விஜய் ஜோடியாக நடிக்கும் மியா

விஜய் தற்போது தனது 59ஆவது படமாக அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தனது 60ஆவது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடந்து வந்தது. இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது ‘அமரகாவியம்’, விஷ்ணு நடிப்பில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் நடித்த மியா ஜார்ஜ், விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக ‘காக்காமுட்டை’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும் கேள்வி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சரத்குமார், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

14 Nov 2019

குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது ‘வானம் கொட்டட்டும்’

நடிக்கத் துவங்கி 12 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இப்போதுதான் மனநிறைவு தரும் கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் அதிதி ராவ். 

14 Nov 2019

‘பட்டாம்பூச்சிகள் பறக்கும்’