மாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி

கல்வி அமைச்சு அண்மையில் தொடக்கப்பள்ளி இறுதித்தேர்வு மதிப்பெண் முறை பற்றிய சில புதிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டது.

பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்களில் அளவுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துவதைத் தவிர்த்து அந்த அணுகுமுறையில் இருந்து மாறுவதற்கான பரவலான முயற்சிகளின் ஒரு பகுதியாக 2021ல் புதிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன.

இந்த மாற்றங்களை மக்கள் புரிந்துகொள்ள காலம் எடுக்கும். அடிப்படைநிலை பாடங்களின் மதிப்பெண்கள், உயர்நிலைப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைப்பதை எப்படி பாதிக்கும் என்பதன் தொடர்பில் சில பெற்றோர்கள் கவலைப்படுவதாகத் தெரிகிறது.

அடிப்படை நிலை பாடங்களை அமல்படுத்தி மாணவர்கள் எப்படி மதிப்பிடப்படுவார்கள் என்பதன் தொடர்பிலான நியாயங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பெற்றோர்களின் கவலையை அகற்றலாம் என்று நம்புகிறோம்.

தொடக்கப் பள்ளிகளில் பொதுநிலை பாடத்திட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பயில்கிறார்கள். மாணவர்கள் பரந்த அடிப்படையில் எந்த அளவுக்குப் பாடங்களைப் புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை மதிப்பிட தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வுகள் (பிஎஸ்எல்இ) போன்ற தேர்வுகள் பயன்படுகின்றன.

புதிய அடைவு நிலை (AL) முறையின் கீழ் அடைவு நிலை 1 முதல் 8 வரைப்பட்ட நிலைகள் மாணவர்களின் புரிந்துணர்வு எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பிரதிநிதிக்கும்.

ஒரு மாணவரின் புரிந்துணர்வு நிலையைத் தீர்மானிப்பதை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கையில், அடிப்படை நிலை பாடங்கள் நமக்குத் தேவையில்லை.

ஆனாலும் குறிப்பாக சில பாடங்களில் பலவீனமாக இருக்கக்கூடிய மாணவர்கள் இருக்கிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவர்களுக்குத் தனிச்சிறப்பு கவனிப்புகள் கொடுக்கப்பட்டாலும் பொதுநிலை பாடத்திட்டம் இவர்களுக்குச் சிரமமாகவே இருக்கிறது. ஊக்கம் குறைந்துவிடுகிறார்கள்.

ஒரே மாதிரியான பாடத்திட்டம் எல்லாருக்கும் பொருந்தும் என்ற ஏற்பாடு கல்வியைப் பொறுத்தவரையில் பலன்தராது என்பதை நாம் அங்கீகரித்து இருக்கிறோம்.

ஆகையால் நம் மாணவர்களின் கற்றல் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. இதுவே பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறையின் (SBB) கோட்பாடு.

இந்த ஏற்பாட்டின்படி வெவ்வேறு சிரமமான நிலைகளைக் கொண்ட பாடங்களை நாம் போதிக்கிறோம். மாணவர்கள் தங்கள் கற்றல் மற்றும் தேவைக்கேற்ற நிலையில் பாடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நீக்குப்போக்கு இந்த முறையில் இருக்கிறது.

தொடக்கப் பள்ளி 5 மற்றும் 6ஆம் வகுப்பில் அடிப்படை நிலை பாடங்களைப் போதிக்கிறோம். தொடர்ந்து கற்கவேண்டும் என்ற மனநாட்டத்தை மாணவர்களிடையே இந்தப் பாடங்கள் நிலைபெறச் செய்கின்றன. இதுவே அடிப்படை பாடங்களின் முக்கியமான நோக்கமாகும். பிஎஸ்எல்இ தேர்வில் அடிப்படை நிலை பாடங்களில் மாணவர்கள் தலைசிறந்து திகழவேண்டும் என்பதும் முக்கியமானது.

அடிப்படை நிலை பாட மதிப்பெண்கள் கைகொள்ளப்படுகின்ற முறை, இப்போதைய டி-ஸ்ேகார் முறையையும் ஏஎல் முறையையும் ஒத்தது. தரநிலையில் அமையப்பெற்ற ஏஎல் மதிப்பெண் முறையின் கீழ், ஒவ்வொரு ஏஎல் முறை மதிப்பெண்ணும் பிஎஸ்எல்இ மொத்த மதிப்பெண்ணுக்கு எப்படி வழிவகுத்தது என்பது தெளிவாக இருக்கும்.

