முரசொலி: வீட்டிலேயே இருப்போம்; கொரோனா கிருமியை ஒழிப்போம்

கொரோனா கிரு­மி­த்தொற்றைத் தடுத்து அதைத் துடைத்­தொழிக்க உல­கமே பாராட்­டும் வகை­யில் சிங்­கப்­பூர் படு தீவி­ர­மாக தன்­னால் ஆன அனைத்து முயற்­சி­க­ளை­யும் எடுத்து வரு­கிறது. இருந்­தா­லும் அந்த முயற்­சி­க­ளை எல்லாம் பின்­னுக்­குத் தள்­ளும் வகை­யில் கொரோனா கிரு­மி­கள் முன்பைவிட இன்னும் தீவி­ரம் காட்­டத் தொடங்கி இருக்­கின்­றன.

சிங்கப்பூரில் அந்­தக் கிருமி 1,100 பேருக்கும் அதிக மக்­க­ளைப் பாதித்­து­விட்­டது. ஆறு பேரைக் கொன்­று­விட்­டது.

இந்நிலையில், சமூ­கத்­தில் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அளவுக்கு கொரோனா கிருமி வியா­பித்து பர­வு­வ­தைத் தடுக்­கும் முயற்­சி­யாக அர­சாங்­கம் வெள்­ளிக்­கி­ழமை மேலும் கடுமை­யான பல நட­வ­டிக்­கை­களை அறிவித்தது.

மருந்­த­கங்­கள், பொதுப் போக்­கு­வ­ரத்து, வங்­கி­கள் போன்ற முக்­கி­ய­மான, அத்­தி­யா­வ­சி­யத் துறை­கள் தவிர, பெரும்­பா­லான வேலை­யி­டங்­கள் செவ்­வாய்க்­கி­ழமை முதல் ஒரு மாத காலத்­திற்கு மூடப்­ப­டு­கின்­றன.

அதே­போல, எல்லா பள்­ளிக்­கூ­டங்­களும் உயர்­கல்வி நிலை­யங்­களும் வரும் புதன்­கிழமை முதல் மூடப்­படுவதால் அவை வீடு­க­ளுக்கே இடம் மாறு­கின்­றன. சிங்­கப்­பூ­ரர்­கள் அடுத்த ஒரு மாத காலத்­திற்குக் கூடு­மான வரை­யில் வீட்­டி­லேயே தங்கி இருக்க வேண்­டும் என்­பது தவிர்க்க முடி­யா­த­தாக ஆகி­விட்­டது.

குடும்ப உறுப்­பி­னர்­க­ளைத் தவிர மற்­றவர்­களு­டன் கலந்­து­ற­வா­டு­வதை அவர்­கள் தவிர்த்­துக் கொள்­ளத்­தான் வேண்­டும்.

உணவு உள்­ளிட்ட முக்­கி­ய­மான பொருட்­களை வாங்­கு­வ­தற்­காக மட்­டுமே அவர்­கள் வெளியே செல்ல வேண்­டும் என்பதை உறுதிப்படுத்துவதே அந்தப் புதிய நடவடிக்கை களின் நோக்கம்.

கொரோனா கிரு­மி­கள் தலை­தூக்­கிய உட­னேயே சிங்­கப்­பூர் விழித்­துக்­கொண்டு சர­ச­ர­வென பல நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்தி வந்­துள்­ளது. குறிப்­பிட்ட வரு­கை­யா­ளர்­க­ளுக்கு எல்­லை­களை மூடி­யது. பொது­மக்­கள் ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­பதைக் கட்­டா­ய­மாக்­கி­யது.

மது­பா­னக் கூடங்­க­ளை­யும் பொழு­து­போக்கு நிலை­யங்­க­ளை­யும் இழுத்து மூடி­யது. துணைப்­பாட வகுப்பு நிலை­யங்­க­ளை­யும் தற்­கா­லி­க­மாக அது நிறுத்­தி­வைத்­தது. ஒரு மீட்டர் இடை­வெளி நிய­தியைப் பின்­பற்­றாத வேலை இடங்­கள் செயல்­ப­டக் கூடாது என்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. வீட்டில் தங்கும் ஆணை பிறப்­பிக்­கப்­பட்டு அதை மீறிய சிங்­கப்­பூ­ர­ரின் பாஸ்­போர்ட்கூட ரத்து செய்­யப்­பட்­டது.

இந்த அள­வுக்குத் தீவிர நட­வ­டிக்­கை­களை உட­னுக்­கு­டன் அதி­ர­டி­யாக சிங்­கப்­பூர் எடுத்து வந்த போதி­லும் கொரோனா கிரு­மி­கள் அவற்­றை­யும் மீறி கைவ­ரி­சை­யைக் காட்­டு­கின்­றன.

இந்த நிலை­யில்­தான், மே 4 வரை ஒரு மாத கால கட்டுப்பாடு நடப்­புக்கு வரு­கிறது. அத்­தி­யா­வ­சிய காரி­யங்­கள் தொட­ரும் அதே­வே­ளை­யில், கூடு­மான வரை­யில் சிங்­கப்­பூரர்­களை வீட்­டி­லேயே இருக்­கச் செய்­வது அதன் நோக்­கம். பல காரி­யங்­களை அரசாங்­கம் எடுத்து வந்தாலும் கொரோ­னவை ஒழிப்­ப­தில் சிங்­கப்­பூர் மக்­க­ளின் பங்கு முன்­பை­விட இப்­போது மிக முக்­கி­ய­மா­ன­து என்று இந்தக் காலகட்டம் வலியுறுத்திக் கூறுகிறது.

கைகளை அடிக்­கடி சோப்பு போட்­டுக் கழுவு­வது, கிரு­மி­நா­சினி திர­வத்­தைப் பயன்­படுத்­து­வது, முகக்­க­வ­சம் அணி­வது, ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­பது, உடல்­நிலை சரி­யில்லை என்­றால் வீட்­டி­லேயே இருப்பது என்று பொறுப்­பு­டன் இதுநாள் வரை நடந்து வந்­துள்ள சிங்­கப்­பூ­ரர்­கள், இந்த நடை­மு­றை­களை, பழக்­கங்­களை இன்­னும் மும்மு­ர­மா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்பதையே நிலவரங்கள் உணர்த்துகின்றன.

சிங்­கப்­பூ­ரில் தொடக்­கத்­தில் வெளி­யில் இருந்­து­தான் கொரோனா கிருமி நுழைந்­தது. ஆனால் எப்­படி பர­வி­யது என்­பது தெரி­யா­ம­லேயே இப்­போது அந்­தக் கிரு­மி­கள் சில­ரைப் பீடித்து இருக்­கின்­றன.

இவர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. அன்­றா­டம் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோ­ரில் பாதி பேர் இப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள்.

சமூ­கத்­தில் மேலும் பல­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருக்­க­லாம். அவர்­கள் அடை­யா­ளம் காணப்­ப­டா­மல் இருக்­க­லாம் என்ற அச்­ச­மும் தலை­தூக்கி வரு­கிறது.

கொரோனா கால­க்கட்­டம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­குமே பொல்­லாத நேர­மாக இருக்­கிறது என்­பதை எல்­லா­ரும் உண­ர­வேண்­டும்.

நிறு­வ­னங்­கள் மூடி இருக்­கின்­றன, ஊழி­யர்­கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள், சுய­தொ­ழில் புரிவோர் வரு­மா­னம் குறைந்து கவலைப்­ப­டு­கி­றார்­கள், பள்­ளிக்­கூ­டங்­கள் வீடு­க­ளுக்கு இடம் மாறி பெற்றோருக்குப் பொறுப்புகள் கூடி உள்ளன.

இவை எல்­லாமே சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்துகொள்ளவேண்­டும் என்ற அவ­சர அவ­சி­யத்தை மக்­க­ளுக்கு உணர்த்­து­கின்­றன.

இதன் கார­ண­மா­கத்­தான் அர­சாங்­கம் இன்­னும் ஒரு படி மேலே சென்று ஒரு மாத கால கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறி­வித்துள்­ளது. கொரோனா கிரு­மி­ ஒழிப்­புப் போரில் ஒவ்­வொ­ரு­வ­ரும் பொறுப்­பு­டன் முழு­மூச்­சாக ஈடு­பட வேண்­டும் என்­பதை நில­வ­ரங்­கள் கட்­டா­ய­மாக்­கு­கின்­றன. கிரு­மி­கள் சமூ­கத்­தில் பர­வா­மல் தடுக்க வேண்­டு­மா­னால் இந்­தப் போரில் சிங்­கப்­பூரர்­கள் முக்­கி­ய­மாக ஒரு காரி­யத்­தைச் செய்ய வேண்­டும்.

அவர்­கள் கூடு­மான வரை வீட்­டி­லேயே தங்கி இருக்­க­வேண்­டும். வெளியே செல்­வதைக் குறைத்­துக் கொள்ளத்தான் வேண்டும். சட்­டம் ஒரு­பு­றம் இருந்தாலும் பலவற்றையும் நினைத்­துப் பார்த்து, இப்படி சுய உறுதி பூண்டு சிங்­கப்­பூ­ரர்­கள் அந்த உறு­தி­யைத் திறம்­பட நிறை­வேற்ற வேண்­டும்.

இப்­ப­டிச் செய்­தால் அவர்­களும் அவர்­களின் குடும்­பத்­தா­ரும் சமூ­க­மும் நாடும் கொரோனா கிரு­மி­யின் கொடூர வலை­யில் இருந்து தப்பி பாது­காப்­பான கேட­யத்தை அமைத்­துக் கொள்ள வழி ஏற்­படும் என்­பது திண்­ணம்.

இதைச் செய்­ய­வில்லை என்­றால் கொவிட்-19 கிரு­மி­கள் மேலும் என்­னென்ன ஆபத்­து­களை, பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தும் என்­பதை நினைத்து பார்க்­கவே அச்­ச­மாக இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!