சிங்கப்பூர் காற்பந்து: சரிவிலிருந்து மீள சரியான நடவடிக்கைகள் தேவை

காற்­பந்து மோகம் கொண்ட நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று என்­பது நம்­பிக்கை. எனி­னும், நமது ஆண்­கள் தேசிய காற்­பந்து அணி­யின் வர­லாறு, தற்­போ­தைய நிலை இரண்­டும் அதைப் பிர­தி­ப­லிக்­க­வில்லை என்­பது கசப்­பான உண்மை.

இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் 22 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான சிங்­கப்­பூர் அணி படு­மோ­ச­மா­கத் தோற்­றது மட்டு­மின்றி, மலே­சி­யா­வி­டம் 7-0 எனும் கோல் கணக்­கில் மரண அடி வாங்­கி­யது. போட்­டி­யில் மலே­சியா, சிங்­கப்­பூர் இரண்­டும் முதல் சுற்­றைத் தாண்­ட­வில்லை.

ஆசி­யக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்பு (ஏஎ­ஃப்சி) ஆசிய கிண்­ணப் போட்­டிக்கு சிங்­கப்­பூர் ஒரு­முறை மட்­டுமே தகு­தி­பெற்­றி­ருக்­கிறது. 1984ஆம் ஆண்டு அந்­நி­கழ்வு இடம்­பெற்­றது.

ஆசிய விளை­யாட்­டு­க­ளின் காற்­பந்­துப் போட்­டி­யில் சிங்­கப்­பூர் 1966ஆம் ஆண்­டில் மட்­டுமே முதல் சுற்­றைத் தாண்­டி­யது. இந்த வட்­டா­ரத்­துக்­கான தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூர் இன்­று­வரை தங்­கம் வென்­ற­தில்லை.

தென்­கி­ழக்­கா­சிய தேசிய காற்­பந்து அணி­க­ளுக்­கான ஆசி­யான் காற்­பந்­துச் சம்­மே­ள­னம் (ஏஎ­ஃப்­எஃப்) போட்­டி­யில் நிலைமை பர­வா­யில்லை. மூன்று முறை கிண்­ணத்தை வென்­றுள்­ளது சிங்­கப்­பூர்.

இருந்­தா­லும், அதி­லும் வெற்­றி­வாகை சூடி 11 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. கடந்த ஐந்து போட்­டி­களில் ஒரு­முறை மட்­டுமே சிங்­கப்­பூர் முதல் சுற்­றைத் தாண்­டி­யது.

சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கம் சரி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­ததே இதற்­குக் கார­ணம் என்­பது ரசி­கர்­கள், விமர்­ச­கர்­கள் உள்­ளிட்ட பல தரப்­பி­ன­ரின் கருத்து. சங்­கத்தை மட்­டும் குறை சொல்­ல­மு­டி­யுமா?

இளம் வய­தில் நானும் சக நண்­பர்­களும் கூடைப்­பந்­துத் திடல், புல்­வெளி எனப் பல இடங்­களில் அடிக்­கடி காற்­பந்து விளை­யா­டு­வோம்.

புல்­வெ­ளி­யில் விளை­யா­டும்­போது எங்­க­ளி­டம் இருக்­கும் பொருள்­க­ளைக் கொண்டு கோல் கம்­பங்­களை உரு­வாக்கு­வோம்.

கைவ­சம் பந்து இல்­லா­விட்­டாலும்­கூட அரு­கில் இருக்­கும் கடை­களில் பிளாஸ்­டிக் பந்­து­களை வாங்­கிப் பலர் விளை­யா­டு­வர். டென்­னிஸ், மேசைப்­பந்து­ இருந்தால்கூட போதும். அவ்­வ­ளவு ஆர்­வம் காற்­பந்­தின்­மீது. அந்­தக் கலா­சா­ரம் இன்­ன­மும் இருக்­கி­றதா?

மாறி­வ­ரும் வாழ்க்­கைச்சூழ­லும் சிங்­கப்­பூர் நவீ­ன­ம­டைந்­துள்­ள­தும் மக்­க­ளின் போக்கு மாறி­ய­தற்­குக் கார­ணங்கள் என்று கூறப்­ப­டு­வ­துண்டு. அப்­ப­டிப் பார்த்­தால் சிங்­கப்­பூ­ரைப் போல் நவீ­ன­மடைந்­துள்ள நாடு­க­ளின் தேசிய அணி­களில் திற­மைக்­குப் பஞ்­சம் இல்லையே.

சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொகை குறைவு என்­ப­தை­யும் கார­ண­மா­கச் சொல்­ல­மு­டி­யாது.

400,000க்கும் குறை­வான மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட ஐஸ்­லாந்து உல­கக் கிண்ண, யூரோ கிண்­ணப் போட்­டி­க­ளுக்­குத் தகு­தி­பெற்­று­விட்­டது. பல சிறப்­பான விளை­யாட்­டா­ளர்­கள் உள்ள உரு­கு­வே­யின் மக்­கள்­தொகை நான்கு மில்­லி­ய­னுக்­கும் குறைவு.

டென்­மார்க், நார்வே, பின்­லாந்து போன்­ற­வற்­றுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் மக்­கள்­தொ­கை­யில் அதிக வித்­தி­யா­சம் கிடை­யாது.

சமூக அள­வில் காற்­பந்து மோகம் பெரிய அள­வில் குறைந்­தி­ருப்­பதே இந்த அவல நிலைக்­குக் கார­ணம் என இவ்­வாண்டு தொடக்­கத்­தில் சிங்­கப்­பூரின் காற்பந்து நிலைமையை அல­சிய ‘முரசு காப்­பிக் கடை’ வலை­யொளி அங்­கத்­தில் பங்­கேற்ற சிலர் குறிப்­பிட்­ட­னர்.

முன்­பி­ருந்­த­தைப் போல் சமூக ரீதி­யில் பல சிறிய அள­வி­லான காற்­பந்­துப் போட்­டி­களை மறுபடி­யும் உரு­வாக்­கு­வது மீண்­டும் அவ்­வி­ளை­யாட்டு மீதான ஆர்­வத்­தைத் தூண்­டும் என்­றார் பங்­கேற்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான முன்­னாள் சிங்­கப்­பூர் காற்­பந்து நட்­சத்­தி­ரம் வி. கணே­சன்.

மக்­க­ளி­டையே அதிக ஈடு­பாடு இருக்­கும்­போ­து­தான் சமூ­கத்­தில் திற­மை­யான இளம் விளை­யாட்­டா­ளர்­கள் உரு­வெ­டுப்­பர் என்­றும் வலை­யொளி அங்­கத்­தில் கூறப்­பட்­டது.

சமூக அள­வில் காற்­பந்­துச் சூழலை மேம்­ப­டுத்த 2021ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்­டது ‘அன்­லீஷ் தி ரோர்’ திட்­டம். அதைப் பற்­றிப் பல­ருக்­குத் தெரி­யா­மல் இருப்­பது வருத்­தம்.

வெளி­நா­டு­களில் வாழும் திற­மை­யான சிங்­கப்­பூர் வம்­சா­வளி விளை­யாட்­டா­ளர்­க­ளைக் கள­மி­றக்­கு­வது சிறிது காலத்­துக்­கா­வது விடி­வு­கா­லம் வழங்­கும் என்ற கருத்­தை­யும் அண்­மை­யில் சில தரப்­பி­னர் முன்­வைத்­த­னர்.

விளை­யாட்­டா­ளர்­கள் வளர்ந்த நாட்­டைப் பிர­தி­நி­திப்­ப­தற்­குப் பதி­லாக முன்­னோர்­க­ளின் நாட்­டிற்கு விளை­யாட வகை­செய்ய அனைத்­து­ல­கக் காற்­பந்­துச் சம்­மே­ள­னம் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு விதி­மு­றை­களில் மாற்­றம் செய்­தது. குறிப்­பாக சென­கல், மொரோக்கோ போன்ற பல ஆப்­பி­ரிக்க நாடு­கள் அத­னால் பல­ன­டைந்­துள்­ளன.

எனி­னும், அதற்கு முன்­னரே அவை உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெற்­றி­ருந்தன; ஆப்­பி­ரிக்கக் கண்­டத்­தில் முத்­திரை பதித்­தி­ருந்­தன.

சிங்­கப்­பூ­ரில் காற்­பந்­துக்­கான கட்­ட­மைப்பு சரி­யாக இல்லை, அத­னால்­தான் போது­மான திற­மை­யான விளை­யாட்­டா­ளர்­கள் இங்கு உரு­வா­வ­தில்லை என்று பலர் கூறி­யுள்­ள­னர்.

பிரச்­சி­னைக்­கான அடிப்­ப­டைக் கார­ணத்தை அறிய முற்­ப­ட­வேண்­டும். பின்­னர் நிலை­மை­யைச் சீராக்­க­வேண்­டும். அதற்­குப் பிறகே வளர்ச்சி.

கட­லில் தத்­த­ளித்­துக் கொண்­டி­ருக்­கும் படகை மூழ்­கா­மல் பார்த்­துக்­கொண்ட பிறகே அதை மேம்­ப­டுத்­தும் பணி­களை மேற்­கொள்­ள­வேண்­டும். இது­தான் சிங்­கப்­பூர் காற்­பந்து அணி­யின் தற்­போ­தைய நிலை.

இல்­லா­வி­டில், காற்­பந்­துக்­குப் பதி­லாக மற்ற விளை­யாட்­டு­களில் கூடு­தல் கவ­னம் செலுத்­த­லாம் என்று முடி­வெ­டுத்து அதற்கு ஏற்­ற­வாறு செயல்­ப­ட­லாம்.

அதே­வேளை, உல­க­ள­வில் ஆகப் பிர­ப­ல­மான விளை­யாட்­டு­களில் ஒன்­றாக இருக்­கும் காற்­பந்­தில் சிங்­கப்­பூர் சொல்­லிக்­கொள்­ளும் அள­வுக்­கா­வது விளை­யா­ட­வேண்­டும் என்று ரசி­கர்­கள் எதிர்­பார்ப்­பதில் தவ­றில்லை.

அத­னால், காற்­பந்தாட்டத்தை வெறும் விளை­யாட்­டாக அணு­கா­மல், அதில் உச்­சத்­தில் இருக்­கும் நாடு­க­ளின் அணுகு­மு­றை­களை ஆராய்ந்து, சிறு­வ­ய­தி­லேயே திற­னா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு, அவர்­க­ளைப் பட்­டை­தீட்­டி­னால் காற்­பந்­தாட்டத்தில் சிங்­கப்­பூ­ர் மின்­னும் காலம் வரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!