தமிழக முதல்வர் வருகை: உறவுக்கு உரமிடட்டும்; பொருளியல் வலுவாகட்டும்

தமிழ்­நாட்­டின் முதல்­வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு அளித்த முதல் வருகை சிங்­கப்­பூ­ருக்கும் தமிழகத்திற்கும் இடையி­லான பழமையான உறவை மீண்­டும் மறு­வுறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அவ­ரது இரு நாள் (மே 24, 25) அதி­கா­ரத்­து­வப் பய­ணத்­தின் முழு கவனமும் தமிழ்­நாட்­டின் தொழில்­து­றையை மேம்­படுத்­து­வ­தி­லும் முத­லீ­டு­களை ஈர்ப்­பதிலும் இருந்­தது. அதேவேளையில் தொப்புள்­கொடி உற­வால் இணைக்­கப்­பட்டுள்ள சிங்­கப்­பூர்த் தமிழ் மக்­க­ளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கப் போவதாக முதல்வர் ஸ்டா­லின் உறுதி தெரிவித்து இருக்கிறார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யில் பல புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள், இரு­நாட்டு வர்த்­தக ஒப்­பந்­தம் என பல்­வேறு இணைப்­பு­கள் இருந்­தா­லும் தமிழ்­நாட்டு அரசே நேரில் வந்து முத­லீடு­களை ஈர்க்க முயற்சிகளை முடுக்கி விட்டது பல ஆண்­டுகளில் காணாத ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

முதல்வர் வருகையின்போது பொரு­ளி­யல் உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த பல உடன்­பா­டு­கள் கையெழுத்­தா­யின.

இந்­தி­யா­வின் பல மாநிலங்­களில் வர்த்­தக, முத­லீட்டு உற­வு­களைச் சிங்­கப்­பூர் வலுப்­ப­டுத்­தி வந்­துள்ளது.

அண்­மை­யில் உத்­தி­ரப்­பி­ர­தே­சத்­தில் பல உடன்­பா­டு­களைச் சிங்­கப்­பூர் மேற்­கொண்­டுள்­ளது. அதற்கு முன்னரே குஜ­ராத் உள்­ளிட்ட மாநி­லங்­களில் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் பெரு­ம­ள­வில் முத­லீடு செய்­து­வ­ரு­கின்­ற­ன.

இந்­தத் தரு­ணத்தில் தமிழ்­நாட்டுக்கு மட்­டு­மின்றி சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­களுக்­கும் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் பயணமாக அவரின் பயணம் அமையும்; வர்த்­தக, தொழில் உற­வு­கள் மேலோங்க, பொருளி­யல் நோக்கில் தமிழ்­மொ­ழி­யைப் புழங்க, வளர்க்க, கற்க மேலும் வாய்ப்பு வசதி கள் உருவாகும் என்று நம்பலாம்.

தமிழ்­மொ­ழியை ஆட்­சி­மொ­ழி­யாகக் கொண்­டி­ருப்­ப­தால் சிங்­கப்­பூரை ஒரு வெளி­நா­டாக நாங்­கள் கருது­வ­தில்லை என்று சிங்­கப்­பூர் இந்தி­யர் வர்த்­த­கத் தொழில் சபை ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சி­யில் ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

அதைப் போலவே சிங்­கப்­பூ­ரி­லுள்ள நிறு­வ­னங்­களும் அதன் நிர்­வா­கி­களும் மொழிப் பாலத்­தால் உற­வுப் பிடி­மானத்தை மேலும் இறுக்­கிப் பிடித்­துக்­கொள்ள வாய்ப்­பும் உள்­ளது.

வளம் பெற்ற தமிழ்­நாட்­டில் உத்­தி­பூர்வ வகை­யில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு வாய்ப்­பு­கள் கொட்­டிக்­கி­டப்­ப­தாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக முதல்வரைச் சந்தித்த சிங்கப்பூரின் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரும் வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்­பு­வ­கிக்­கும் அமைச்­ச­ரு­மான எஸ்.ஈஸ்­வ­ரன், இந்­திய முத­லீட்­டின் சிறந்த நுழை­வா­யி­லாகத் தமிழ்­நாடு இருக்­கும் என்றார்.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் முதல்வரை வரவேற்க நடந்த நிகழ்ச்சியில் மட்­டு­மல்­லா­மல் மறு­நாளும் திரு ஸ்டா­லினைச் சந்­தித்­துப் பேசி­னார். திரு ஸ்டா­லின் வருகை பொரு­ளி­யல் ரீதி­யில் சிங்­கப்­பூ­ருக்­கும் கலா­சார, சமூக ரீதி­யில் சிங்­கப்­பூர்த் தமி­ழ­ருக்­கும் மிக­வும் ஊக்­கு­விப்­பாக அமை­யும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

எந்த நாட்­டில் புலம்­பெ­யர்ந்து வாழ்ந்­தா­லும் எந்த இன மக்­க­ளுக்­கும் பூர்­வீகத்­தில் நாட்­டம் இருக்­கத்­தான் செய்­யும். அந்த வகை­யில் தமிழ் மக்­க­ளுடன் தமிழ் மொழி­யு­ட­ன்கூடிய தொடர்பை மேலும் வலுப்­ப­டுத்­த­ தமி­ழ­கத்­து­ட­னான தொடர்பு கைகொ­டுக்­கும்.

