சிம்பு நடித்த படத்துக்கு தடை கோரி வழக்கு

சிம்பு, நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘இதுநம்ம ஆளு’. இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள் ளது. தொடக்கத்தில் இந்தப் படத்தை தயாரிக்க ‘டேக் எண்டர் டைன்மென்ட்’ என்ற நிறுவனத் திடம் ரூ.2.50 கோடியை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவன உரிமை யாளர் டி.ராஜேந்தர் கடன் வாங்கியிருந்தார். இந்தக் கடன் தொகையை, படம் வெளியாவதற்கு முன்பு வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டதாம். ஆனால் சொன்னபடி டி.ராஜேந்தர் தரப்பு வாங்கிய பணத்தை திருப்பித் தராததால், ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ‘டேக்’ நிறுவனம். வழக்கு விசாரணையின்போது, கடன் தொகையை கொடுத்து விடுவதாக டி.ராஜேந்தர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் முன்னிலையாகி, “கடன் வாங்கிய அசல் தொகையை மட்டும் கொடுத்து விட்டு படத்தை வெளியிட எதிர் மனுதாரர் கோரிக்கை வைக்கிறார். “இதை ஏற்க முடியாது. எனவே, கடன் தொகை, வட்டி யுடன் சேர்த்து ரூ.3.31 கோடியை கொடுக்கவும், அதன் பின்னரே படத்தை வெளியிட வேண்டும் என்றும் டி.ராஜேந்தருக்கு நீதி மன்றம் உத்தரவிட வேண்டும்,” என்று வலியுறுத்தினார். இதற்கு டி.ராஜேந்தர் தரப்பின் கருத்தை தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசார ணையை இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளார். ஏற்கெனவே பீப் பாடல் உட்பட சில பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ள சிம்பு, இந்த விவ காரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ளும்படி தன் தந்தையிடம் கூறியுள்ளாராம். எனவே பண விவகாரம் சுமுகமாக பேசி முடிக் கப்படும் எனத் தெரிகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி