ஒன்றிணைந்து சிங்கப்பூரை வளப்படுத்துவோம்

சிங்கப்பூரர்களுக்காகப் பாடுபடுவது என்ற அணுகுமுறையில் இருந்து சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து பாடுபடுவது என்ற அணுகுமுறையை நான்காம் தலை முறை கைக்கொள்ளும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் ஜூன் 15ஆம் தேதி கோடிகாட்டினார்.

சிங்கப்பூரருக்காக என்ற நிலை மாறி சிங்கப்பூரர்களுடன் என்ற நிலை இதற்கு என்ன பொருள்? முந்தைய தலைமுறைகளின் அணுகுமுறையில் இருந்து மாறவேண்டிய தேவை ஏன்?

இப்போது நம்முடைய சமூகம் மிகவும் பன்மயமானதாக மாறி இருக்கிறது. வெவ்வேறான பிரிவினரிடையே வெவ்வே றான தேவைகளும் எண்ணங்களும் இருக்கின்றன. பல குழுக்களிடையே நாட்டங்கள் வேறுபடலாம். சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கான தலைசிறந்த அணுகுமுறை எது என்பதன் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

இத்தகைய சவால்களைக் கொண்டு உள்ள, காட்டு வளம் அல்லது பாரம்பரிய பழமை பாதுகாப்பு போன்ற சில எடுத் துக்காட்டுகளை நாம் சந்தித்து இருக் கிறோம்.

பல யோசனைகளையும் விவாதிப்பது என்பது ஒரு சமூகத்திற்கு நல்லது. என் றாலும் அது அளவைத் தாண்டும்போது நம்மைப் பிளவுபடுத்திவிடும். உலகம் முழுவதும் பார்க்கையில் சமூகங்கள் சிதறிவருகின்றன. சிங்கப்பூர் இந்த ஆபத்தை தவிர்த்துக்கொள்ளும் வகை யில் தடுப்பாற்றல் கொண்ட நாடு அல்ல. ஆகையால் நாம் நம்முடைய ஐக்கியத் தைக் கட்டிக்காக்க வேண்டியதும் ஒன் றாகச் சேர்ந்து பாடுபட வேண்டியதும் முக்கியமானது.

இப்படி நாம் செயல்பட்டால் நம்முடைய பன்பயம் நமக்குப் பலமாகிவிடும். நாம் இப்போது எதிர்நோக்கும் சவால்களில் பலவும் சிக்கலானவை, பலவித தன்மை கொண்டவை என்பதால் இந்த முயற்சி கள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின் றன.

அரசாங்கத்திடமே இதற்கான எல்லா பதிலும் இருக்காது. அரசுக்கு ஒட்டு மொத்த பலம் தேவை. எல்லா சிங்கப் பூரர்களின் வெவ்வேறான ஆற்றல்களை எல்லாம் ஒன்றுசேர்த்துதான் நாம் இந்தச் சவால்களைக் கடந்து செல்லவேண்டும்.

இந்தச் சமூக நெருக்கடிகளை, சிங்கப்பூரர்களுடன் பங்காளித்துவ உறவை ஏற்படுத்திக்கொண்டு அவர் களுடன் சேர்ந்து பாடுபட்டு எப்படி சமா ளிக்கப் போகிறோம்?

முதலாவதாக, அரசாங்கம் சிங்கப்பூரர் களுடன் பங்காளித்துவ உறவை ஏற்படுத் திக்கொண்டு கொள்கைகளை வடிவ மைத்து அவற்றை நடப்புக்குக் கொண்டு வரும். இரண்டாவதாக, இன்னும் பறந்த அளவில் அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து செயல்பட்டு பொதுவான ஓர் எதிர்காலத்தை உருவாக்கும். அத்தகைய எதிர்காலத்தில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கும்.

