உறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்

எந்தவொரு நாடும் தனது பக்கத்து நாட்டை தான் விரும்பியபடி மாற்றிக்கொள்ள முடியாது, ஒரு குறிப்பிட்ட நாடுதான் தனது அண்டை நாடாக இருக்கவேண்டும் என்று தான் விரும் பும் ஒரு நாட்டை எந்த ஒரு நாடும் தேர்ந் தெடுத்துக்கொள்ளவும் முடியாது என்பது பூகோள ரீதியிலான இயற்கை நிலை.
மலேசியாவும் சிங்கப்பூரும் தனித்தனியான சுதந்திர நாடுகள் என்றாலும் அருகருகே அமைந்துள்ள இந்த நாடுகள், 1965ல் சிங்கப் பூர் சுதந்திரம் அடைந்தது முதலே ஒன்று மற்றொன்றின் அணுக்கத் தோழமை நாடாக, ஒட்டிப் பிறந்த இரட்டை பிள்ளைகள் போல் இருந்து வருகின்றன.
அப்போதைக்கு அப்போது இருநாட்டு உறவில் சில பிரச்சினைகளும் மனக்கசப்பு களும் சச்சரவுகளும் தலைதூக்கினாலும் இரு நாட்டு அரசியல் தலைவர்களின், மக் களின் நல்லுறவு அடிப்படையிலான அணுகு முறை காரணமாக அந்தப் பிரச்சினைகள் வெற்றிகரமான முறையில் சமாளிக்கப்பட்டு இருநாட்டு உறவு காலவோட்டத்தில் வலு வடைந்தே வந்துள்ளது.
என்றாலும் சென்ற ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைந்து டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்குப் பிறகு இருநாட்டு உறவில் சில பிரச்சினைகள் தலைகாட்டின.
இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சில நாட்களுக்கு முன் மலேசி
யப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுவை சந்தித்தார்.
இச்சந்திப்பு, இப்போதைய சூழலில் இரு நாட்டு நல்லுறவுக்கு உரம் போடும் முயற்சியில் மேலும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்து இருக்கிறது என்று சொல்லலாம்.
டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியை ஏற்றதற் குப் பிறகு இடம்பெற்ற முதல் ஓய்வுத்தளச் சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலுவையில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடக் கூடிய அளவுக்கு உறுதியான, திட்டவட்டமான தீர்மானங்கள் அந்த ஒரே நாள் சந்திப்பில் இடம்பெற்றுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும் இரு தலை வர்களும் தத்தமது நிலைகளைத் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் முன் வைத்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.
சிங்கப்பூரின் 200வது ஆண்டுவிழா அனு சரிக்கப்படும் இந்த ஆண்டில், வரும்
ஆகஸ்ட் மாதம் நடக்கும் தேசிய தின அணி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் விடுத்த தோழமைமிக்க அழைப்பை டாக்டர் மகாதீர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
இது சிங்கப்பூர்-மலேசியா சுதந்திர நாடு களைப் பிணைக்கின்ற வரலாற்று, பொரு ளியல், சமூக உறவுகளை மறுஉறுதிப்படுத்து வதாக இருக்கிறது.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடை யில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. என் றாலும் அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சி கள் இடம்பெற்றுதான் வருகின்றன.
தங்கள் கடல் எல்லைப் பிரச்சினைகளுக்
குத் தீர்வுகாணும் வகையில் இரு நாடுகளும் ஒரு மாதத்துக்குள் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடை யில் 1962ஆம் ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர் உடன்பாடு தொடர்பில் தலைகாட்டி இருக்கும் பிரச்சினை களுக்குச் சுமுகமான தீர்வுகாண இரு நாடுகளின் தலைமைச் சட்ட அதிகாரி களும் தொடர்ந்து பேச்சு நடத்தப் போகிறார் கள்.
1962ஆம் ஆண்டு உடன்பாட்டின்படி சிங் கப்பூருக்கு விற்கப்படும் சுத்திகரிக்கப் படாத தண்ணீர் விலை தொடர்பிலான இரு நாடு களின் அக்கறைகள், எண்ணங்கள் ஆகிய வற்றை நன்கு புரிந்துகொண்டு இருதரப்பு களும் செயல்படும் என்றும் நம்பப்படுகிறது.
ஒளிவுமறைவு இல்லாத இதேபோன்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டால் சிங்கப் பூர்-மலேசியா அண்டை நாடுகளுக்கு இடை யில் நிலவும் ஆகாய வழி போன்ற இதர பிரச்சினைகளுக்கும் ஆக்ககரமான முறை யில் தீர்வுகாண முடியும்.
இரு தரப்புக்கும் பரஸ்பர நன்மை பயக் கின்ற, பலன் அளிக்கின்ற வகையில் இத் தகைய அணுமுகுறை இடம்பெறவேண்டும் என்று உறுதிபூண்டு செயல்படுவதன் மூலம் சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களின் வருங் கால சந்ததியினருக்குச் சிறந்த எதிர்
காலத்தை உருவாக்கவும் உறுதிப்படுத்தவும் முடியும் என்பதும் அவசியமானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!