புதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை

தமிழக அரசியல் களம் பெரிதும் மாறி இருக் கிறது. வேகமாக மாறிவருகிறது. திராவிட இயக்கத் தலைவர்கள் இருந்தபோது மக்கள் அவர்களை நாடிச் சென்று வாக்கு அளிக்கும் போக்கு தேர்தல்தோறும் இருந்து வந்தது.

ஆனால் திமுக முன்னாள் பெருந்தலைவர் கருணாநிதி, அதிமுகவின் முன்னாள் இரும் புத் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் மறை வுக்குப் பிறகு மாநிலத்தில் ஒரு புதிய அர சியல் போக்கு தலைதூக்கி இருக்கிறது.

சுமார் அரை நூற்றாண்டுக் காலமாக திரா விட ஆட்சியே நடந்துவரும் அந்த மாநிலத் தில், கட்சித் தலைவரை மையமாக வைத்தே இதுநாள்வரை அரசியலில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது.

கருணாநிதி அல்லது ஜெயலலிதா ஆகிய இருவர்தான் கடந்த 30 ஆண்டுக் காலமாக மாறிமாறி ஆட்சி நடத்தி வந்திருக்கிறார்கள்.

கொள்கை கோட்பாடுகளைப் புறம் தள்ளி விட்டு இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலேயே வாக்காளர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.

வாக்காளர்கள் இப்படி இருந்த காரணத் தால் தனிநபர் துதிபாடிகள் எண்ணிக்கை கிடுகிடுவென பெருகியது.

அரசியல் தனிநபரை மையமாக வைத்து நடக்காமல் இருந்திருந்தால், அந்த மாநிலம் இன்னும் ஏராளமான முன்னேற்றங்களைக் கண்டு இருக்கும் என்பதே பலரின் கருத்து.

இப்போது கருணாநிதி, ஜெயலலிதா இரு வரின் மறைவுக்குப் பிறகு அரசியல்வாதி

களை மக்கள் நாடிச் சென்ற காலம் போய் அரசியல் வாதிகள் மக்களை நாடி வரவேண் டிய நேரம் வந்திருப்பதாகத் தெரிகிறது.

தங்களை நாடிவந்து தங்களுக்குச் செவி சாய்த்து, நாட்டு நலனையும் வீட்டு நலனையும் கருத்திற்கொண்டு செயல்படும் அரசியல் தலைவர்களைத்தான் மக்கள் இனி ஆதரிப் பாளர்கள் என்பதற்கான அறிகுறி தெளிவாகத் தெரிகிறது.

மக்களைத் தேடிச் செல்லும் அரசியல்வாதி கள்தான் தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியும் என்ற ஒரு நிலை ஏற்பட்டு வருவதால் அரசியல் அரங்கில் புதிய திருப்பங்கள் ஏற் படப்போவதாகக் கணிக்கப்படுகிறது.

ஆகையால், புதிய சூழலுக்கு ஏற்ப அர சியல்வாதிகள் மாறிக்கொள்ளவேண்டும் என் பது அவசியமாகிவிட்டது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் இரண்டிலும் குறிப்பிடத்தக்க வெற்றி களைப் பெற்று அதன் மூலம் மாநிலத்தில் இம்மாற்றத்தை தான் ஏற்படுத்தி இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார்.

அதேவேளையில், நாடாளுமன்றத் தேர்த லில் பெரும் தோல்வி அடைந்தாலும் சட்ட மன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு இருக்கும் அதிமுகவில் விரிசல் போக்கு தலைதூக்கி இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் தடவையாக மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்குப் பிரதி நிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டு இருக் கிறது. அதிமுக கட்சிக்குள் நிலவும் பூசலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கட்சிப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, தமிழ் நாட்டில் பல இடங்களிலும் கடுமையான குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதால் அதிமுக ஆட்சிக்கு இது மிகவும் சோதனை காலம் என்றே கூற வேண்டும்.

இச்சூழலில் உள்ளாட்சித் தேர்தல் வேறு வருகிறது. மாநில கட்சிகள் நிலைமை இப்படி எனில், தமிழகத்தில் அறவே ஆதரவு இல்லாத தேசிய கட்சிகளில் ஒன்றான பாஜக, தமிழ் நாட்டில் தன் எதிர்காலத்தை மனதில் வைத்து இரண்டுவித அணுகுமுறைகளைக் கையாளக் கூடும் என்பது அனுமானம்.

சிறையில் இருக்கும் சசிகலாவை சாந்தப் படுத்தி, அதிமுகவைப் பலப்படுத்தி அதன் ஆதரவுடன் அரசியல் நடத்துவது ஓர் உத்தி.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை வைத்து அரசியல் காய்களை நகர்த்துவது மற்றொன்று.

அண்மைய தேர்தலை அடுத்து காங்கிரஸ் மறுபடியும் எடுபிடி நிலைக்குப் போய்விட்டது.

தமிழகத்தின் புதிய அரசியல் சூழலில் திரைப்பட நடிகர்களுக்கு எந்த அளவுக்குச் செல்வாக்கு இருக்கும் என்பதை, அவர் களின் திரைப்படச் செல்வாக்கை வைத்து தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் தமிழ்நாட்டின் அரசியல் புதிய பரிணாமம் பெறுகிறது. வாக்காளர்கள் மாறி இருக்கிறார்கள்.

அதேபோல் அரசியல்வாதிகளும் மாறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருதரப்பினரின் மாற்றம், அந்த மாநிலத் திற்கு இன்னும் நன்மைபயக்கும் வகையில் புதிய பாதைகளை நிர்ணயிக்கும் என்று நம்புவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!