முரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை

சீனா­வில் பிறந்து, சிங்­கப்­பூ­ரை­யும் பாதித்து, உல­கையே பய­மு­றுத்தி லட்­சக்­க­ணக்­கான மக்­க­ளைக் கொன்­று­விட்ட கொரோனா கிருமி ஒடுங்­கு­கிறது என்­ப­தற்­கான அறி­கு­றி­கள் ஓர­ள­விற்­குத் தலை­காட்டி இருப்­ப­தால் உல­கம் கொஞ்­சம் நிம்­மதி பெரு­மூச்சு விடத்­தொ­டங்கி இருக்­கிறது.

ஐரோப்­பா­வில் பிரான்ஸ், இத்­தாலி முதல் டென்­மார்க், ஜெர்­மனி வரை பல நாடு­களும் அமெ­ரிக்­கா­வும் கட்­டுப்­பா­டு­க­ளைக் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கத் தளர்த்­தத் தொடங்கி இருக்­கின்­றன. 

சில நாடு­களில் பள்­ளிக்­கூ­டங்­கள் திறக்­கப்­பட்டு இருக்­கின்­றன. ஒப்­பனை நிலை­யங்­களும் சிகை அலங்­கார நிலை­யங்­களும் செயல்­ப­டத் தொடங்கி இருக்­கின்­றன.

கொரோனா கடு­மை­யா­கப் பாதித்த இத்­தா­லி­யில்­கூட பூங்­காக்­கள், தொழிற்­சா­லை­கள், கட்­டு­மான இடங்­கள் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கும் என்று அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது. ஆனா­லும் பள்­ளிக்­கூ­டங்­கள் இன்­னும் சில மாதங்­க­ளுக்கு அங்கு மூடி­யே­தான் இருக்­கும் போல் தெரி­கிறது. 

இப்­படி கட்­டுப்­பா­டு­க­ளை சில நாடு­கள் தளர்த்­தத் தொடங்கி உள்ள போதி­லும் ஏறக்­கு­றைய உல­கின் எல்லா நாடு­க­ளுமே இன்­ன­மும் அச்­சத்­தோ­டு­தான் இருக்­கின்­றன.

சர­ச­ர­வென வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­னால் பேரா­பத்து மீண்­டும் ஏற்­பட்டுவிடக்­கூடுமோ என்று உல­கம் அஞ்­சு­கிறது. அவ­ச­ரப்­பட்டு கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­த­ வேண்­டாம். கொரோனா கிருமி மறு­ப­டி­யும் தலை­தூக்­கும் என்ற நில­வ­ரத்தை மன­தில் கொண்டு அதற்கு எல்லா நாடு­களும் ஆயத்­த­மாக இருக்க வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

பல நாடு­க­ளை­யும் ஒத்த சூழ்­நி­லை­தான் சிங்­கப்­பூ­ரி­லும் தெரி­கிறது. கிரு­மித்­தொற்று கொஞ்­சம் கொஞ்­ச­மாக குறை­யத் தொடங்கி இருப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டுள்­ளன. 

சமூ­கத் தொற்­றுக்கு ஆளா­கி­விட்­ட­வர்­களின் எண்­ணிக்கை சென்ற சனிக்­கி­ழமை வெறும் ஒன்­ப­தாக இருந்­தது. ஆனால் அடுத்த நாளே அந்த எண்­ணிக்கை 15 ஆகி­விட்­டது. 

கொரோனா கிரு­மி­யால் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை 10க்குக் குறை­வா­கவே தொடர்ந்து இருந்து வர­வேண்­டும். அப்­போ­து­தான் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த முடி­யும் என்று அதி­கா­ரி­கள் கூறு­கி­றார்­கள். 

அப்­படி கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­னா­லும்­கூட மிக­வும் எச்­ச­ரிக்­கை­யு­டன்­தான் செயல் பட­வேண்டி இருக்­கும் என்­ப­தால் இங்கு கட்­டுப்பாடு­கள் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கத் தளர்த்­தப்­பட்டு மே 19 முதல், நேரடிப் போத­னை­கள் தேவைப்­படும் மாண­வர்­கள் சிறு­சிறு குழுக்­க­ளா­கப் பள்­ளிக்­குச் செல்­ல­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வே­ளை­யில், முடி திருத்தகம், சலவை, ரொட்டி தயா­ரிப்பு போன்ற சேவை­கள் மீண்­டும் தொடங்க மே 12ஆம் தேதி முதல் அனு­மதிக்­கப்­படும் என்­றும் அடுத்த வாரம் சில கட்­டுப்­பா­டு­கள் சரி­செய்­யப்­படும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. 

இந்­நி­லை­யில், அத்­தி­யா­வ­சிய சேவை­களில் ஈடு­பட்டு இருக்­கும் ஊழி­யர்­க­ளி­டம் அதிக பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட வேண்­டும். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­களை விரி­வு­ப­டுத்த வேண்­டும். மக்­கள் நட­மாட்­டத்­தைப் புதிய தொழில்­நுட்­பம் மூலம் கண்­கா­ணிக்க வேண்­டும் என்­றெல்­லாம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. 

இங்கு ஏரா­ள­மான வெளி­நாட்டு ஊழி­யர்­கள், அவர்­க­ளின் விடு­தி­களில் இருந்து பல இடங்­க­ளுக்­கும் இடம் மாற்­றப்­பட்டு இருக்­கி­றார்­கள். இத­னால் தனி மனித சமூக இடை­வெளி நியதி உறு­தி­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­படும் சூழல் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. 

