முரசொலி: வெளிநாட்டு ஊழியர்கள் நலனில் அக்கறை காட்டுவது அவசியம்

சிங்­கப்­பூர் கொரோனா கிரு­மியை ஒடுக்கி அந்­தப் போராட்­டத்­தில் வெற்றி பெறு­வ­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­யத் தொடங்­கி­ய­தா­கக் கரு­தப்­பட்ட நிலை­யில், திடீ­ரென வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே கிரு­மித்­தொற்று பூதா­க­ர­மா­கக் கிளம்­பி­விட்­டது. 

  நாளொன்­றுக்கு கிருமி தொற்­று­வோ­ரின் எண்­ணிக்கை இரட்டை இலக்க அள­வில் இருந்து வந்த நிலை­யில், திடீ­ரென நூற்­றுக்­கணக்­கில் அந்த எண்­ணிக்கை கிடு­கி­டு­வென அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யது. புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளாக இருக்­கி­றார்­கள்.

 

  இது சிங்­கப்­பூ­ருக்கு மட்­டு­மின்றி வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் பல்­வேறு நாடு­களில் உள்ள அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் பயத்­தைக் கிளப்­பி­யது.  

சிங்­கப்­பூ­ரில் பல நூறாயிரம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பணி­யாற்­று­கி­றார்­கள். கட்டு­மானம் உள்­ளிட்ட பல அத்­தி­யா­வ­சிய துறை­க­ளி­லும் பணி­யாற்­றும் அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு என்றே எல்லா வச­தி­க­ளோ­டும் விடு­தி­கள் பல இடங்­க­ளி­லும் இருக்­கின்­றன. 

அவர்­கள் தங்கி இருக்­கும் விடு­தி­க­ளுக்­கும் கிரு­மித்­தொற்­றுக்­கும் தொடர்பு இருப்­பது தெரி­ய­வந்­ததை அடுத்து இதில் அர­சாங்­கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை எடுத்­தது. 

வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஆற்­ற­லு­டன் நடப்­புக்­குக் கொண்டு வரும் பணி­யில் போலி­சும் ஆயு­தப்­ப­டை­யும் உத­விக்­க­ரம் நீட்­டின.

இத்­த­கைய விடு­தி­களில் சங்­கி­லித்­தொ­டர் போல் கிரு­மி தொற்­று­வ­தைத் தடுத்­து­விட வேண்­டும் என்ற நோக்­கத்­தில் நல்ல உடல்­நலத்­து­டன் உள்ள, குறிப்­பாக அத்­தி­யா­வ­சிய சேவை­களில் ஈடு­பட்டு இருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ராணுவ முகாம்­க­ள், மிதவை ஹோட்­டல்­கள், காலி­யான வீவக புளோக்கு ­க­ளுக்­கு இடம் மாற்­றப்­பட்டு வரு­கி­றார்­கள். 

பல்­வேறு விடு­தி­க­ளி­லும் ஊழி­யர்­க­ளுக்­குச் சக­ல­வி­த­மான சோத­னை­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஊழி­யர்­கள் தங்கள் அறை­க­ளி­லேயே 14 நாட்­கள் தங்­கி­யி­ருக்­கும் வகை­யில் பல விடு­தி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ளன. 

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உணவு, விடு­தி­க­ளின் துப்­பு­ரவு, தூய்மை எல்­லா­வற்­றை­யும் உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் பல குழுக்­களும் பணி­களில் இறங்கி இருக்­கின்­றன. மருத்­து­வர்­களும் உதவி வரு­கி­றார்­கள். யாருக்­கா­வது உடல்­நிலை சரி­யில்லை என்­றால் உட­ன­டி­யாக அவர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது; அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள். 

வெளி­நாட்டு ஊழி­யர்­களை கொரோனா தொற்­றி­லி­ருந்து காக்க சிங்­கப்­பூர் அர­சாங்­கம் பிரம்­மாண்ட முயற்­சியைப் பரந்த அள­வில் எடுக்­கிறது. இந்த முயற்சி அவ­சி­ய­மா­னதே என்­ப­தைச் சொல்­ல­வேண்­டியதில்லை. 

விடு­தி­களை நடத்­து­வோ­ரும் முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் எவ்­வ­ளவோ முயற்­சி­களை எடுத்து இருந்­தா­லும் அவற்றை எல்­லாம் முறி­ய­டிக்­கும் வேகத்­தில் கொரோனா கிருமி பரவு­கிறது. 

ஜன­வரி, பிப்­ர­வ­ரி­ மாதங்களில் கொரோனா கிருமி தலை­காட்­டத் தொடங்­கி­ய­போது வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்ற உத்­த­ரவு, நுழைவுக் கட்டுப்பாடு போன்ற நட­வ­டிக்­கை­கள் நடப்­புக்கு வந்­தன. ஆனால் அவை எல்­லாம் விரும்­பிய பலனை அளிக்­கப் போது­மா­னவை அல்ல என்­பது தெரி­ய­வந்­த­தும் அர­சாங்­கம் தலை­யிட்டு ஊழி­யர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யது. 

இப்­ப­டிப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் ஊழி­யர்­களின் நல­னை­யும் ஒட்­டு­மொத்­தத்­தில் சமூ­கத்­தின் நல­னை­யும் பாது­காக்க அவ­சி­ய­மா­ன­வை­யாக இருக்­கின்­றன. 

கொரோனா கிரு­மித்­தொற்று என்­பது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய நோய் அல்ல. எல்­லா­ரை­யும் போல­ அவர்­களும் பாதிக்­கப்­ப­டு­கிறார்­கள். கொரோனா கிருமி தலை­வி­ரித்­தா­டு­வ­தற்கு எந்­த­வொரு இனமோ, சம­யமோ கார­ணம் என்று கூற முடி­யாது. 

நாடு, இனம், சம­யம் எதை­யும் பாரா­மல் அந்­தக் கிருமி பர­வு­கிறது. உல­கில் எந்த மூலை­யில் இருந்­தா­லும் மக்­கள் மிரட்­டப்­ப­டு­கி­றார்­கள். உல­கம் முழு­வ­தும் உள்ள நாடு­களின் அர­சாங்­கங்­கள் எல்­லாமே தங்­கள் மக்­க­ளை­யும் தங்­கள் நாடு­களில் தங்­கி­யி­ருப்­போ­ரை­யும் பாது­காக்க பல நட­வ­டிக்­கை­களை­யும் எடுத்து வரு­கின்­றன. 

அதே­போல் சிங்­கப்­பூ­ரும் தன் மக்­களைக் காக்­கும் அள­வுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­களின் நல­னி­லும் ஒரு­மித்த கவ­னம் செலுத்து­கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 10ஆம் தேதி பிர­தமர் லீ சியன் லூங், காணொளி மூலம் ஒரு செய்தி விடுத்தார்.

கொரோனா கிரு­மித்­தொற்று போராட்­டத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் அனைத்து தேவை­க­ளுக்­கும் தலை­சி­றந்த முறை­யில் சிங்­கப்­பூர் பொறுப்­பெ­டுத்­துக்கொள்­ளும் என்று உறுதி அளித்­தார். 

அவர்­க­ளின் நல்­வாழ்­வில் சிறப்பு கவ­னம் செலுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் பிரதமர் குறிப்­பிட்­டார். கடு­மை­யா­கப் பாடு­பட்டு பொருளீட்ட அவர்­கள் இங்கு வரு­கி­றார்­கள். சிங்­கப்­பூ­ரில் வீவக புளோக்­கு­க­ள், சாங்கி விமான நிலை­யம், எம்­ஆர்டி வழித்­த­டம் போன்­ற­வற்றை அமைப்­பதில் வெளிநாட்டு ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்­களை நம்பி அவர்­களின் குடும்­பங்­கள் இருக்­கின்­றன. 

இவற்றை எல்­லாம் சுட்­டிக்­காட்­டிய பிர­த­மர், வெளி­நாட்­டில் வசிக்­கும் ஊழியர்­க­ளின் குடும்­பங்­க­ளிடையே நம்­பிக்­கையை­ ஏற்படுத்தினார். ஊழியர்கள் நலனுக்குச் சிங்கப்பூரின் உத்­த­ர­வா­தத்­தை­யும் அவர் அளித்தார். 

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைக் காப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய வளங்­கள் எல்­லாம் கொரோனா கிரு­மி­யைத் துடைத்­தொ­ழிக்க சிங்­கப்­பூர் நடப்­புக்­குக் கொண்டு வரும் ஒட்­டு­மொத்த பாது­காப்­பின் ஓர் அங்கம் என்­று­தான் கூற­வேண்­டும். 

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஒவ்­வொன்­றுக்­கும் உத­வு­கி­றார்­கள். அவர்­க­ள் நலனில் காட்டப்படும் அக்கறை, வெளி­நா­டு­களில் உள்ள அவர்­க­ளின் குடும்­பத்­திற்­கும் நம்­பிக்கை ஏற்­ப­டுத்­தும். வெளி­நாட்டு ஊழி­யர்­களி­டம் ஒரு மன­உறுதியும் ஏற்­படும். 

இங்கேயே தொடர்ந்து இருந்து பொரு­ளி­யல் சூடு­பி­டிக்­கும்­போது இதே நாட்­டிற்கு உதவ வேண்­டும் என்ற எண்­ண­மும் அவர்­களி­டம் திண்­ண­மா­கும். அவர்கள் நலன் நம் நலன், சிங்கப்பூரின் நலன்.