சுடச் சுடச் செய்திகள்

மின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை

ஆண்ட்ராய்ட் பே, ஆப்பிள் பே, பே லா, பே நவ், கிராப் பே, சிங்டெல் டேஷ், பே வேவ், என ரொக்கமாக பணப் பட்டுவாடா செய்வ தற்குப் பதிலாக மின்னிலக்க முறையில் பணப் பட்டுவாடா செய்யும் வழிகள் ஏராளம். 

  இதுபோன்ற எளிய மின்னிலக்க பணப் பட்டுவாடா முறை பொதுமக்கள், அரசாங்கம் என இரு தரப்பினருக்கும் பயனுள்ள ஒன்றாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. 

ஏனெனில், உணவு அங்காடி நிலையங் களிலோ டாக்சி பயணம் மேற்கொள்ளும் போதோ ஒருவர் சில்லறைக் காசுகளை கைகளில் அடுக்கிக் கொண்டிருக்கவேண்டிய தில்லை.

கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் லீ சியன் லூங்கின் தேசிய தினப் பேரணி உரையைத் தொடர்ந்து சிங்கப்பூரை அறி வார்ந்த நகர மாக்கும் இலக்கின் ஒரு பகுதி யாக  இந்த மின்னிலக்க பணப் பட்டுவாடா முறையை  கையில் எடுக்கும் பணியில் அரசு முழு வீச்சில் இறங்கியது. 

அந்தப் பணி செவ்வனே நடந்து வருவது பலருக்கு எளிதாக இருப்பினும் இதனால் எழக்கூடிய சில பிரச்சினைகளையும் நாம் கவனிக்க  வேண்டும். 

மின்னிலக்கப் பணப் பட்டுவாடா முறையால் ஏற்படக்கூடிய மிகப் பெரிய பிரச்சினையே இதிலிருக்கும் வசதிக்கு ஈடாக பாதுகாப்பு குறித்த கவலையும் இருப்பதே. 

இந்தப் பாதுகாப்பு குறித்த கவலையைப் போக்கவும் பணப் பட்டுவாடா முறையில் இருக்கும் வசதிக்கு ஏற்ப பாதுகாப்பு நிலையும் இருப்பதை உறுதி செய்யவும் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியிலிருந்து இதற் கென சில புதிய வழிகாட்டி நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளது சிங்கப்பூர் நாணய ஆணையம். 

இந்த மின்னிலக்க பணப் பட்டுவாடா  நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்ததும் இந்த முறையைப் பயன்படுத்தி பணப் பட்டு வாடாவில் ஈடுபடுவோர் தங்கள் கைபேசிச் செயலிகளைத் தவறாது அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 

இதன்வழி, அவர்கள் பணப் பட்டுவாடா பற்றிய அறிவிப்புகள் தங்களுக்குக் கிடைப் பதை உறுதி செய்வதுடன் சந்தேகத்துக்கு இடமான முறையில் பண புழக்கம், கைபேசி தொலைந்து போவது போன்ற நிகழ்வுகள் குறித்து அவர்கள் புகார் அளிக்கவும் முடியும். 

இவை யாவும் மின்னிலக்கக் கட்டண முறையில்  ஈடுபட்டிருப்போருக்கும் அதைப்  பயன்படுத்துவோருக்கும் அவசியம் என்ற போதிலும் இவற்றை நடைமுறைப்படுத்தும் அதேவேளையில் அரசாங்கமும் அதன் பல் வேறு அமைப்புகளும் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் அவர்களிடம் முறையான தகவல் களைக் கொண்டுசெல்லவேண்டும்.

தற்போதைய நிலையில் முதிய சிங்கப் பூரர்கள் பல்வேறு மின்னிலக்கப் பணப் பட்டு வாடா முறைகளால் குழம்பிப் போய் உள்ளனர். 

இது ஒருபுறமிருக்க, டாக்சி ஓட்டுநர்கள் சிலர் தங்களுடைய கட்டணத்தை ரொக்க மாகவே கோரும் நிலையும் உள்ளது. 

மின்னிலக்க முறையில் ஊறியவர்கள் கூட வெவ்வேறு  வர்த்தகர்கள் வெவ்வேறு மின்னிலக்கக் கட்டண முறையைப் பயன் படுத்துவதால் சலிப்படைந்துள்ளனர். 

நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிமுறை களால், அவை எவ்வளவு உயர்ந்த நோக்கங் களுக்காக கொண்டு வரப்பட்டாலும், ஏற்கெ னவே மின்னிலக்க பணப் பட்டுவாடா முறை குறித்து அச்சத்தில் உள்ளோர் அந்த முயற்சி யில் இறங்கிப் பார்க்க தயக்கம் காட்டும் நிலையும் ஏற்படலாம். 

சிங்கப்பூரில் மின்னிலக்க பணப் பட்டு வாடா முறை சிக்கலின்றி நடைமுறைப்படுத் தப்பட வேண்டுமென்றால் வங்கிகளும் அரசு அமைப்புகளும் இதுகுறித்து மக்களுக்கு முறையாக போதிக்க வேண்டும்.

- ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்