எஸ் ஜே சூர்யா தமிழ், தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார்.
இவர் இயக்குநர் சங்கர் தற்பொழுது இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சீயான் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்திலும் முக்கிய கதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கினார்.