நவீன தொழில்­நுட்­பத்­தால் தொடர்புத்துறை மிக­வும் விரி­வ­டைந்துவிட்­டது. அது மேலும் வள­ரவே செய்­யும். தமி­ழக முதல்­வ­ரி­டம் சிங்­கப்­பூர்த் தமி­ழர்­கள் பல கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­னர்.

மது­ரைக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை யி­லான நேரடி விமா­னத் தொடர்பு அதில் முதன்­மை­யா­னது. அந்தக் கோரிக்கை நிறைவேற பாடுபடப்போவதாக முதல்வர் உறுதி தெரிவித்துள்ளார்.

கலா­சார, மொழி இணைப்பு-மேம்­பாட்­டுக்­கான திட்­டங்­கள், இங்கு வாழும் தமி­ழக ஊழி­யர் மேம்­பாட்­டுக்கான திட்­டங்­கள் என பல­வற்­றை­யும் ஸ்டா­லின் செய்து முடிப்­பார் என்று நம்­பு­வோம்.

மேல்­நி­லைக் கல்வி சார்ந்த திட்­டங்­களை மேற்­கொள்ள சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கத்­து­ட­னான ஒப்­பந்­தம் உட்­பட முதல்வர் வருகையின்­போது ஆறு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின.

முதல்­வர், பெரும் நிறு­வ­னங்­களுடன் சந்­திப்­பு­களை நடத்­தி­னார். தமிழ்­நாட்டின் சிறந்த பங்­காளி­யாக சிங்­கப்­பூர் திகழ வேண்டும் என்று அவர் விருப்பம் தெரி­வித்­தார்.

ஏற்­று­ம­தியைச் சார்ந்து இருக்கும் சிங்­கப்­பூர் உல­கத்­தோடு ஒன்­றி­யி­ருக்­கும் நாடு. அந்த ஒன்றிணைப்பில் தமிழகத்தையும் சிங்கப்பூர் வலுவாகச் சேர்ந்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை யில் வரும் ஜன­வரியில் நடை­பெ­ற­ உள்ள உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டில் அதிகமான சிங்­கப்­பூர் நிறு­வனங்­கள் கலந்துகொள்ள ஊக்கமூட்டும் வகையில் முதல்வரின் பய­ணம் அமைந்­திருக்கும் என்று நம்பலாம்.

சிங்கப்பூரை நிறுவிய தலைவர் லீ குவான் இயூ­விற்குத் தமிழ்நாட்டில் நினை­வுச்­சின்­னம் அமைக்கப்படும்;

அவர் பெயரில் நூலகம் அமையும் என்று முதல்வர் அறிவித்தார்.

அத்தகைய நினை­வுச்­சின்­னம் சிங்­கப்­பூ­ருக்­கும் தமி­ழ­கம் மற்­றும் இந்­தி­யாவுக்­கான உணர்­வு­பூர்­வ­மான தொடர்பு மேலும் அதி­க­மா­க ஓர் ஊக்குவிப்பாக இருக்கும். தமிழ் நாட்­டுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் உள்ள இணைப்­பில் அது மேலும் வலு சேர்க்­கும். லீ குவான் இயூ பெய­ரில் அமைக்­கப்­படும் நூலகம் பல­ருக்­கும் பய­னுள்­ள­தாக அமைய வேண்­டும்.

அந்த நூல­கத்­தி­லும் தமி­ழ­கத்­தின் மற்ற நூல­கங்­களிலும் சிங்­கப்­பூ­ரைப் பற்­றி­யும் இந்­நாட்டு வர­லாறு, மக்­கள், வாழ்க்கை, பண்­பாடு பற்­றிக்­கூ­றும் பல மொழி நூல்­கள், குறிப்­பாக ஆங்கில நூல்­க­ளும் இடம்­பெ­ற வேண்டும்.

மாண­வர் பரி­மாற்­றத் திட்­டம் பற்றியும் முதல்வர் அறிவித்தார். அத்திட்டத்தில் சிங்­கப்­பூ­ரின் பல இன மாண­வர்­களும் கலந்­து­கொண்டு தமிழ்­நாட்­டின் சிறப்பு­களை, வளர்ச்சி வாய்ப்புகளை அறியவும் அதேபோல் தமிழக மாணவர்கள் சிங்கப்பூரில் இருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.

சிங்­கப்­பூரின் பன்­மு­கத்தன்­மையை, சிறப்பு இயல்புகளை மன­தில் கொண்டு தமி­ழ­கம் செயல்படட்டும்;

இரு தரப்பு பொரு­ளி­யல், மொழி, பண்­பாட்டு உறவு­கள் புதிய உச்சத்தை எட்டட்டும். அதற்கு முதல்வர் வருகை உரமாகட்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!