முரசொலி: தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுத் தேர்தல்

ஹான் யோங் மே, ஆசி­ரி­யர், எஸ்­பி­எச் சீன மொழிச் செய்திக் குழுமம்

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு சென்ற ஆகஸ்ட்­டில் அமைந்­தது முதலே அர­சி­ய­லில் அக்­க­றை கொண்ட நண்­பர்­கள் அடுத்­த பொதுத் தேர்­தல் எப்­போது என்­பது பற்றி விவா­தித்து வரு­கி­றார்­கள்.

இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் கொரோனா கிருமித்தொற்று தலைக்­காட்­டி­யதை அடுத்து கவ­னம் கொஞ்­சம் மாறி­யது.

கிருமித்தொற்றை எப்­ப­டி சமா­ளிப்­பது, அது எப்­ப­டி­யெல்­லாம் பாதிக்­கும், நிறு­வ­னங்­கள் அந்­தச் சவா­லைச் சமா­ளித்து எப்­படி மீண்டு வரும் என்­ப­தில் மக்­கள் இப்­போது அதிக அக்­க­றைக் காட்­டு­கி­றார்­கள்.

இப்­ப­டிப்­பட்ட ஒரு நேரத்­தில் பொதுத் தேர்­தல் நடக்­காது என்று பெரும்­பா­லான மக்­கள் நினைத்­தி­ருந்­த­போது, திடீ­ரென தேர்தல் தொகுதி எல்லைகள் குறித்த மறுஆய்வுக் குழு அறிக்கை வெளி­யாகி இருக்­கிறது. கொரோனா கிருமித்தொற்று பற்றி பர­ப­ரப்­பாக செய்தி வெளி­யிட்டு வந்த செய்தி­யா­ளர்­க­ளுக்­குக்கூட இது வியப்­பா­கி­யது.

விரை­வில் பொதுத் தேர்­தல் நடப்­ப­தற்­கான வாய்ப்பு பற்றி செய்­தி­யா­ளர்­கள் தீவி­ர­மாக யோசிக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது.

திரு லீ சியன் லூங் 2004ல் பிர­த­ம­ராக அறி­விக்­கப்­பட்­ட­தற்­குப் பிறகு நடந்த மூன்று பொதுத் தேர்­தல்­க­ளை­யும் திரு கோ சோக் டோங் பிர­த­ம­ராக இருந்தபோது நடத்­தப்­பட்ட பொதுத் தேர்­த­லை­யும் பார்க்­கை­யில் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கை வெளி யான­தற்­குப் பிறகு கொஞ்ச காலத்­தி­லேயே பொதுத் தேர்­தல் நடந்­தப்­பட்டு வந்­தி­ருப்­பது தெரி­கிறது.

இதை அடிப்­ப­டை­யாக வைத்­துப் பார்க்­கை­யில், இன்­னும் சில வாரங்­களில் பொதுத் தேர்­தல் நடக்­கக்­கூ­டிய வாய்ப்பு தெரி­கிறது.

இந்­நி­லை­யில், கோவிட்-19ன் ஆகப் புதிய நில­வ­ரங்­க­ளைப் பார்த்­தால் அதைக் கட்­டுப்­ப­டுத்­தி­விட முடி­யும் என்றே தெரி­கிறது.

ஐரோப்­பா­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் கொரோனா கிருமித்தொற்றின் தாக்­கம் தொடக்க கட்­டங்­க­ளி­லேயே இருக்­கின்­றன. சிங்­கப்­பூர் தனது குடி­நு­ழை­வுக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ர­மாக மும்­மு­ரப்­ப­டுத்தி உள்­ளது.

இந்த நட­வ­டிக்­கை­கள் எல்­லாம் பலன் தரு­மா­னால் இன்­னும் இரண்டு வார காலத்­தில் வெளி­யில் இருந்து சிங்­கப்­பூ­ருக்­குள் கொரோனா நுழை­வது குறைந்­து­வி­டும். சிங்­கப்­பூ­ரில் சமூ­கப் பர­வ­லாக கொரோனா உரு­வெ­டுக்­க­வில்லை என்­றால் இன்­னும் ஒன்று அல்­லது இரண்டு வாரங்­களில் ஆங்­காங்கே கிரு­மித்தொற்­று­களும் மங்­கி­வி­டும்.

