‘தெறி’ டீசர் புதிய சாதனை

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தெறி’. இப் படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு யுடியூபில் வெளியிடப் பட்டது. இந்த முன்னோட்டப் படத்தின் வரவுக்காகவே காத்திருந்தது போல விஜய் ரசிகர்கள் முன்னோட்டக் காட்சியைத் தெறிக்க விட்டுவிட்டார்கள். ‘வேதாளம்’ படத்தின் முன்னோட்டக் காட்சியைவிட 24 மணி நேரத்திற்குள் அதிகமான லைக்குகளைப் பெற்று ‘தெறி’ படத்தின் முன்னோட்ட காணொளி புதிய சாதனை படைத்துள்ளது.

‘வேதாளம்’ டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக 10 மணி நேரத்திற்குள் 79,000 பேரிடம் விருப்பக் குறிகளைப் (லைக்குகள்) பெற்றுள்ளது. ஆனால், ‘தெறி’ டீசர் அதே 10 மணி நேரத்திற்குள் 1,20,000 விருப்பக் குறிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், ‘வேதாளம்’ முன்னோட்டக் காட்சி இதுவரை வாங்கியுள்ள 1,40,000 லைக்குகளை இன் னும் சில மணி நேரத்திற்குள் ‘தெறி’ முன்னோட்டக் காணொளி மிஞ்சி விடும். என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி