ஏற்றத்தாழ்வைக் களைய தொடக்கப்பள்ளி நல்லதொரு தொடக்கமாக அமையட்டும்

இவ்­வாண்டு பாலர் பள்ளி இரண்­டாம் வகுப்­பில் பயி­லும் சிறார்­க­ளின் பெற்­றோ­ரு­டைய மன­தில் ஒரு சிந்தனை ஓடிக்­கொண்­டி­ருக்­கும்.

தம் பிள்­ளைக்கு நல்­ல­தொரு தொடக்­கப்­பள்ளி­யில் இடம் கிடைக்க வேண்­டும் என்­பதே அது. அத்­த­கைய பெற்­றோ­ரில் நானும் ஒருவன்.

தொடக்­க­நிலை ஒன்­றாம் வகுப்­புக்­கான பதிவு நட­வ­டிக்கை அடுத்த மாத இறு­தி­யில் தொடங்­கும்.

குலுக்கல் முறையில் இடம் அளிக்கப் படும்போது பள்ளியின் தேர்வு பெற்றோர் கையில் இருப்பதில்லை,

மிகச்­சி­றந்த தொடக்­கப்­பள்­ளி­யாகவோ அக்­கம்­பக்க பள்­ளி­யா­கவோ இருக்­கட்­டும், அனைத்து தொடக்­கப்­பள்­ளி­க­ளி­லும் பல­த­ரப்­பட்ட சமு­தா­யப் பின்­ன­ணி­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் இருப்­பார்­கள்.

அத்­த­கைய ஒரு சூழ­லில், மாண­வரின் சமு­தா­யப் பின்­ன­ணிக்­கும் அவர் பயி­லும் பள்­ளி­யின் தகு­தி­நி­லைக்­கும் பெரும்­பா­லும் தொடர்பு இருக்­காது.

எனினும், தற்போதைய நிலை அப்படியல்ல.

தொடக்­க­நிலை ஒன்­றுக்­கான பதிவு நட­வ­டிக்­கை­யில் பல்­வேறு கட்­டங்­கள் உள்­ளன. முத­லாம் கட்­டம், தற்­போது தொடக்­கப்­பள்­ளி­யில் பயி­லும் மாண­வர்­க­ளின் உடன்­பி­றப்­பு­க­ளுக்­கா­னது.

தம் பெற்­றோர் அல்­லது உடன்­பி­றப்பு­கள் தொடக்­கப்­பள்­ளி­யின் முன்­னாள் மாண­வர்­க­ளாக இருந்­தால், சிறார்­கள் அதே பள்­ளி­யில் சேர கட்­டம் 2ஏ முன்­னு­ரிமை அளிக்­கிறது.

அதோடு, தொடக்­கப்­பள்­ளி­யின் முன்­னாள் மாணவர் சங்­கத்­தின் உறுப்­பி­னர்­க­ளா­கவோ தொடக்­கப்­பள்ளி ஊழி­யர்­க­ளா­கவோ அதன் ஆலோ­சனை, நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர்­க­ளா­கவோ இருக்­கும் பெற்­றோ­ரின் பிள்­ளை­களும் கட்­டம் ‘2ஏ’வில் பதிவு செய்­ய­லாம்.

தொடக்­கப்­பள்­ளி­யு­டன் தொடர்­புடைய கல்வி அமைச்சு பாலர் பள்­ளி­யில் பயில்­வோ­ரும் இதே கட்­டத்­தில் பதிந்து­கொள்­ள­லாம்.

கட்­டம் 2பி, தொடக்­கப்­பள்­ளி­யில் தொண்­டூ­ழி­யம் புரி­யும் பெற்­றோ­ரின் பிள்­ளை­க­ளுக்­கா­னது. சமூ­கத் தலை­வர்­கள் அல்­லது பள்­ளி­யு­டன் தொடர்­பு­டைய அமைப்­பு­க­ளின் உறுப்­பி­னர்­களாக உள்­ளோ­ரின் பிள்­ளை­களும் இதே கட்­டத்­தில் பதிவு செய்­ய­லாம்.

ஆரம்ப கட்­டங்­களில் பதி­வு­செய்ய தகு­தி­பெ­றா­த­வர்­கள் 2சி கட்­டத்­தில் பதிந்­து­கொள்­ள­லாம். ‘2சி’யிலும் பதிந்துகொள்ளாதோர் 2சிஎஸ் கட்டத்தில் அவ்வாறு பதியலாம். மூன்றாம் கட்­டம், சிங்­கப்­பூ­ரர், நிரந்­த­ர­வாசி அல்­லா­தோருக்­கா­னது.

ஒரு கட்­டத்­தில், குறிப்­பாக 2பி மற்றும் 2சி கட்­டங்­களில் தொடக்­கப்­பள்­ளிக்கு அதி­க­மான விண்­ணப்­பங்­கள் வந்­து­சே­ரும்­போது, அப்­பள்­ளிக்­கும் மாண­வர் வசிக்­கும் வீட்­டிற்­கும் இடை­யே­யான தூர அடிப்­ப­டை­யி­லான விதி­கள் பொருந்­தும். அதா­வது, பள்­ளி­யில் இ­ருந்து 1 கிலோ­மீட்­டர் தூரத்­திற்­குள் வசிக்­கும் மாண­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கிறது.

தொடக்­க­நிலை ஒன்­றுக்­கான பதிவு நட­வ­டிக்கை குறித்த விவா­தத்தை எதிர்­கொள்­வது சற்று கடி­னமே. எடுத்­துக்­காட்­டாக, பள்­ளி­யு­ட­னான உற­வு­க­ளைப் பாது­காத்து, அவற்றை மேம்­ப­டுத்த தற்­போ­தைய நடை­முறை உத­வு­வ­தாக முன்­னாள் மாண­வர்­கள் வாதி­டு­கின்­ற­னர். ஆனால், சமு­தா­யத்­தில் உன்­னத நிலை­யில் இருப்­ப­வர்­களுக்கே உரி­ய­வை­யாக இந்­தப் பள்­ளி­கள் விளங்­கு­வதாக வேறு சிலர் கருது­கின்­ற­னர்.

பள்­ளிக்­கும் வீட்­டிற்­கும் இடையே உள்ள தூர அடிப்­ப­டை­யில் பள்­ளி­யில் மாண­வர்­க­ளைச் சேர்ப்­பது பற்றி சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே அதி­கம் பேசப்­பட்டு வரு­கிறது.

தூர அடிப்­ப­டை­யி­லான தகு­திக்­கூறு பற்றி குறை எது­வு­மில்லை. சொல்­லப் போனால், வீட்­டிற்கு அரு­கில் உள்ள பள்­ளி­யில் தம் பிள்­ளை­க­ளைச் சேர்க்க பெற்­றோர் விரும்­பு­வது நியா­ய­மா­னதே.

எனி­னும், இங்கே இரு உண்மை நில­வ­ரங்­களைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

முத­லா­வது, ஒவ்வொரு பள்­ளி­யும் நல்ல பள்­ளி­தான் என்று கூறப்­பட்டு வந்­தா­லும் உண்மை நில­வ­ரம் அதைப் பிர­தி­ப­லிப்­ப­தில்லை. ஒவ்­வோர் ஆண்­டும் அதே சில பள்ளி­களுக்கே அதி­க­மான விண்­ணப்­பங்­கள் வந்­து­சேர்­கின்­றன. பள்­ளி­யின் தரத்­தில் நில­வும் வித்­தி­யா­சத்­தைப் பெற்­றோர் கவ­னிப்­பதை இது காட்­டு­கிறது.

இரண்­டா­வது, அதே பள்­ளி­கள் தீவு முழு­வ­தும் பரந்து விரிந்­தி­ருப்­ப­தில்லை.

தனி­யார் சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் தங்­கள் வீட­மைப்­புத் திட்­டங்­களை விளம்­ப­ரப்­ப­டுத்­தும்­போது, அவற்­றுக்கு அரு­கி­லுள்ள எம்­ஆர்டி நிலை­யங்­கள், கடைத்­தொ­கு­தி­கள் போன்ற வச­தி­களுடன் பிர­ப­ல­மான பள்­ளி­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்­கின்­ற­னர்.

பிர­ப­ல­மான தொடக்­கப்­பள்­ளி­களுக்கு அருகே உள்ள வீடு­க­ளின் விலை­களும் வாட­கை­யும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று சொத்­துச் சந்தை நிபுணர்கள் முன்­ன­தா­கக் கூறி­இருந்தனர்.

அத்­த­கைய பள்­ளி­க­ளுக்கு அருகே வீடு வாங்கும் வாய்ப்புள்ளவர்கள், தூர அடிப்­படை­யி­லான சேர்க்கை மூலம் பல­ன­டை­ய­லாம். பிர­ப­ல­மான தொடக்­கப்­பள்ளி­யில் தம் பிள்­ளை­யைச் சேர்ப்­பதற்­கா­கவே வீடு மாறும் பெற்­றோரைப் பற்றியும் நாம் கேள்­வி­பட்­டி­ருக்கிறோம்.

மாண­வர்­கள் எங்கு வசித்­தா­லும் சரி, நல்ல தொடக்­கப்­பள்­ளி­கள் அவர்­களுக்கு எட்­டும் தூரத்­தில் இருந்­தால் சிறப்பு. அந்த நிலை ஒரு­நாள் எட்­டப்­பட வேண்­டும் என்­பது என் விருப்­பம்.

ஒவ்­வொரு தொடக்­கப்­பள்­ளி­யின் தரத்தையும் உறு­தி­செய்ய கல்வி அமைச்சு தொடர்ந்து கடப்­பாடு கொண்­டி­ருப்­பதாக அப்­போ­தைய கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் 2021ல் கூறி­யி­ருந்­தார்.

“நம் பிள்­ளை­கள் கல்­விக்­காக எங்கு சென்­றா­லும் சரி, தங்­க­ளது முழு ஆற்றலை அடைய அவர்­க­ளுக்கு நல்ல ஆத­ரவு வழங்­கப்­படும்,” என்று அவர் சொல்­லி­யி­ருந்­தார்.

அந்த வகை­யில், என் வீட்­டிற்கு அரு­கி­லுள்ள தொடக்­கப்­பள்­ளி­யில் என் மகன் சேர்ந்து, ஆறாண்டு கல்­வியை முடித்து, தொடக்­கப்­பள்ளி இறுதி­ ஆண்டுத் தேர்­வில் சிறந்த தேர்ச்சி பெற்று, சமு­தா­யத்­திற்­குப் பய­னுள்­ள­வராக, சிறந்த பண்­பு­ந­லன்­களைப் பெற்ற­வ­ராக, உதவி தேவைப்­ப­டு­வோருக்கு கைகொடுப்­ப­வ­ரா­கத் திகழ்ந்­தால் அதை­விட பெருமை எனக்கு வேறு எது­வும் கிடை­யாது.

கல்­விப் பய­ணத்­தி­லும் பின்­னர் வாழ்­வி­லும் ஏற்­றத்தாழ்வைக் களைய தொடக்­கப்­பள்ளி நல்­ல­தொரு தொடக்­க­மாக அமை­யட்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!