திருமணத்துக்கு சம்மதித்த சிம்பு

‘பசங்க-2’, ‘கதகளி’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ் அடுத்து ‘இது நம்ம ஆளு’ படத்தின் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார். இப்படம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகுமாம். தற்போது இப்படத்தின் பின்னணி இசைக் கோப்புப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகி றது. இன்னும் ஒரு பாடலும் எடுக்க வேண்டி உள்ளதாம். அதையெல்லாம் முடித்துவிட்டு விரைவில் வெளியாகிவிடும் என்கிறார். “‘இது நம்ம ஆளு’ படத்தின் விளம்பரத்தில் சிம்புவும் நயன்தாராவும் கண்டிப்பாக பங்கேற்பார் கள். நயன்தாரா இந்தப் படத்துக்காக நிறைய நாட்கள் கால்‌ஷீட் ஒதுக்கியிருந்தார்.

நாங்கள் தான் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். இருப்பினும் விளம்பர நிகழ்வுகளுக்குக் கண்டிப்பாக வருவார்,” என்கிறார் பாண்டிராஜ். திரையைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக வலம் வந்தது சிம்பு, நயன்தாரா ஜோடி. ஆனால், இடையில் அவர்களது காதல் முறிந்து போனது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த ஜோடி திரையில் இணையவே இணையாது என ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால், அதை முறியடித்து மீண்டும் அவர்களை ஜோடி சேர்த்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். போகட்டும், சிம்புவைப் பற்றிய அண்மைய தகவல் ஒன்று.