இந்தியாவில் இலக்கு நிறைவேறியதை அடுத்து மீட்டுக்கொள்ளப்படும் ரூ.2000 நோட்டு

இந்­தி­யா­வில் பணம் தொடர்பான பரபரப்பு, பதை­ப­தைப்பு மீண்டும் கிளம்பி இருக்­கிறது. கடந்த 2016ஆம் ஆண்­டில் அறி­மு­க­மான ரூ.2000 நோட்­டு­கள் மீட்டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அந்நாட்டின் மத்­திய வங்­கி­யான ரிசர்வ் பேங்க்­ ஆஃப் இந்­தியா அறி­வித்­துள்­ளது.

உல­கி­லேயே ஆக அதிக மக்கள் வசிக்­கின்ற, பெரும் பொருளியல்­களில் ஒன்­றான இந்­தி­யா­வில் அண்மைய காலத்­தில் பணம் தொடர்­பான எந்த ஓர் அரசாங்க அறி­விப்­பும் பீதி­யைக் கிளப்­பு­வ­தா­கவே பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, கள்­ளப் பணத்தை ஒழிப்­பது, ஊழலை ஒழிப்­பது, பயங்­க­ர­வா­தி­க­ளுக்­குப் பணம் போவ­தைத் தடுப்­பது ஆகிய மூன்று நோக்­கங்­க­ளுக்­காக என்று சொல்லி, புழக்­கத்­தில் அதி­க­மாக இருந்து வந்த ரூ.500. ரூ.1,000 நோட்­டு­கள் செல்­லாது என்று 2016 நவம்­பர் 8ஆம் தேதி இரவு திடீ­ரென்று ஓர் அறி­விப்பு விடுத்­தார்.

பொழுது விடிந்­த­தும் அந்த அறி­விப்பு நாட்­டில் புய­லைக் கிளப்­பி­யது.

பண­ம­திப்பு இழப்­பிற்கு முன்­ன­தாக 2016 நவம்­பர் 4ஆம் தேதி வாக்­கில் இந்­தி­யப் பணச் சந்­தை­யில் மொத்தம் 17.97லட்சம் கோடி நோட்­டு­கள் புழங்கின. அவற்­றில் 86.4% நோட்­டு­கள் ரூ.500, ரூ.1,000 நோட்­டு­களாக இருந்தன. ரூ.500, ரூ.2000 ஆகி­ய புது­வடிவ நோட்­டுகள் 2016 நவம்­பர் 11 ஆம் தேதி வங்­கி­களில் கிடைக்­கும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

இவ்­வ­ளவு அதி­கம் புழக்­கத்­தில் இருந்த அந்த நோட்­டு­கள் திடீ­ரென்று செல்­லாது என்று அறி­விக்­கப்­பட்­ட­தால் மக்­க­ளி­டையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. பணத்தை மாற்ற போதிய கால அவ­சா­கம் இல்­லா­மல் போன­தாலும் ஏடிஎம்­மில் பணம் எடுக்க வரம்பு உள்­ளிட்ட பல கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­தா­லும் மக்கள் பெரும் பிரச்­சி­னைகளை எதிர்நோக்க வேண்டியதாயிற்று.

பணத்தை மாற்­றிக்­கொள்­ளும் முயற்­சி­யில் 100க்கும் மேற்­பட்­டோர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் பொரு­ளி­ய­லுக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டு­விட்­டது; சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் முடங்­கி­விட்­டன; ஏரா­ள­மான மக்­கள் வேலை இழந்­து­விட்­ட­னர் என்­றும் எதிர்க்­கட்­சி­கள் தெரி­வித்­தன, போராட்­டங்­களில் குதித்­தன.

என்­றா­லும் அந்த நட­வ­டிக்கை வெற்றி­தான் என்று மத்­திய அர­சாங்­கம் அப்­போது தெரி­வித்­தது.

அதிக அள­வில் புழக்­கத்­தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்­டு­கள் திடீ­ரென்று செல்­லா­த­வை­யா­கி­விட்­ட­தால் இந்­தி­யப் பொரு­ளி­ய­லுக்­குத் தேவைப்­ப­டக்­கூ­டிய அள­வுக்கு நாண­யப் புழக்­கம் இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக அர­சாங்­கம் ரூ.2000 நோட்­டு­களை வெளி­யிட்­டது.

மதிப்பு இழக்­கப்­பட்ட நோட்­டு­க­ளுக்­குப் பதி­லாக போதிய ரூ 500 நோட்­டு­கள் புழக்­கத்­திற்கு வந்த உட­னேயே ரூ.2000 நோட்­டு­கள் வெளி­யி­டப்­பட்­ட­தன் நோக்­கம் நிறை­வே­றி­விட்­ட­தாக பிறகு தெரி­விக்­கப்­பட்­டது.

இனி ரூ.2000 நோட்­டு­கள் அவ்­வ­ள­வாகத் தேவைப்­ப­ட­மாட்டா என்­றும் அப்­போது எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதனை அடுத்து 2018-2019ஆம் ஆண்டில் ரூ.2000 பணத்தை அச்­ச­டிப்­பது நிறுத்­தப்­பட்­டது. ரூ.2000 நோட்­டு­களில் சுமார் 89% நோட்­டு­கள் 2017 மார்ச்சுக்கு முன்­ன­தாக வெளி­யி­டப்­பட்­டவை.

புழக்­கத்­தில் இருந்த அந்த நோட்டு­களின் மொத்த மதிப்பு 2018 மார்ச் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி ரூ.6.73 லட்­சம் கோடி என்று அறி­விக்­கப்­பட்­டது. (புழக்­கத்­தில் இருந்த மொத்த நோட்­டு­களில் 37.3%). அந்த மதிப்பு, 2023 மார்ச் 31 நில­வ­ரப்­படி ரூ.3.62 லட்­சம் கோடி­யா­கக் (10.8%) குறைந்­து­விட்­டது.

ரூ.2000 நோட்டு கொடுக்­கல் வாங்­கல்­களில் அவ்­வ­ள­வா­கப் புழங்­க­வில்லை. அதன் புழக்­கம் குறைந்­து­விட்டது. ஏடிஎம் இ­யந்­தி­ர­ங்களில் அந்த நோட்டு கிடைப்­பதும் இல்லை.

இது ஒரு­பு­றம் இருக்க, பொது­மக்­களின் தேவை­களை நிறை­வேற்­றும் அள­வுக்கு இதர நோட்­டு­கள் உள்­ளன.

ரூ.2000 நோட்­டு­களை வெளி­யிடு வது என்­பது தற்­கா­லிக ஏற்­பா­டு­தான், அதன் ஆயுள் அநே­க­மாக 4 முதல் 5 ஆண்­டு­கள்தான் இருக்­கும் என்­றும் அப்­போது தெரி­வித்த மத்­திய வங்கி, வந்த வேலை முடிந்­து­விட்­ட­தால் அவை மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக இப்­போது அறி­வித்­துள்­ளது.

மக்­கள் தங்­க­ளி­டம் இருக்­குக்­கூடிய அந்த நோட்­டு­களை இந்த மாதம் 23ஆம் தேதி முதல் வரும் செப்­டம்­பர் 30ஆம் தேதி­வரை வங்­கி­களில் அல்­லது மத்­திய வங்­கி­யின் 19 கிளை­களில் எங்கு வேண்­டு­மா­னா­லும் கொடுத்து மாற்­றிக்­கொள்­ள­லாம். ஒரு நேரத்­தில் பத்து நோட்­டு­க­ளைக் கொடுத்து ரூ.20,000 பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அல்­லது தங்­க­ளி­டம் எவ்­வ­ளவு 2000 ரூபாய் நோட்­டு­கள் இருந்­தா­லும் அவற்­றைக் கணக்­கில் போட­லாம் என்று மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

பண­ம­திப்பு இழப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­போது இருந்த நில­வ­ரங்­கள் போல் இப்­போது இல்லை.

வரும் செப்­டம்­பர் மாதத்­திற்­குப் பிற­கும் ரூ.2000 நோட்­டுக்கு மதிப்பு இருக்­கும். அவை செல்­லு­ப­டி­யா­கும் என்று இப்­போது மத்­திய வங்கி அறிவித்து இருப்­பது பல­ருக்­கும் நிம்­மதி பெரு­மூச்சுவிட­ வைத்­துள்­ளது.

இந்­தி­யா­வின் அதிக வளர்ச்சி உள்ள, ஆக­அ­திக ஏடி­எம் இயந்­தி­ரங்­கள் செயல்­ப­டு­கின்ற தமிழ்­நாட்­டில் ரூ.2000 மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தால் சாமானிய மக்­க­ளுக்­குப் பாதிப்பு இல்லை என்றும் அந்­தப் பணத்­தைப் பதுக்கி வைத்­திருப்­போரே பயப்­ப­ட­வேண்­டும் என்­றும் பலரும் கூறு­கி­றார்­கள்.

இத­னால் வங்­கி­க­ளுக்­குப் பண வரத்து அதி­க­ரிக்­கும் என்று சிலர் கூறுகிறார்­கள். அதி­க­மா­கப் புழங்­கும் நோட்டு­க­ளி­லேயே ஆக அதிக மதிப் புள்ள பணம் ரூ.500 நோட்­டு­தான்.

ஆகை­யால் ரூ.1000 நோட்­டு­களை வெளி­யிட்­டால் வச­தி­யாக இருக்­கும் என்று வியா­பா­ரி­கள் சிலர் கரு­து­கி­றார்­கள். ரூ.200 நோட்டை அச்­சிட ரூ2.93; ரூ.500 நோட்டை அச்­சிட ரூ.2.94; ரூ.2000 நோட்டை அச்­சிட ரூ.3.54 செல­வா­கிறது என்று மத்­திய வங்கி ஆண்டு அறிக்­கை­யில் தெரி­விக்­கிறது.

செல­வைப் பார்க்­கும்­போது இப்­போ­தைக்கு இது தாங்­காது; மின்­னி­லக்க நாய­ணப் புழக்­கம் அதி­க­மாகி வரு­வ­தால் அரசு இதில் அவ­ச­ரம் காட்­டாது என்று சிலர் கரு­து­கி­றார்­கள்.

எது எப்­படி இருந்­தா­லும் எந்த ஒரு முடிவையும் நாட்டின் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­கும் மக்­க­ளுக்­கும் பாதிப்பு வராத வகை­யில் அர­சாங்­கம் எடுக்கும்; எடுக்க வேண்டும் என்பதே எல்லாரின் விருப்பம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!