அப்லிஃப்ட்: சமூகத்துடன் சேர்ந்து வசதி குறைந்த மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பது

இது எப்படி இருக்கும் என்பதை ஓர் உதாரணத்துடன் விளக்குகிறேன். கல் விக்கான இரண்டாவது அமைச்சர் என்ற முறையில், ‘அப்லிஃப்ட்’ எனும் ‘வாழ் வில் மாணவர்களை முன்னேற்றும் மற்றும் குடும்பங்களுக்கு ஊக்கமூட்டும் சிறப்பு பணிக்குழு’ என்ற குழுவுக்கு நான் தலைமை ஏற்கிறேன்.

இந்தக் குழு, பல அமைப்புகளை உள்ளடக்கிய, கல்வி அமைச்சின் தலைமை யிலான சிறப்புப் பணிக்குழு. வசதி குறைந்த மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உரிய ஆதரவைப் பலப்படுத்துவது குழுவின் நோக்கம்.

வசதி குறைந்த குடும்பங்களைப் பற்றியும் அந்தக் குடும்பங்கள் எதிர் நோக்கும் சவால்களைப் பற்றியும் அரசாங்க அமைப்புகள் ஓரளவுக்குத்தான் புரிந்துகொள்ள முடியும் என்பதால் முன் னணி சமூக ஊழியர்கள், போதனையா ளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் கருத்துகளைத் தீவிரமாக நாம் நாடு கிறோம்.

இந்த ஈடுபாட்டின் வழியாக எனது ‘அப்லிஃப்ட்’ சிறப்புப் பணிக்குழு ஒரு மித்த கவனம் செலுத்த வேண்டிய பல துறைகளை அடையாளம் கண்டு இருக் கிறது.

எடுத்துக்காட்டாக, மாணவர்களுக்குப் பள்ளிக்கூடத்துக்குப் பிந்தைய பராமரிப் பையும் ஆதரவையும் பலப்படுத்த வேண் டும். மாணவர்களின் மனநிலை மற்றும் உணர்ச்சி நிலைகளில் மீட்சித்தன்மையைப் பலப்படுத்த வேண்டும்.

நடைமுறைக்கு உகந்த உதவிகளை அளித்து படிப்பைப் பாதியில் கைவிடாமல் மாணவர்களைக் கல்வி கற்கச் செய்ய வேண்டும். வசதி குறைந்த குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பேணி வளர்க்க ஆதரவு அளிக்க வேண்டும். இதை எல்லாம் எனது குழு அடையாளம் கண்டு இருக்கிறது.

பிரச்சினைகளையும் உத்திகளையும் துல்லியமாக வரையறுப்பதில் இவை மிக முக்கியமானவை என்பது ஒருபுறம் இருக்க, இத்தகைய உத்திகளைச் செயல் படுத்துவதில் ஈடுபாடுகொள்வதற்காகப் பங்காளிகளை நாங்கள் தேடி வருகிறோம். சிறப்பு பணிக்குழு ஒருமித்த கவனம் செலுத்தப்போகும் துறைகளைப் பற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் அறிவித்தேன்.

அதனைத் தொடர்ந்து, கருணைமிகு பங்காளிகளும் நல்லெண்ணம் படைத்த தனிப்பட்டவர்களும் முன்வந்து தங்க ளுடைய யோசனைகளை, நேரத்தை, ஆற்றலை வழங்கி உதவ விரும்புவதைக் காண்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘அப்லிஃப்ட்’ சிறப்புப் பணிக்குழுவின் ஆதாரப் பங்காளிகளில் சிண்டா எனப் படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் ஒன்று. பலரையும் எட்டுவதற்கும் தொண்டூழியம் புரிவதற்கும் சிண்டாவிடம் ஆற்றல்மிகு கட்டமைப்பு இருக்கிறது.

இவற்றின் வழியாக ‘அப்லிஃப்ட்’ சிறப்புப் பணிக்குழு, இந்திய மாணவர் களையும் குடும்பத்தாரையும் செம்மையாக எட்ட முடிகிறது. கலாசார ரீதியில் உணர் வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடிகிறது.

துணைப்பாடம், இளையர்களுக்கு வழிகாட்டுவது, குடும்பச்சேவைகள் ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவது மட்டு மின்றி ஆக்ககரமான முன்மாதிரிகளை

யும் சிண்டா நிர்ணயிக்கிறது. அத்தகைய முன்மாதிரிகள் சிறார்களிடத்திலும் குடும்பங்களிடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

பங்காளித்துவம்- ஒரு தலைமுறையின் பணி

‘அப்லிஃப்ட்’ சிறப்புப் பணிக்குழுவில் எங்களுடைய பணி ஓர் எடுத்துக்காட்டு தான். ஆனால் பங்களித்துவ உறவு களைப் பலப்படுத்தி கட்டிக்காப்பது என் பது ஒரு தலைமுறையின் பணி. அடுத்த தலைமுறைத் தலைவர்கள் என்ற முறையில் நாங்கள் உங்களுக்காகப் பாடுபட்டு சிங்கப்பூரை முன்னேற்றுவ தோடு நின்று விடாமல் உங்களுக்காக நாங்கள் உங்களுடன் சேர்ந்து பாடுபடு வோம். இதுவே எங்கள் தலைமைத்துவத் தின் திட்டவட்டமான அடையாளம்.

இந்த அணுகுமுறையை நாங்கள் கடைபிடிக்கப்போவதால், ஆளுமைப் பணியையும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற முயற்சிகளையும் மக்களி டமே அரசாங்கம் விட்டுவிடும் என்று பொருள்படாது. சிங்கப்பூரை முன்னேற்று வதற்கான வழிகளை நிர்ணயிப்பதில் அரசாங்கமே முன்னணிப் பங்கைத் தொடர்ந்து வகிக்கும்.

இருந்தாலும் பங்காளித்துவ உறவுக் கும் அடிப்படை ரீதியில் தீர்வுகளைக் காண்பதற்கும் உரிய வாய்ப்புகளை நாம் உருவாக்குவோம். எடுத்துக்காட்டாக நம் முடைய பொதுச் சேவை ஒரு சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாகி அந்தச் சேவையின் யோசனைகள், கருத்து களைவிட சிறப்பான கருத்துகள் இருந் தால் அவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும்.

இதற்கு நம்முடன் ஏற்பு இல்லாத சிங்கப்பூரர்களையும், அவர்கள் பிரி வினைவாத போக்குகளைக் கைக்கொள் ளாத வரையில் அவர்களையும் தொடர்ந்து ஈடுபடுத்தி வரவேண்டும் என்பதும் பொருளாகும். கருத்து வேறு பாடு வரும்போது சிங்கப் பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நன்மை பயக்கின்ற ஆக்ககரமான தீர்வுகளை நாம் வரவேற் கின்றோம்.

நான்காம் தலைமுறையைச் சேர்ந்த என்னுடைய சகாக்கள், அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூரர்களுடன் பங் காளித்துவ உறவை ஏற்படுத்திக் கொள் வதற்கான தங்கள் அமைச்சுகளின் சொந்த திட்டங்களைப் பகிர்ந்துகொள் வார்கள்.

சிங்கப்பூரை நிறுவிய தலைவர்களில் ஒருவரான திரு எஸ் ராஜரத்தினம் சிங்கப்பூரில் ‘பொது உணர்வு ஜன நாயகம்’ மலர வேண்டும் என்று குரல் கொடுத்தார். அத்தகைய ஒரு ஜன நாயகத்தில் மக்கள் தங்களுடைய சக குடிமக்கள் மீது அக்கறைகொண்டு, ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டு எல்லா ருக்கும் இன்னும் சிறந்த நாட்டை உரு வாக்குவார்கள். அத்தகைய ஒரு சிங் கப்பூருக்கு நாம் உருகொடுப்போம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!