அவர்கள் உயர்வான நிலையில் எடுத்துப் படிக்க முடியும்.
இந்த மாற்றங்களை மாணவர்கள் வர வேற்றனர். அதன் மூலம் வெவ்வேறு தர நிலைகளில் பயிலும் மாணவர்கள் பொதுக் கல்விச் சான்றிதழ் (ஜிசிஇ) சாதாரணநிலைத் தேர்வில் நல்ல தேர்ச்சி பெற முடிந்தது.
இந்தச் சாதகமான விளைவுகளையும் அனுபவங்களையும் பாட அடிப்படையி லான வகைப்படுத்துதல் முறை பயன் படுத்திக் கொள்கிறது. மாணவர்கள் தங் கள் முழுமையான ஆற்றல்களை அடைய உதவவேண்டும் என்பது அடுத்த இலக்கு. இது எப்படி செயற்படுத்தப்படும் என்று பார்ப்போம்:
முதலில், உயர்நிலைப் பள்ளி மாணவர் கள் அதிகமான பாடங்களை உயர்வான நிலையில் கற்க முடியும். அதாவது, தற் போதுள்ள ஆங்கிலம், தாய்மொழி, கணி தம், அறிவியல் பாடங்கள் மட்டுமல்லா
மல், புவியியல், வரலாறு, இலக்கியம் ஆகிய பாடங்களையும் எடுத்துப் படிக்க லாம்.
இரண்டாவதாக, விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), பிரிவு மாணவர்கள், வழக்கநிலை (ஏட்டுக் கல்வி), வழக்கநிலை (தொழில் நுட்பம்) ஆகிய நிலைகளில் வழங்கப்படும் பாடங் களையும் எடுத்துப் படிக்க முழு சுதந்திரம் வழங்கப்படும்.
இதன் மூலம் மாணவர்களின் கற்ற லும் அனுபவங்களும் விரிவடையும் அல் லது இதுபோன்ற தனிப்பயனாக்கத்தால் மாணவர்கள் தங்கள் ஆற்றல்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள உதவும்.
மூன்றாவதாக, ஏட்டுக்கல்வி அம்சங் களுக்கு அப்பால், முழுமையான பாட அடிப்படையிலான வகைப்படுத்துதல், பள்ளிகள் ஏட்டுக்கல்வி பாடத்திட்டத் துக்கு அப்பாலும் தங்கள் சமூக சுற்றுச் சூழலை மறுவடிவமைக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்.
உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட பாடச் சூழலில் அல்லது இணைப்பாட நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு உள்ள பலங்களை மையமாகக் கொண்டு வகுப்புகளை உருவாக்கலாம்.
இது வலுவான மாணவர் தொடர்புக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்களிடையே ஏட்டுக்கல்வியில் சிறப் பாகச் செய்வதற்கு பெரும் ஊக்குவிப்பை அளிக்கலாம்.
கல்வி அமைச்சு, 'ஜிசிஇ' வழக்க நிலை, சாதாரணநிலை தேர்வுகளை ஒன் றிணைத்து பொதுவான ஒரு புதிய தேசிய தேர்வு, சான்றிதழ் அளிப்பு கட்ட மைப்பை உருவாக்கும். அதில் பாடங்கள் 'G1', 'G2', 'G3' நிலைகளில் எடுக்கப் படும்.
ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் எந்த நிலையில் எடுத்துப் படிக்கிறார்கள் என்பதை வைத்து அவர்களுக்கு தேசிய அளவிலான சான்றிதழ் வழங்கப்படும். அது தற்போது ஜிசிஇ 'ஏ' நிலையில் மாணவர்கள் H1, H2, H3 நிலைகளில் எடுத்த பாடங்களுக்கு ஒப்பாக இருக்கும்.
புதிய தேசிய தேர்வு, சான்றிதழ் அளிப்புக் கட்டமைப்பு வரும் 2024ஆம் ஆண்டில் நடப்புக்கு வரும்.
முழுமையான பாட அடிப்படையிலான வகைப்படுத்துதல் முறையால் மாணவர் கள் தங்கள் கல்வியில் மேம்பட்ட நீக்கு போக்கு முறையைப் பெறுவதுடன் செயல் திறன் மூலம் தங்கள் பலத்தைப் பெருக் கிக் கொள்ளலாம்.

வசதிகுறைந்த மாணவர்களுக்காக 'அப்லிஃப்ட்' திட்டத்தை மேம்படுத்துதல்
கடந்த ஆண்டு அக்டோபரில், நான் 'அப்லிஃப்ட்' பற்றி அறிவித்தேன். அது படிப்பில் நன்றாக செய்யாத மற்றும் வசதிகுறைந்த குடும்பப் பின்னணியிலி ருந்து வரும் மாணவர்களின் விருப்பங் களை நிறைவேற்ற ஆதரவளிக்கும் கல்வி அமைச்சின் திட்டமாகும்.
