கானக் குயில் காஜல்

காஜல் கானக் குயிலாக மாறி ‘சக்கரவியூகா’ என்ற கன்னடப் படத்திற்காக ஒரு பாடல் பாடி இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் மற்றும் பலர் நடித்த ‘அழகுராஜா’ படத்தில் மேடைப் பாடகி கதாபாத்திரத்தில் நடித்தவர் காஜல் அகர்வால். அந்தப் படத்தில் சந்தானத்தின் நகைச்சுவையை விட தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைச் சிரிக்க வைத்தார் காஜல் அகர்வால். அந்த ‘சித்ரா தேவிப்ரியா’ கதாபாத்திரத்தை இன்றும் தொலைக்காட்சியில் பார்த்தால் சிரிக்காதவர்கள் எவரும் இல்லை எனலாம்.

இப்போது எதற்கு அந்த ஞாபகம் என்கிறீர்களா? காஜல் அகர்வால் நிஜமாகவே ஒரு படத்தில் பாடி இருக்கிறார். கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்து வரும் ‘சக்கரவியூகா’ என்ற படத்தில் அவர் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் பாடிய பாடலை நேற்று ஒலிப்பதிவு செய்தனர்.

தமிழில் வெளிவந்த ‘இவன் வேற மாதிரி’ படத்தின் கன்னட மறுபதிப்புதான் ‘சக்கரவியூகா’ படம். இப்படத்திற்காக தெலுங்கு நடிகரான ஜுனியர் என்டிஆரும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இப்படத்தைத் தயாரிக்கும் லோகித், ஜுனியர் என்டிஆரின் நெருங்கிய நண்பர் என்பது கூடுதல் தகவல். புனித் ராஜ்குமாரின் 25வது படமாக உருவாகி வருகிறது ‘சக்கரவியூகா’. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் காஜல் அகர்வால் இதுவரை தான் நடித்த எந்த ஒரு படத்திலும் பாடியதில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை