ஷாம்: எனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்

‘குப்பி’, ‘வனயுத்தம்’, ‘காவலர் குடியி ருப்பு’ ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இப்போது ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தை இயக்கி உள்ளார். இதில் அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா, புதுமுகம் அக் ஷா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். நடிகர் ஷாம் இதில் தொழிலதிபர் கதா பாத்திரத்தில் வருகிறார்.

“‘குப்பி’ படம் பார்த்துவிட்டு இயக் குநர் ஏ.எம்.ஆர்.ரமே‌ஷிடம்க்கு பேசி னேன். அப்போது உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். அது இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. “ஒரு கொலை குற்றத்தைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி யின் அனுபவத்தை மையமாகக் கொண்ட படம் இது. இளம் தொழில் அதிபராக நடிக்கிறேன். என் மனைவியாக மனீஷா கொய்ராலா நடிக்கிறார்.

“இதில் தடயவியல் சோதனை முக்கிய இடம் பெறுகிறது. படம் அங்கி ருந்துதான் தொடங்கும். இதற்காக தடயவியல் சோதனைக் கூடம் போன்ற அரங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட் டுள்ளது.2016-01-12 06:00:00 +0800

Loading...
Load next