‘முதல் இடம் வேண்டும்’

‘ரஜினிமுருகன்’ படத்தின் வெற்றி யால் சிவகார்த்திகேயனைவிட அதிக மகிழ்ச்சியில் இருப்பது கீர்த்தி சுரேஷ்தான். அடுத்து பெயரிடப்படாத ஒரு படம், தனு‌ஷுடன் ‘ரயில்’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்பு சட்டை’ என இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெளியீடு காண உள்ளன. இதற்கிடையே அம்மணி தெலுங் கில் நடித்த ‘நேனு ஷைலஜா’ படமும் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. “இந்தாண்டு முதல் நாளில் வெளியான படம் அது. எனது முதல் தெலுங்குப் படமே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதில் அளவில்லாத மகிழ்ச்சி. கூடவே, இந்த 2016ஆம் ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறேன்.

இதை விட வேறு என்னதான் வேண்டும்?” என்று கேட்கிறார் கீர்த்தி. தமிழில் முதல் நிலை நடிகையாக உயர்வீர்களா? “உண்மையில் சொன்னால் நம்பர் ஒன் ஆசை எனக்குமுண்டு. புத்தாண்டை வெற்றியுடன் ஆரம்பித் திருப்பதே பெரிய ஆறுதலாக உள்ளது. அடுத்தடுத்துப் படங்கள் செய்கிறேன். “வாழ்க்கை என்னை ரொம்பவும் பரபரப்பாக இயங்க வைத்திருக்கிறது. 2016இல் இருந்து கீர்த்திதான் முதல் நிலை நடிகை என்று சொல்ல வேண்டும். முதலிடம் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது பகவத் கீதை. பார்ப்போம்.” இனி எந்த மொழிப் படத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்? தமிழா, தெலுங்கா? “நடிப்பதற்கு மொழி ஒரு பிரச்சி னையாக இருக்காது. கதைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அதாவது என்னிடம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் புதுப் பட வாய்ப்புகள் கிடைத்தால், எந்தப் படத்தின் கதை நன்றாக உள்ளதோ, எதில் நடித்தால் நன்றாக இருக்கும் என உள் மனம் சொல்கிறதோ, அதில் நடிப்பேன்.”

இப்பகுதியில் மேலும் செய்திகள்