சாண்டி நடிப்பில் உருவாகும் புதுப்படம்

சாண்டி நடிப்பில் உருவாகும் புதுப்படம்

1 mins read
3b83a427-2c90-45bb-8cc6-264c87b5ab44
‘பரிமளா அண்ட் கோ’ படச் சுவரொட்டி. - படம்: மாலைமலர்
Google News Preferred Icon

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதுப் படத்திற்கு ‘பரிமளா அண்ட் கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, யோகிபாபு, இயக்குநர் மிஷ்கின், சாண்டி, சிங்கம்புலி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாண்டிக்கு நாயகனுக்கு எதிரான வேடம் அமைந்துள்ளதாம்.

‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுபாஸ்கரன், ஜி.கே.தமிழ்க்குமரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின் அறிமுகக் காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘வாட்சா உடாதா’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் சாண்டி.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்நடிகர்காணொளிபாடல்