‘காதலைச் சொன்னதுமே படம் முடிந்து போகும்’

‘சூது கவ்வும்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் நலன் குமாரசாமியின் மதிப்பு உயரத்துக்குப் போய்விட்டது. அப்படத்தின் வெற்றிக்குப்பின் சுமார் ஒரு டஜன் தயாரிப்பாளர்கள் அவரை சுற்றிச் சுற்றி வந்த போதிலும், ‘நல்ல கதை சிக்கட் டும். பிறகு முன்பணம் வாங்கிக் கொள்கிறேன்’ என்று அத்தனை பேரையும் அன்போடு அனுப்பி வைத்தவர் நலன். அதன்பிறகு சில மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டி ருக்கிறார்.

நடுவில் ‘கை நீளம்’ என்ற தலைப்பில் சொந்தக் கதையை படமாக்க நினைத்தவர் ஒரு கட்டத்தில் அது சரியாக வராது போல தெரிந்ததும், அந்தக் கதையை அப்படியே தள்ளி தூரமாக வைத்துவிட்டார். பிறகு கொரிய மொழிப் படம் ஒன்றின் கதை உரிமையை முறைப் படி வாங்கித்தான் இந்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம். கதை உரிமம் பெறுவதற்காக ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தி ருப்பதாகக் கேள்வி. “உண்மையில் ‘சூது கவ்வும்’ படத்திற்கு முன்பே இந்தக் கதையைத்தான் நான் இயக்கியிருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ அது தள்ளிப் போனது,” என்கிறார் நலன். ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய்சேதுபதி, மடோனா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’