'அப்லிஃப்ட்' என்றால் 'Uplifting Pupils in Life and Inspiring Families Taskforce' அதாவது மாணவர் வாழ்க்கை மேம்பாடு, குடும்ப ஊக்குவிப் புப் பணிக்குழு.
இரண்டு அம்ச அணுகுமுறையைக் இத்திட்டம் கொண்டிருக்கிறது. ஒன்று, மாணவருக்கு அளிக்கப்படும் பயனுள்ள ஆதரவை மையமாகக் கொண்டது. மற் றொன்று, தங்கள் பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் பெற்றோரும் குடும்பங் களும் இன்னும் சிறந்த முறையில் தங் களை ஈடுபடுத்திக்கொள்ளலாம் என் பதை மையமாகக் கொண்டது.
இவ்வாண்டு, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது நான் மேலும் இரு 'அப்லிஃப்ட்' திட்டங் களை அறிவித்தேன்.
முதலாவது, தொடக்கப் பள்ளிகளில் உள்ள மாணவர் பராமரிப்பு நிலையங்கள் மூலம் கல்வி அமைச்சு வசதி குறைந்த மாணவர்களுக்குப் பள்ளிக்குப் பிந்திய பராமரிப்பையும் ஆதரவையும் வழங்கும். மேலும் உயர்நிலைப் பள்ளிகளில் பயி லும் மாணவர்களுக்கும் பள்ளிக்குப் பிந்திய நடவடிக்கைகளை அமைச்சு வலுப்படுத்தும். இதற்கு நாங்கள் மூன்று 'E' அணுகுமுறைகளைப் பயன்படுத்து வோம்.
Expansion - விரிவாக்கம்: 2020ஆம் ஆண்டுக்குள் எல்லா 184 தொடக்கப் பள்ளிகளில் மாணவர் பராமரிப்பு நிலை யங்களும் 120 உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்குப் பிந்திய நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
Enrolement - பதிவு: மாணவர் பரா மரிப்பு நிலையங்களின் அதிகரிப்பால், அவற்றுக்குச் சென்று பயனடையும் பிள் ளைகளின், குறிப்பாக வேறு எந்த மாற்று பராமரிப்பு ஏற்பாடு இல்லாத பிள்ளை களின் பெற்றோரை எட்ட, கூடுதல் முயற்சி எடுக்கப்படும்.
கல்வி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்க ளைப் பராமரிக்கும் நிலையங்களின் செலவுகள் கட்டுப்படியாக உள்ளதா என் பதைப் பரிசீலிக்கும்.
Enhancement - மேம்பாடு: மாணவர் களின் விரித்திறனை வலுப்படுத்தவும் அவர்களின் சமூக-உணர்வு நல்வாழ்வை மேம்படுத்தவும் கூடுதல் நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கெனவே, அறிமுகமான செறிவூட்டல் மற்றும் நற் குணத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை இப்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
இரண்டாவது, சமூக முயற்சிகளையும் வளங்களையும் முறையாகப் பயன்படுத் திக்கொள்ள உதவும் மேம்பட்ட ஒருங் கிணைப்புக்கு, 'அப்லிஃப்ட்' நிகழ்ச்சி கள் அலுவலகம் கல்வி அமைச்சில் அமைக்கப்படும். வசதி குறைந்த மாண வர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பன் முகத்தன்மை கொண்டவை. அவை அனைத்துக்கும் தீர்வு காண்பதும் உதவி அளிப்பதும் பள்ளிகளால் மட்டும் செய்ய முடியாது.
பல அரசாங்க அமைப்புகளும் உதவி அளிக்கின்றன. அதுபோல, சுய உதவி அமைப்புகள், அடித்தள அமைப்புகள், தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகள், தனிப்பட்ட தொண்டூழியர்கள் போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகளும் உதவி களைச் செய்து வருகின்றன.
'அப்லிஃப்ட்' நிகழ்ச்சிகள் அலுவலகம் பல்வேறு அமைப்புகள் அளிக்கும் உதவி களை ஒருங்கிணைத்து, நமது மாணவர் களுக்குப் பள்ளிக்குப் பிந்திய பராமரிப்பு சிறப்பாகக் கிடைக்க நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறையை வழங்கும்.
இந்தத் திட்டங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள www.moe.gov.sg/microsites/cos2019 எனும் இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.
முழுமையான பாட அடிப்படையிலான வகைப்படுத்துதலும் மாணவர் வாழ்க்கை மேம்பாடு, குடும்ப ஊக்குவிப்புப் பணிக் குழுவும் நமது மாணவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள கல்வி அமைச்சு மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் ஒரு பகுதி என்பது குறிப் பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!