மாணவர்கள் பெறுகின்ற தரங்கள், அவர் களின் முயற்சியைப் பிரதிபலிக்குமா என்ற கேள்விகள் எழும். மாணவர்கள் பெறும் தரங்கள் ஒரு மாணவரின் புரிந்துணர்வு நிலையைப் பிரதிபலிக்கத்தான் வேண்டும். அடிப்படை நிலை பாடங்களுக்கான மூன்று தர வேறுபாடு போதுமானதாக இருக்கிறது. இந்தப் பாடங்கள் அடிப்படை கோட்பாடுகளை உள்ளடக்கி இருப்பதே காரணம்.

அடிப்படை நிலை பாடங்களுக்கான தேவைகள் மற்றும் பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், ஏஎல் முறையில் 'ஏ' தரம் பெறும் ஒரு மாணவர், பொதுநிலை பாடத்திட்ட ஏற்பாட்டின் கீழ் ஏஎல்6 தரத்தைப் பெறும் மாணவருக்கு ஒப்பான புரிந்துணர்வு நிலையைக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவரும்.

இப்படி இருக்கையில், அடிப்படை நிலை பாடங்களை இன்னும் கொஞ்சம் கடினமாக்கினால் என்ன என்று கேட்கக்கூடும்.

நமது அடிப்படைநிலை மாணவர்கள் பாடத்தைக் கற்றுக்கொண்டுவிட முடியும், அந்த ஆற்றல் அவர்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதே முக்கிய நோக்கம். ஆகையால் பாடத்திட்டத்தையும் மதிப்பீட்டு முறையையும் நாம் கவனமாக நிர்வகிக்க வேண்டி இருக்கிறது.

அதேநேரத்தில், படிப்பில் மேம்பட்டு பின்னர் கடினமான பாடங்களை எடுத்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்றவாறு கல்வி முறையில் நீக்குப்போக்கையும் வாய்ப்புகளையும் நாம் நிலைநாட்டி வருகிறோம்.

ஒவ்வொரு தரத்தையும் தீர்மானிக்கக்கூடிய மதிப்பெண்கள் ஒரே மாதிரியாக ஏன் இல்லை என்ற கேள்வியும் எழுவதுண்டு. பாடத்திட்டமும் தேர்வுகளும் வடிவமைக்கப்படுகின்ற முறையே இதற்குக் காரணம்.

பிள்ளையின் கல்விப் பயணத்தில் பல சோதனைக் கட்டங்களில் பிஎஸ்எல்இ என்பது ஒன்றே ஒன்றுதான். அடிப்படை நிலை பாடத்தை எடுத்து படித்த பிறகு கூட மாணவர்கள் விரைவு நிலைக்கு முன்னேறலாம்.

இன்னும் மேலாக, இன்றைய நிலையில் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறை (எஸ்பிபி) ஏற்பாடு இருக்கிறது. இந்த முறைப்படி மாணவர்கள் தங்கள் ஆற்றலுக்கு ஏற்ப சிரமமான பாடங்களை எடுத்து படிக்கலாம்.

அதோடு, 2024ல் முழு எஸ்பிபி அறிமுமாகும். இது இப்போதைய தரம் பிரிப்பு கோட்பாடிலிருந்து நாம் மேலும் விலகிச் செல்வதை உறுதிப்படுத்தும். புதிய ஏற்பாட்டின்படி மாணவர் ஒவ்வொருவரின் கற்றல் தேவைகளில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும். இதுவே நம்முடைய கல்வி முறையில் மிக முக்கியமானதாகும்.

உலகம் வேகமாக மாறி வருகிறது. நம் பிள்ளைகள் வளரும்போது அவர்களுக்கான எதிர்பார்ப்பு மிகவும் வேறுபட்டதாக இருக்கும். ஆகையால் ஏட்டுக்கல்வி மதிப்பெண்களில் அளவுக்கு அதிக முக்கியத்துவத்தைச் செலுத்தக்கூடிய ஒரு முறையில் இருந்து மாறி நம் மாணவர்கள் ஆயுள் முழுவதும் கற்பதற்கு உதவும் ஒரு முறையில் நாம் ஒருமித்த கவனத்தைச் செலுத்தவேண்டும்.

இதைப் பொறுத்தவரையில், பிஎஸ்எல்இ முறைக்கான இந்த மாற்றங்கள் எல்லாம் இத்தகைய விவாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தேர்வு மதிப்பெண்கள் தொடர்பிலான கவலையில் இருந்து நம்முடைய சமூகம் விலகிச்செல்ல வேண்டும் என்பது முற்றிலும் முக்கியமானது என்பதே இதற்கான காரணம்.

திரு வோங் சியூ ஹூங்

கல்வித்துறை தலைமை இயக்குநர்

கல்வி அமைச்சு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!