அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி

இந்தியாவில் புதிதாக அமையும் 17வது நாடாளுமன்றம் பல புதுமைகளைக் கொண்ட தாக இருக்கிறது. மக்களின் உத்தரவை ஏற்று நாட்டை தொடர்ந்து ஆளப்போகும் பாஜகவுக்கு இமாலய, ராட்சச பலம். மன்றத் தில் உள்ள 542 இடங்களில் 303 இடங்களை அந்தக் கட்சி வென்று உள்ளது.

எதிர்க்கட்சி என்ற சிறப்பு அந்தஸ்தை அடைய எந்த ஒரு கட்சிக்கும் தகுதி இல்லாத நிலையை நாடாளுமன்றம் காண்கிறது. மிக முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி யின் குரல் முன்புபோல் தாழ்ந்து இருக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி புதிய மன்றத்தில் 52 இடங்களையே பெற்றுள்ளது. 

மூன்றில் ஒரு பங்கு இல்லை என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு மன்றத்தில் இப்போது 76 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். 

இச்சாதனைகளுக்கு எல்லாம் சொந்தக் காரர், முன்பு குஜராத் மாநிலத்தின் முதல் வராக இருந்து பிறகு 2014ல் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிதான்.  

இந்தியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனி ஒரு கட்சிக்குத் தலைமை தாங்கி அறுதிப் பெரும்பான்மை பெற்று 2014ல் அரசியல் நிலைப்பாட்டைச் சாதித்தவர் திரு மோடி. அச்சாதனையை இப்போது இன்னும் வலுவாக்கி அவர் சாதனை மேல் சாதனை படைத்து இருக்கிறார்.

திரு மோடி பிரதமரான பிறகு எவ்வளவோ பிரச்சினைகள். பொருளியல் வளர்ச்சி தேக் கம், ஜிஎஸ்டி வரி அறிமுகம், வேலையின்மை விகிதம் அதிகரிப்பு, பண மதிப்பு இழப்பு நட வடிக்கை உள்ளிட்ட ஆயிரமாயிரம் பிரச் சினைகள் நீடித்தாலும், பாஜக அரசாங்கம் கொடுத்த வாக்குகளில் பலவற்றையும் நிறை வேற்றவில்லை என்றாலும் அதே தலைவர் மோடிக்குச் சுமார் 450 மில்லியன் மக்கள் இப்போது வாக்கு அளித்து இருக்கிறார்கள். 

அதிக மக்கள் தொகை கொண்ட, இந்த ஆண்டில் பிரிட்டனை கீழே தள்ளிவிட்டு ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலாக உரு வெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்தி யாவைப் பாதுகாத்து, முன்னேற்றி வழி நடத் திச் செல்வதற்குத் திரு மோடிதான் சரியான வர், அவரை விட்டால் இப்போதைக்கு வேறு ஒருவரும் இல்லை என்று நாடு முழுவதும் வாக்காளர்களில் பாதி பேர் நம்புகிறார்கள். 

இதற்குத் தேசியம், இந்துத்துவா போன்ற பாஜகவின் கொள்கை கோட்பாடுகள் காரணம் என்றாலும் அதற்கு மேலும் அந்த கட்சி கிராமப்புறங்களை, ஏழைகளைக் குறி வைத்து அரங்கேற்றிய பல திட்டங்களும் காரணங்கள் என்று தெரிகிறது. 

இதுவரை மின்சாரத்தைக் கண்டிராத கிராமங்களை ஒளிர வைத்தது, கிராமப் புறங் களில் கழிவறைகள், தொலைத்தொடர்பு வசதிகள், விவசாயிகளுக்கு உதவிப்பணம், மாபெரும் மருத்துவத் திட்டம் போன்றவை, அந்தக் கட்சி அமலாக்கிய பல கசப்பு திட்டங் களால் ஏற்பட்ட பாதிப்புகளை மறக்கச் செய் யும் அளவுக்கு இருந்ததாக அரசியல் கணிப்பு கள், கணக்கீடுகள் காட்டுகின்றன.

இந்தியாவை முன்னேற்ற வேண்டுமானால் முதலில் அரசியல் நிலைப்பாடு தேவை என்று காலகாலமாக தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. 

அந்த அடிப்படை தேவையை அதாவது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்து மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்நாட்டிலும் உலக அளவிலும் பெரும் தலைவராக உயர்ந் திருக்கிறார் திரு மோடி. தேர்தல் வெற்றி பெற்றதும் பேசிய திரு மோடி,  இந்த வெற்றி 21வது நூற்றாண்டு இந்தியாவுக்கு அடிப்படை யானது என்று குறிப்பிட்டார். 

ஜாதிகளும் இதர பல சமூகப் பிரிவுகளும் மலிந்துள்ள இந்தியாவில், இனிமேல்  ஏழை கள் என்றும் ஏழ்மையை ஒழிப்பவர்கள் என் றும் இரண்டே இரண்டு ஜாதிகள்தான் இருக் கும் என்று திரு மோடி சூளுரைத்துள்ளார். 

அனைத்து வகை மக்களும் வாழ்கின்ற, வாக்களிக்க உரிமை பெற்றுள்ள இந்தியாவில் அரசியல் தலைவர் ஒருவர் பெரும்பான்மை யுடன் வெற்றிபெறுவது என்பது மிகச் சிரம மானது. அதுவும்  அப்படிப்பட்ட வெற்றியைத் தொடர்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்னும் கடுமையானது. 

ஆனால் அத்தகைய சாதனையை நிகழ்த்தி இருக்கும் பிரதமர் மோடி, தொடர்ந்து பல துறைகளிலும் நாட்டை முன்னேற்றி, ஏழ் மையை ஒழித்து, அதிக வேலைகளை உரு வாக்கி 21வது நூற்றாண்டு இந்தியாவுக்குச் சொந்தம் என்பதை மெய்ப்பிப்பார்; உள்நாட்டு, வட்டார, உலக அமைதிக்கு உதவுவார் என்று நம்புவோம், எதிர்பார்ப்போம்.