ஆனா­லும் அத்­த­கைய ஊழி­யர்­க­ளி­டம் கிரு­மித்­தொற்று குறிப்­பி­டத்­தக்க அள­வுக்­குக் குறைய இன்­ன­மும் அதிக காலம் பிடிக்­கும் என்­று­தான் தெரி­கிறது. 

சிங்­கப்­பூ­ரின் ஊழி­யர் அணி­யில் சுமார் 15 விழுக்­காட்­டி­னர், அதா­வது சுமார் 350,000 பேர் அத்­தி­யா­வ­சிய பணி­களில் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள். 

அவர்­கள் நாள்­தோ­றும் வேலைக்­குச் சென்று வரு­கி­றார்­கள். இந்­தச் சூழ்­நி­லை­யில் சமூ­கத் தொற்று என்­பது எப்­போ­தும் சாத்­தி­ய­மா­னதே என்­பது வெளிப்­படை. 

இங்கு கடைத்­தொ­கு­தி­கள் முதல் விடு­தி­கள் வரை பல இடங்­க­ளி­லும் கொத்­துக் கொத்­தா­கப் பல­ரை­யும் கிருமி தொற்றி இருப்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது. 

இது ஒரு­பு­றம் இருக்க, தாதிமை இல்­லங்­கள், நல்­வாழ்வு நிலை­யங்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள், ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் அங்கு தங்கி ­இ­ருப்­ப­வர்­க­ளுக்­கும் கிருமி தொற்றி அத­னால் மூத்த குடி­மக்­களும் அத்­தி­யா­வ­சிய பணி­களில் ஈடு­பட்டு இருப்­போ­ரும் பாதிக்­கப்­ப­டக்கூடும் என்ற அச்­ச­மும் கவ­லை­யும் தொடர்ந்து இருந்து வரு­கிறது.

அதிக மக்­கள் குடி­யி­ருக்­கும் வாடகை வீடு­கள், வீவக சிறிய வீடு­களில் குடி­யி­ருக்­கும் பெரிய குடும்­பங்­கள் ஆகி­ய­வை­யும் கிருமி பர­வ­லுக்கு உள்­ளா­கும் ஆபத்­தும் உள்­ளது.

கொவிட்-19 பர­வ­லைத் தடுப்­ப­தற்கு அர­சாங்­கம் நடப்­புக்­குக் கொண்டு வந்­துள்ள நட­வ­டிக்­கை­கள் விரை­வில் முடி­வுக்கு வர­வேண்­டும். 

வழக்கநிலை திரும்ப வேண்­டும் என்று மக்­கள் விரும்­பு­வது எதிர்­பார்க்­கப்­படும் ஒன்­று­தான் என்­றா­லும் அத்­த­கைய வழக்­க­நிலை திரும்­பு­வ­தற்கு இன்­னும் காலம் பிடிக்­கும் என்­ப­தையே சூழ்­நிலை உணர்த்­து­கிறது. 

கொரோனா பிறந்த சீனா­வின் வூஹான் நக­ரில்­கூட நில­வ­ரம் எவ்­வ­ளவோ மேம்­பட்டு இருந்­தா­லும் எல்­லாம் அங்கு இன்­னும் வழக்க நிலைக்­குத் திரும்­பி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. 

இரு­மும் போதும் தும்­மும் போதும் வாய், மூக்கை மூடிக்­கொள்ள வேண்­டும் என்­பது போன்ற நல்ல, சுகா­தார பழக்­க­வ­ழக்­கங்­களை மக்­கள் கடைப்­பி­டிக்­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்த புதிய விதி­மு­றை­கள் அங்கு நடப்­புக்கு வரு­கின்­றன.

சளிக் காய்ச்­சல் வழக்­க­மாக தலை­தூக்­கக்­கூ­டிய கால­கட்­டம் வரு­வ­தால் அத­னு­டன் கொரோனா கிரு­மி­யும் சேர்ந்­து­கொண்டு அடுத்த கட்ட ஆட்­டத்­தைத் தொடங்­கக்­கூடும் என்று தென் கொரியா போன்ற நாடு­கள் பயப்­ப­டு­கின்­றன. 

கொரோனா கிரு­மித்­தொற்று இது­வரை உல­கம் பார்த்­தி­ராத புது மிரட்­ட­லாக இருப்­ப­தால் அந்­தக் கிரு­மி­களை முற்­றா­கத் துடைத்­தொ­ழித்­து­விட்டு பழை­ய­படி உல­கம் செயல்­படும் என்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் வெகு விரை­வில் கைகூ­டும் என்­பது சந்­தே­கமே. 

சிங்­கப்­பூ­ரும் இதற்கு விதி விலக்­கல்ல. எல்­லா­வற்­றை­யும் வைத்­துப் பார்க்­கை­யில் கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மிக்கு எதி­ராக நெடும் போராட்­டத்­தை சிங்­கப்­பூர்   தொடர வேண்டி இருக்­கும் என்­ப­து­தான் உண்மை நில­வ­ர­மா­கத் தெரி­கிறது. 

அப்­ப­டிப்­பட்ட போராட்­டம் கார­ண­மாக கொரோனா மறை­யும்; அது கட்­டா­ய­மாக்கி விட்­டுச்­செல்­லும் சுத்­த­மான, சுகா­தார பழக்க வழக்­கங்­கள் மக்­க­ளின் அன்­றாட நடை­முறை யாக மாறி நிரந்­த­ர­மாக நீடித்து நிலைக்­கும் என்று நம்­பு­வோம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!