தமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்

சிங்கப்பூர் திறந்த, உலக நாகரீக மையமாக, ஆங்கிலம் அதிகம் புழங்கும் நாடாக இருந் தாலும் சிங்கப்பூர் மக்கள் தங்கள் ஆணி வேரை, பண்பாட்டை, அடையாளத்தை இழக் காமல் இருக்கிறார்கள். அதற்கான முக்கிய காரணங்களில் சிங்கப்பூரின் மொழிக் கொள்கை குறிப்பிடத்தக்க ஒன்று.

குடியேறிகளையும் அவர்களிள் வழி வந்த வர்களையும் கொண்ட நாடாக இருந்தாலும் சிங்கப்பூர் மக்கள், தங்கள் தாய்மொழியைக் கைவிட்டு விடாமல் தங்கள் தொன்மைகளைத் தக்க வைத்துக்கொண்டு உலகம் எவ்வளவோ மாறினாலும் அடையாளத்தை இழக்காமல் அவற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்பவர்களாக உள்ளனர்.

தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கும் சிங் கப்பூரில், மக்கள் தங்கள் தாய்மொழியைக் கற்கவேண்டும் என்பது கட்டாயம். இரு மொழிக் கொள்கை இதற்கு வகை செய்கிறது.

சிங்கப்பூரர்களைப் பன்மொழி ஆற்றல் கொண்டவர்களாகத் திகழச் செய்ய அரசாங் கம் எடுக்கும் முயற்சிகள் பொருளியலுக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் பெரும் அனு கூலத்தை ஏற்படுத்தித் தருகின்றன.

பன்மொழித் திறன் என்பது மற்றவர் களுடன் பொருளியல் தொடர்புகளை ஏற் படுத்திக்கொள்வதில் மிக முக்கிய பங்காற்றி நல்ல பலன்கள் ஏற்பட உதவுகிறது.

சிங்கப்பூரர்களுக்கு உள்ள இந்த அனு கூலம் மேலும் பொருளியல் நன்மைகளை ஏற் படுத்தித் தரக்கூடிய காலம் இப்போது கனிந்து வருகிறது.

தென்கிழக்காசிய நாடுகள் உட்பட, இந்தியா, சீனா போன்ற நாடுகள் கிடுகிடு வென வளர்ச்சி கண்டு வருகின்றன. இதைக் கவனத்தில் கொண்டு ஆசியா, ஐரோப்பிய நாடுகளும் தங்கள் மக்களிடம் பலமொழி ஆற்றலை வளர்க்க முன்னுரிமை அளிக்கின் றன.

இத்தகைய ஒரு சூழலில்தான் சிங்கப்பூர் தனது பன்மொழித் தன்மைக்கு இன்னும் ஊக்கமூட்டி, தன் மக்களில் மேலும் பலர் தாய்மொழியில் ஆழ்ந்த நாட்டத்தை ஏற்படுத் திக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

அடுத்த ஆண்டு முதல் தமிழ்மொழி விருப்பப் பாடத் திட்டம் மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் போதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் அண்மையில் அறி வித்தார்.

இதேபோல, சீன மொழி ஒன்பது பள்ளிகளி லும் மலாய்மொழி மூன்று உயர்நிலைப் பள்ளி களிலும் போதிக்கப்படும்.

இந்த இரண்டாண்டு செயல்திட்டத்தில் தமிழ்மொழியைப் புதுப்புது வழிகளில் கற்க வாய்ப்புகள் இருக்கும். முகாம்களில் கலந்து கொண்டும் நேரடி அனுபவ, ஈடுபாட்டு பய ணங்களை மேற்கொண்டும் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைக் கற்கலாம்.

மொழி விருப்பப் பாடத் திட்டம் 1990ஆம் ஆண்டு முதல் ஒரு சில தொடக்கக் கல்லூரி களில் நடப்பில் இருந்து வருகிறது.

இந்தத் திட்டம் அடுத்த ஆண்டில் தேசிய தொடக்கக் கல்லூரி, ராஃபிள்ஸ் கல்வி நிலையம், ஆண்டர்சன் சிராங்கூன் தொடக் கக் கல்லூரி ஆகியவற்றுக்கு நீட்டிக்கப்படு கிறது.

காலவோட்டத்தில் சிங்கப்பூரில் பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலையில் உயர் தாய்மொழி எடுத்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கள் சகாக்களுக்கு நிகரான மொழி ஆற்ற லுடன் திகழும் தமிழ் மாணவர்களுக்குக் கல்வி அமைச்சு மேலும் ஆதரவு வழங்கப் போகிறது என்றும் அமைச்சர் அறிவித்தார்.

இந்த ஏற்பாடு எல்லாம் சிங்கப்பூரில் தமிழ் மொழிப் புழக்கம் அதிகரித்து அந்த மொழி பொருளியல் ரீதியிலும் முக்கியமானதாகத் திகழ உதவும் என்பதில் ஐயமில்லை.

இருந்தாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்த வாய்ப்புகளைச் செவ் வனே பயன்படுத்திக்கொள்வது மிக முக்கிய மானது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

மாணவர்கள் மதிப்பெண்களில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தாமல் பலவற்றையும் கற்பதில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டு உணர உதவும் நோக்கத்தில், பாதிக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளும் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளும் இடை யாண்டுத் தேர்வுகளை ஓராண்டு முன்னதாக அதாவது அடுத்த ஆண்டிலேயே கைவிட இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருக்

கிறார்.

சிங்கப்பூர் மாணவர்கள் தாய்மொழி உள் ளிட்ட பலமொழித் திறனுடன் பொருளிய லுக்கும் உதவும் அனுகூலத்துடன் திகழ்வதற் கான வழி ஏற்பட இந்த ஏற்பாடும் உறுதுணை யாக இருக்கும் என்று நம்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!