அதிகம் பேசி அசத்தும் நாயகன்

ஒருவரின் இடத்தை இன்னொருவரைக் கொண்டு நிரப்புவது மிகவும் கடினம் என்பார்கள் அனுபவசாலிகள். ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த சிரமத்திலும் ஒரு சுலபமான வழி கிடைத்தது. அந்த வழி - மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல், நையாண்டி, முகபாவம் என ஒன்பது பொருத்தங் களிலும் அவர் சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்தார். அப்புறமென்ன? முன்னவர் போன பாதையிலேயே பின்னவரும் போக, கொட்டாம்பட்டி, சின்னாளப்பட்டி ரசிகர் மன்றப் பலகைகளில் இப்போது மா.கா.பா.வும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

‘வானவராயன் வல்லவராயன்’ படத்தைத் தொடர்ந்து மா.கா.பா ஆனந்த் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘நவரச திலகம்’. வரும் 15ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்க, காம்ரான் இயக்கி இருக்கிறார். என்ன சொல்கிறார் இயக்குநர்? “நம்ம படத்தின் நாயகன் வாயா லேயே நல்லா வடை சுடும் குணாதிசயம் கொண்டவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்வார். “இந்த வேடத்தில் நடிக்க பொருத்த மான நாயகன் யார் என்று யோசித்தபோது சட்டென மனதில் தோன்றியவர் மா.கா.பா. ஆனந்த் தான். ஒரு திருமண வீட்டில் அழகான பெண்ணைப் பார்க்கிறார். கண்டதும் காதல் மலர்கிறது. திருமணம் முடிவ தற்குள் அந்தப் பெண்ணின் மனதில் இடம்பிடிக்கிறார். கடைசியில் பார்த் தால், மணப்பெண்ணின் தங்கைதான் அவரது காதலி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்