தண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்

இந்தியாவின் சென்னை மாநகர் எதிர்நோக்கும் வறட்சி நிலை, ஆசியா எதிர்நோக்கும் தண்ணீர் மிரட்டல்களில் ஆகப் புதியது.

பேங்காக்கில் இந்த ஆண்டு பிற்பகுதியில் நடக்கும் கிழக்கு ஆசியா உச்சநிலை மாநாட் டின் நிகழ்ச்சி நிரலில் தண்ணீர் பிரச்சினை ஓர் அங்கமாக இருக்கவேண்டும்.

சென்னை சில வார காலமாக கடும் தண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்குகிறது. அந்த நகருக்குத் தண்ணீர் வழங்கும் மாநகராட்சி நிர்வாகம், ஜூன் 1 முதல் நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 525 மில்லியன் லிட்டர் தண்ணீரையே வழங்கி வருகிறது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அந்த நகர் வறட்சியை எதிர்நோக்குவதாக சென்ற மாதம் எனது சகாவான நிர்மலா கணபதி தெரிவித்து இருந்தார்.

சென்னைக்கு நீர் வழங்கும் நான்கு ஏரிகள் வறண்டுவிட்டன. பருவமழையும் பொய்த்து விட்டது. தொடர்ந்து 200 நாட்களாக மழை இல்லை. நினைவுக்கு எட்டிய வரையில் கடந்த ஜூன் மாதத்தைப் போன்ற வறட்சிமிக்க மாதம் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

இந்தியாவில் இப்படி வறட்சி வருவதும் போவதும் வழமைதான் என்று நாம் நினைக்கக் கூடும். ஆனால் ‘அங்குதானே இந்த நிலவரம், இங்கில்லையே’ என்ற கண்ணோட்டம் முட்டாள்தனமானதாகவே இருக்கும்.

வறட்சி நிலை நம்மையும் நெருங்கி வருகிறது. 10 ஆண்டு காலம் காணாத படுமோசமான தண்ணீர் நெருக்கடியை மணிலா நகரம் இந்த ஆண்டு சந்தித்தது. நாள் ஒன்றுக்கு 140 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை அங்கு நிலவியது.

ஜகார்த்தாவில் தண்ணீரும் இதர சுற்றுச் சூழல் பிரச்சினைகளும் பெரிய அளவில் தலையெடுக்கின்றன. ஜகார்த்தாவில் நிலத் தடி நீர் குறைந்து வருவது பற்றி பிபிசி சென்ற ஆண்டு விளக்கியது.

உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினர் ஆசியாவில் வசிக்கிறார்கள். என்றாலும் தலைக்கணக்கு அடிப்படையில் பார்க்கையில் மற்ற கண்டங் களைவிட ஆசியாவில் குடிநீர் வளம் குறைவு என்று பேராசிரியர் பிரம்மா செலானி தெரிவிக் கிறார்.

ஆசிய தண்ணீர் மற்றும் பாதுகாப்புப் பிரச் சினைகளுடன் தன்னை பெரிதும் இணைத் துக்கொண்ட உத்திபூர்வ விவகாரத் துறை வல்லுநராக இருக்கும் இவர், ஆசியாவின் வருடாந்திர தண்ணீர் வளம் ஒருவருக்கு 2,697 கன மீட்டராக இருக்கிறது என்பதைச் சுட்டுகிறார்.

இந்த வளத்தின் உலக சராசரி அளவு 5,829 கனமீட்டர். பொருளியல் ரீதியில் தலை யெடுக்கத் தொடங்கியது முதல் ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகளில் இருந்து நன்னீரை ஆக அதிகமாக எடுத்து பயன்படுத்தும் வட்டாரங்களில் ஆசியாவே முதன்மையில் இருக்கிறது. இந்த வட்டாரத்தின் நன்னீர் பயனீடு, அதனை ஈடுசெய்யும் அளவைவிட அதிகமாக இருக்கிறது.

அதோடு மட்டுமின்றி, தண்ணீர் வளம் குறைந்து வருவதற்கு முற்றுப்புள்ளி விழும் என்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க, குளங்களும் குட்டைகளும் இதர நீர்நிலைகளும் கட்டுமானப் பணிகளுக்காக இருந்த இடம் தெரியாமல் மறைந்து வருவதும் சீராக இடைவிடாமல் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், அதிக கிராமப்புற மக்களைக் கொண்ட நாடுகளில் எப்படியாவது வாக்கு களைப் பெறவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் அரசியல்வாதிகள், நீர்பாசனத்திற்காக மானியங்களை வழங்கி பிரச்சினைகளை இன்னும் கடுமையாக்குகிறார்கள்.

இந்தியாவில் ஜூன் மாதம் 30ஆம் தேதி வானொலியில் பேசிய அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தண்ணீரைச் சேமிக்க பிரம் மாண்டமான இயக்கத்தை மக்கள் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் பெரும் நகர்களில் நிலத்தடி நீர் அடுத்த ஆண்டு இல்லாமலேயே போய் விடும் என்று அரசாங்கத்தின் கொள்கை ஆலோசனைக் குழுமம் தெரிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டே இது நடக்கப் போகிறது.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் தண்ணீர் தேவை அதன் வளத்தைப்போல இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்றும் ‘நிதி ஆயோக்’ என்ற அந்த அமைப்பு முன்னுரைத்து இருக்கிறது.

ஆசியாவைப் பொறுத்தவரையில் தண்ணீர் பிரச்சினைகள் என்பவை எல்லை கடந்த தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையில் தண்ணீர்ப் பிரச்சினைகள் நிலவுகின்றன.

இதுவரையில் ஆசியாவில் நாம் எல்லை பிரச்சினைகளிலேயே அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறோம். தண்ணீர் பற்றாக்குறை மிரட்டலை நீண்டகாலமாக கண்டுகொள்ளா மலேயே இருந்து வருகிறோம்.

பொதுவான இந்தச் சவாலை ஆசியா கையாள இப்போது காலம் கனிந்து இருக் கிறது. ஆசிய நாட்டவர்களைப் பொறுத்தவரை யில் தண்ணீர்ப் பிரச்சினைகளை முக்கிய பிரச்சினைகளாகக் கருதவேண்டிய அளவுக்கு நிலவரம் முற்றி இருக்கிறது.

ஐநா பொது பேரவை 1997ல் ஏற்றுக்கொண்ட ஓர் உடன்பாடு 2014ல் நடப்புக்கு வந்தது.

‘ஐநா எல்லை கடந்த நன்னீரோட்டப் பயன் பாட்டுச் சட்ட உடன்பாடு’ என்ற அந்த உடன் பாட்டில் இருந்து தொடங்குவது சிறந்ததாக இருக்கும். இதேபோன்ற சவால்களை எதிர் நோக்கும் இதர வட்டாரங்களில் இருந்து பல வற்றையும் கற்றுக்கொண்டு நன்மை அடை யலாம் என்றாலும் ஆசியா தனக்கே உரிய பிரச்சினைகளில் ஒருமித்த கவனத்தை அதிகமாகச் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இந்தத் தண்ணீர் பிரச்சினையைக் கிளப்ப இந்த ஆண்டு பிற்பகுதியில் பேங்காக்கில் நடக்கும் கிழக்கு ஆசியா உச்சநிலை மாநாடு நல்ல ஒரு வாய்ப்பு. இந்தோ-பசிபிக் 'கண்ணோட்டத்தின்' ஓர் அங்கமாக இந்தச் சவாலை ஏன் நிர்ணயிக்கக்கூடாது?

ரவி வேலூர், இணை ஆசிரியர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!