முரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிக்கு எதிரான போராட்டம் பிரச்சினை எதுவுமின்றி சரளமாக வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கிருமியை அறவே துடைத்தொழித்து ஊழியர்களை மீண்டும் வேலைக்கு திரும்ப வைப்பது; நாட்டுக்கு வெளியில் இருந்து சிங்கப்பூருக்குள் கிருமி நுழைவதைத் தடுப்பது; உள்ளூரில் சமூகத்தொற்று தலையெடுக்காமல் தொடக்கத்திலேயே அதைத் தடுத்துவிடுவது ஆகிய மூன்று முனைகளில் கொவிட்-19க்கு எதிரான போராட்டம் இங்கு தொய்வின்றி தொடர்ந்து வருகிறது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படுவோரில் சுமார் 94 விழுக்காட்டினர் ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரையும் சோதித்து ஒருவருக்குக் கூட கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது.

இதை ஆகஸ்ட் நடுப்பகுதிக்கு முன்பே வெற்றிகரமான முறையில் சாதித்து முடிப்பதற்கான சாத்தியமும் உள்ளது.

இந்த முயற்சியில் முழு வெற்றி கிடைத்தால் அது கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரின் இமாலய வெற்றியாக இருக்கும். இதைப் பொறுத்தவரை, அரசாங்கமும் இதர அமைப்புகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இது நாள் வரையில் நல்ல பலனைத் தந்துவந்துள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களிடம் கொவிட்-19ஐ துடைத்தொழித்து அவர்களை மீண்டும் வேலைகளுக்குத் திரும்பச் செய்வது பொது சுகாதாரத்திற்கும் பொருளியலுக்கும் இன்றியமையாதது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கு வெளியில் இருந்து நாட்டிற்குள் கிருமி நுழையாமல் பாதுகாப்பது அடுத்த உத்தி. இதற்கு அதி தீவிரமான விழிப்புநிலை தேவை. ஏனென்றால் சிங்கப்பூருக்கு வெளியே கிருமித்தொற்று கவலை தரக்கூடிய நிலையில் அதிகமாக இருக்கிறது.

சில நாடுகளில் தொற்று கிடுகிடுவென வேகமாகப் பரவுகிறது. பல நாடுகளில் மீண்டும் தலையெடுக்கிறது.

ஆகையால் வெளிநாட்டு பயணங்களைக் குறைத்துக்கொள்வது சிங்கப்பூரர்களுக்கு தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது.

அதேவேளையில், எல்லைகளில் கடுமை யான சோதனைகளும் அவசியமாகிறது. நிலைமைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வரவேண்டியதும் கட்டாயமாகிறது. இதன் தொடர்பிலேயே ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங்கிற்கு அண்மைய நாட்களில் சென்று வந்தோருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

வெளிநாட்டில் இருந்து கொரோனா கிருமி சிங்கப்பூருக்குள் நுழைவதைத் தடுப்பது ஒருபுறம், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கிருமியைத் துடைத்தொழித்து அதன்மூலம் அங்கிருந்து கிருமி வெளியே பரவுவதைத் தடுப்பது மறுபுறம் என்று நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் அதேவேளையில், சமூகத்திற்கு உள்ளே கிருமிப் பரவுவதைத் தடுப்பதிலும் ஒருமித்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கொவிட்-19ஐ பொறுத்தவரையில் சமூகப் பரவல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் கிருமிகள் பரவும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கு வேறுபட்ட, மிகவும் விவேகமான அணுகுமுறை தேவைப்படுகிறது.

உள்ளூரிலேயே கிருமி பரவுவதை உடனுக்குடன் கண்டுபிடித்து யாருக்காவது தொற்று இருந்தால் அவர்களைத் தனிமைப் படுத்தும் அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடித்து வருகிறது.

இதன் முக்கிய அங்கமாக, சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டு இவை போன்ற நடவடிக்கைகள் மூலம் சமூகப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இவை காரணமாக சமூகத்தில் புதிதாக யாருக்காவது கிருமி தொற்றினால் உடனடியாக அவரை அடையாளம் கண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க முடிகிறது.

சிங்கப்பூரில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் கொவிட்-19 பரவுவது மிகவும் குறைவாக இருக்கிறது என்பது நிம்மதி பெருமூச்சு தருவதாக உள்ளது.

மொத்தத்தில் கொவிட்-19ஐ துடைத்தொழிப்பதில் சிங்கப்பூர் நிதானமாக, சீராக, உறுதியாக வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. இந்தக் காலகட்டத்தில் புதிதாக வேறு ஒரு சவாலும் தலையெடுத்து இருக்கிறது. இது நாள் வரை நாம் சாதித்து வருவதைத் தொடர்ந்து நிலைநாட்டி கொவிட்-19க்கு எதிராக பாதுகாப்பு அரணை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே அந்தச் சவால்.

இதில் சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒரு போராட்டத்தில் மிகச் சிரமமான ஒரு காலகட்டம் முடிந்துவிட்ட தாகத் தெரியவரும் நிலையில், அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட வீரர்கள் யாருக்குமே இயற்கையிலேயே ஒரு தொய்வு, மெத்தன எண்ணம் ஏற்படுவது உண்டு.

கொவிட்-19 காரணமாக நடைமுறையில் இருந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் இப்போது மக்கள் அங்கும் இங்கும் தாராளமாகச் சென்று வர முடிகிறது.

கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது மக்களிடையே நிலவிய ஓர் அச்ச உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. எல்லாம் சீராகிவிட்டது. இனிமேல் பிரச்சினை இல்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை என்பதை எல்லாரும் உணரவேண்டும். கொவிட்-19க்கு எதிரான போராட்டம் முடிவடைவதற்கான காலநேரம் இன்னும் கைகூடி வரவில்லை.

போராட்டம் தொய்வில்லாமல் தொடரவேண்டும். முழு வெற்றி கிட்டும் வரை பாதுகாப்பு இடைவெளி போன்ற நியதிகளும் சொந்த சுகாதாரமும் அன்றாட வாழ்க்கை வழியாக நீடித்து நிலைக்க வேண்டும்.

ெவண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போன்ற ஒரு செயலை சிங்கப்பூரர்கள் செய்துவிடவே கூடாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!