அர­சாங்­கம் கொரோ­னா­ கிருமித்தொற்றைக் கட்­டுப்­ப­டுத்த இப்­போது எடுத்­து­வ­ரும் பல முயற்­சி­களின் கார­ண­மாக அந்­தக் கிரு­மி­கள் முற்­றாக அழிந்­து­வி­டாது என்­றா­லும் இன்­னும் ஒரு மாத காலத்­தில் கொரோனா கிருமித்தொற்று ஒடுங்­கி­வி­டும் என்­ப­தற்கு அதிக வாய்ப்­பு­கள் தெரி­கின்­றன.

ஓராண்டு காலத்­திற்­குள் இந்த உல­கக் கிரு­மித்­தொற்­றுக்கு முடி­வு­கட்­டு­வது இய­லா­தது என்­னும் பட்­சத்­தில், அர­ச­மைப்­புச் சட்­டப்­படி அதற்­கான காலக்­கெ­டு­வான 2021 ஏப்­ரல் வரை ஒத்­தி­வைக்­கா­மல், கிரு­மி­கள் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் கால­கட்­டத்­தி­லேயே பொதுத் தேர்­தலை நடத்­து­வதே சிறந்­த­தாக இருக்­கும்.

கிரு­மித்­தொற்­றுக்கு இடையே பொதுத்­தேர்­தலை நடத்­து­வ­தன் மூலம் ஆளும் மக்­கள் செயல் கட்சி அர­சாங்­கம் தனக்­குத் தானே சிர­ம­மான அர­சி­யல் பிரச்­சி­னையை உண்­டு­பண்­ணு­கி­றதா? அல்­லது வாக்­கா­ளர்­க­ளி­டம் இருந்து வலு­வான ஆத­ர­வைப் பெறு­வ­தற்கு அந்­தக் கட்­சிக்­குக் கிடைத்­தி­ருக்­கும் பொன்­னான வாய்ப்­பாக இது இருக்­குமா?

சிங்­கப்­பூர் கொரோ­னா­ கிருமித்தொற்றைக் கடந்த மூன்று மாத கால­மா­கக் கையாண்டு வரும் விதத்­தைப் பார்க்­கை­யில், சூழ்­நி­லைக்கு ஏற்ப சிங்­கப்­பூர் தன்­னு­டைய கொரோனா கிருமி எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளைச் செம்­மை­யாக மாற்றி அமைத்து கொண்டு வரு­வ­தைக் காண­லாம்.

இந்­தக் கிரு­மித்­தொற்­றை சிங்­கப்­பூர் கையா­ளும் விதம் முரண் இல்­லா­மல் இருந்து வரு­கிறது. கிரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்த முடிந்த அனைத்து நட­வடிக்­கை­க­ளை­யும் எடுக்­கும் அதே­வே­ளை­யில், மக்­க­ளின் வாழ்க்­கைக்கு ஏற்­ப­டக்­கூ­டிய இடை­யூ­று­களைக் கூடு­மான வரை­யில் குறைக்­க­வும் நாம் முயன்று வரு­கி­றோம்.

உட­னடி கிரு­மித்தொற்று சம்­ப­வங்களைச் சமா­ளிக்­கும் அதே­வே­ளை­யில், தன்­னு­டைய நீண்­ட­கால உத்தி இலக்­கு­களில் இருந்து வில­கிச் செல்­லா­ம­லும் திறந்த நிலை­யில் தொடர்ந்து இருந்து, அனைத்­து­லக நற்­பெ­ய­ரைக் காப்­பாற்­றிக்­கொண்டு வரும் நாடாகவும் சிங்­கப்­பூர் உள்­ளது.

இதற்கு கோஸ்டா ஃபார்ட்­சுனா உல்­லா­சக் கப்­ப­லைச் சிங்­கப்­பூர் தன் கடற்­க­ரை­யில் அனு­ம­தித்­ததை எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பி­ட­லாம்.

இது­வ­ரை­யில் கொரோ­னா கிருமித்தொற்றைக் கையா­ளு­வ­தற்­கான சிங்­கப்­பூ­ரின் உத்தி அனைத்­து­லக அங்­கீ­கா­ரத்­தைப் பெற்று இருக்­கிறது.

உள்­நாட்­டி­லும் குறை­கூ­றல்­க­ளை­விட அதிக பாராட்டு அர­சாங்­கத்­திற்­குக் கிடைத்து இருக்­கிறது. இந்­தக் கால­கட்­டம், ஆளும் கட்­சிக்­குச் சிக்­க­லான ஒரு கால­கட்­ட­மாக இருக்­க­லாம். ஆனால் தலை­சி­றந்த வாய்ப்பை வழங்­கு­வ­தா­வும் இது இருக்­கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்று நம் சமூ­கத்­தில் சுதந்­தி­ரம், சமத்­து­வம், ஜன­நா­ய­கம், ஆளுமை ஆகிய அடிப்­படை கோட்­பா­டு­களில் கவ­னம் செலுத்­த­வும் நம்மை நெருக்கி இருக்­கிறது.

