வெளி நிறுவன படத்தில் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ முதல் கடைசியாக அவர் நடித்த ‘கெத்து’ படம் வரை அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனமே தயாரித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், தற்போது இவர் நடித்து வரும் ‘மனிதன்’, அடுத்து நடிக்க இருக்கும் சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ஆகியவற்றையும் உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்கிறார். ஆனால், தற்போது முதன்முறையாக வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளாராம்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இயக்குநர் யார்? என்பது தெரியவில்லை. எனினும் படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சங்கத்தமிழன்’ காட்சியில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா. படம்: ஊடகம்

15 Nov 2019

நிவேதா: சங்கத் தமிழன் திருப்புமுனையை ஏற்படுத்தும்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகிவரும் அதேவேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் தலையில் மலர்க்கூடையை சுமந்து சென்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். 

15 Nov 2019

தர்காவில் காஜல் பிரார்த்தனை

கௌதம் கார்த்திக் அண்மையில் தேனி மாவட்டத்துக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். படம்: ஊடகம்

15 Nov 2019

கௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்