மின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்

டாக்டர் டி. சந்துரு, 
தலைவர், சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில்சபை

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி
யில், இந்திய வர்த்தகச் சமூகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 
சிங்கப்பூரில் தங்கள் வர்த்தக முயற்சிகளில் வெற்றியடைந்திருக்கும் நன்மதிப்பு பெற்றுள்ள இந்திய வர்த் தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு வலுவான குழு உள்ளது.
அத்துடன் அக்குழு வர்த்தகச் சமூ கத்துக்கும் சமுதாயத்துக்கும் பங்க ளிப்பதிலும் துடிப்பாக இருக்கிறது.
சிங்கப்பூர் இவ்வாண்டு தனது இரு நூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் வேளையில், இருநூறு ஆண்டுகளுக்கு முன்னேரே சிங்கப்பூரில் கால் பதித்த அந்தக் காலத்துக்கு இந்திய வர்த்தகர் களையும் தொழில்முனைவர்களையும் நினைத்துப் பார்ப்பதற்கு இது முக்கிய தருணமாக விளங்குகிறது.
நவீன சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அவர் கள் குறிப்பிடத்தக்க வகையில் பங்க ளித்திருக்கிறார்கள். 
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளியல் உறவு இன் னும் ஆழமாக வேர்விட்டு வருகிறது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டில் இந் தியப் பிரதமர் நரேந்திர மோடி அடை யாளம் காட்டிய பகுதிகளில் பொருளி யல் பன்மடங்கு பெருகியுள்ளது.
சிங்கப்பூர், இப்போது இந்தியாவின் இரண்டாவது ஆகப் பெரிய முதலீட்டாள
ராக விளங்குகிறது. அதன் ஒட்டுமொத்த முதலீடுகள் $36.3 பில்லியனுக்கு உயர்ந்து உள்ளது.
ஆசியான் வட்டத்துக்குள் சிங்கப்பூர், இந்தியாவின் இரண்டாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இருக்கிறது. தெற்காசியாவில் இந்தியா, சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக விளங்குகிறது. 
2017-18ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் -இந்தியா இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு $17.7 பில்லியன். ஆசியானுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் மொத்த வர்த்தகத்தில் 21.8% சிங்கப்பூருடனான வர்த்தகமாக அமைகிறது. மேலும் அது இந்தியாவின் உலக அளவிலான வர்த்த கத்தில் 2.3 விழுக்காடாகவும் அமைகிறது. 
2017-18ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூருடனான வர்த்தகத் தில் இந்தியா $2.73 பில்லியன் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது.
சிங்கப்பூரில் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தில் சிறந்து விளங்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்கையும் குடியரசில் அடுத்த தலைமுறை தொழில்முனைவர் களை உருவாக்குவதற்கு செல்வாக்குமிக்க பங்கையும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபை (சிக்கி) தொடர்ந்து வெளிப் படுத்தி வருகிறது.
சிங்கப்பூர் இந்திய சமூகத்தைப் பிரதி நிதிக்கும் வர்த்தக சபை என்ற முறையில், ‘சிக்கி’, வர்த்தகச் சமூகத்தில் உள்ள தொழில்முனைவர்களும் மக்களும் வர்த் தகம் பற்றி பல விவரங்களை அறிந்து கொள்வதற்கும், ஒத்துழைக்கவும், வர்த்தக யோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்
கும் உள்ளூரிலும் அனைத்துலக அளவி லும் வர்த்தக ஆற்றல்களை வெளிக் கொணரவும் முக்கியமான, பயனுள்ள தள மாக உருவாகியுள்ளது. 
நிறுவனங்களுக்கு குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் திறன் மேம்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு, அனைத் துலகமயமாதல், மின்னிலக்க உருமாற்றம் போன்ற அரசாங்க பயணத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவதற்கு ‘சிக்கி’ எப்போதும் தனது முழு ஆதரவை அளித்து வந்துள்ளது.
அந்த வகையில், சிங்கப்பூர் இந்திய வர்த்தகச் சமூகம் உலக அளவில் பல் வேறு வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத் திக்கொள்வது பற்றி பரிசீலிக்க ‘சிக்கி’ எப்போதும் ஊக்குவித்து வருகிறது.
2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10,000 புதிய நிறுவனங்கள் தொடங்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சி, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங் கள் ஒத்துழைப்புகளுக்கும் பங்காளித்து வங்களுக்குமான வர்த்தக வாய்ப்புகளை வழங்குகின்றன.
முன்பைவிட இன்றோ, நிறுவனங்க ளுக்கு கூட்டு முயற்சிகளும் வர்த்தக ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்றன. மாறிவரும் வர்த்தகச் சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் தேவைகள் மாறிக் கொண்டு வருகின்றன. அதற்கு ஏதுவாக, நிறவனங்களும் மின்னிலக்க யுகத்துக்கு மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். 
அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் இப்போது மின்னிலக்க முறைக்கு மாறி வருவதால், சிங்கப்பூரின் சிறிய நடுத்தர நிறுவனங்கள் மின்னியல் கட்டண முறை, மின் வர்த்தகம் போன்ற மின்னிலக்கத் தொழில்நுட்பங்களை தங்கள் வர்த்தகத் தில் பயன்படுத்திக்கொள்ள ‘சிக்கி’ உத வுவதில் கடப்பாடு கொண்டுள்ளது. 
தனது உறுப்பினர்களின் தேவைகளுக் கேற்ப மின்னிலக்கத் தளத்தைப் பயன் படுத்த சிக்கி ஊக்குவித்திருக்கிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டு ‘சிக் கி’க்கு மைல்கல் ஆண்டாக’ திகழ்கிறது.
கடந்த ஆண்டு, தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் லிட்டில் இந் தியா வட்டாரத்தில் சிறிய நடுத்தர நிறுவ னங்களுக்கான வர்த்தக ஆலோசனை நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்நிலையம், சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளின் சிறிய நடுத்தர நிறுவ னங்களுக்கிடையே வர்த்தக இணைப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
தங்கள் வர்த்தகத்தை அனைத்துலகமய மாக்க இந்திய வர்த்தகங்கள், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ‘சிக்கி’ எப்போதும் தயாராக உள்ளது. 
இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மிகப் பெரிய வர்த்தகப் பேராளர் குழுவுக்கு ‘சிக்கி’ தலைமையேற்று அழைத்துச் சென் றது. குஜராத் தலைநைகர் காந்திநகரில் நடைபெற்ற 9வது ‘துடிப் பான குஜராத்’ உச்சநிலை மாநாட்டில் சிங்கப்பூர் பேரா ளர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் பேராளர் குழுவில் சிங் கப்பூர் ஏர்லைன்ஸ், தெமாசெக் ஹோல் டிங்ஸ், சிங்கப்பூர் துறைமுக ஆணையம் போன்ற பெரிய நிறுவனங்களின் மூத்த நிர்வாக அதிகாரிகளுடன் மற்ற நிறு வனங்களின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்தியப் பிரதமர் மோடியைச் சந் தித்து உரையாடும் அரியதொரு வாய்ப்பு சிங்கப்பூர் பேராளர் குழுவுக்குக் கிடைத்தது. அந்த மாநாட்டில் ‘சிக்கி’, குஜராத் வர்த்தக தொழில் சபையுடன் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெ ழுத்திட்டது. அதன் மூலம் சிங்கப்பூ ருக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக, உறவுகளும் ஒத்துழைப்புகளும் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
தெற்காசிய சந்தை பற்றி ‘சிக்கி’ உறுப்பினர்களும் சில நிறுவனங்களும் தெரிவித்த கருத்துகளுக்கு இணங்க,  ‘சிக்கி’ அலுவலகத்தின் வரவேற்பு முகப்பில் தெற்காசிய சந்தை தகவல் கூடத்தை அமைக்கும் முயற்சியில் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபை இறங்கியுள்ளது. 
இந்தக் கூடம் வர்த்தகப் பயணங்க ளுக்கும் சிங்கப்பூருக்கு வருகை தரும் வர்த்தக மேலதிகாரிகளுக்கும் முதல் தொடர்பு இடமாக அமையும். 
ஆகவே, இந்தியாவின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ‘சிக்கி’யின் வர்த்தக தொடர்புக் கூடத்தின் உதவி யுடன் சிங்கப்பூர் சந்தைகளில் காலடி எடுத்து வைக்கலாம். அந்நிறுவனங்க ளுக்கான பொருத்தமான வர்த்தகப் பங்காளிகளை சிங்கப்பூரிலும் இவ்வட் டாரத்திலும் இணைத்து வைக்க ‘சிக்கி’ உதவும்.