பொதுத் தேர்­தல் என்­பது மக்­கள் தங்­கள் வாழ்க்­கை­யை­யும் தாங்­கள் விரும்­பும் எதிர்­கா­லத்­தை­யும் தாங்­கள் எப்­படி நிர்­வ­கித்து நடத்­தப்­பட வேண்­டும் என்­ப­தை­யும் பற்றித் தீவி­ர­மாக பரி­சீ­லிக்க வேண்­டிய ஒரு தரு­ணம்.

அமைதிக் காலத்­தின்­போது ஒரு விருப்ப உரி­மை­யை­யும் நெருக்­க­டி­யின்­போது கூடு­த­லாக ஒரு விருப்ப உரி­மை­யை­யும் அளிக்­கக்­கூ­டிய ஆற்­றல் வாய்ந்த அர­சாங்­கம் எது­வும் இல்லை. ஒரே நேரத்­தில் பல்­வேறு தேவை­க­ளை­யும் நிறை­வேற்ற முடி­ய­வில்லை என்­றால் நீங்­கள் எதற்கு முன்­னு­ரிமை கொடுப்­பீர்­கள்?

நடக்­க­வி­ருக்­கும் பொதுத் தேர்­தல் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­களை நம்பி வாக்­க­ளிக்­கும் ஒரு தேர்­த­லா­கும். கடந்த மூன்று மாத கால­மும் இந்­தத் தலை­வர்­க­ளுக்கு ஒரு பொதுத் தேர்வு கால­மாக இருந்து வந்­துள்­ளது.

வெளியே தெரி­யாத ஒரு மாணவி போன்ற நாடு சிங்­கப்­பூர். அந்த மாணவி படிக்­கி­றாரா இல்­லையா என்­ப­து­கூட சுற்றி இருக்­கும் மக்­க­ளுக்­குத் தெரி­யாது. சிலர் அந்த மாண­வியை நினைத்து கவ­லைப்­ப­டு­வார்­கள். மற்­ற­வர்­கள் குறை­கூ­று­வார்­கள். முடி­வில் அந்த மாணவி தலை­சி­றந்த சாத­னை­களு­டன் தேர்­வில் தேர்ச்சி பெறு­வார் என்று சிலர் வர்­ணித்­துக் கூறு­கி­றார்­கள்.

நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­க­ளின் கீழ் நடந்து வரும் கொரோனா கிருமித்தொற்று எதிர்ப்­புப் போரில் சில குறை­பா­டு­கள் இருக்­க­லாம் என்­றா­லும் மொத்­தத்­தில் அவர்­கள் சாதித்து இருக்­கி­றார்­கள். மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் படிப்­ப­டி­யா­கப் பெற்று வரு­கி­றார்­கள்.

ஒரு ஜன­நா­யக நாட்­டில் குறிப்­பிட்ட காலத்­திற்­குள் பொதுத் தேர்­தலை நடத்­தி­விட வேண்­டும். இப்­போ­தைய கால­கட்­டத்­தில் பொதுத் தேர்­தலை நடத்­து­வது ஆபத்­தா­னது என்று தெரிந்­தா­லும் பொதுத் தேர்­த­லுக்­கான தலை­சி­றந்த வாய்ப்­பா­க­வும் அது திக­ழக்­கூ­டும்.

அமைதிக் காலத்­தில் கிளம்­பக்­கூ­டிய எந்­தப் பிரச்­சி­னைக்­கும் ஆளும் கட்சி மீது மக்­கள் குறை­கூறக்­கூ­டும். ஆனால் சவா­லான கால­கட்­டத்­தில் எல்­லா­ருக்­குமே ஒரே குறி­க்கோள்­தான் இருக்­கும்.

இந்­தக் கால­கட்­டத்­தில் பொறுப்­பில் இருப்­ப­வ­ருக்கு ஒரே எதிரி அவ­ரும் சவால்­க­ளும்­தான்.

* லியான்ஹ சாவ் பாவ் நாளிதழில் முதன் முதலாக வெளியான இந்தக் கட்டுரை சீன மொழியில் எழுத்தப்பட்டு பின்னர் ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!