சண்டக்கோழி-2ல் மீரா ஜாஸ்மின்

லிங்குசாமி இயக்கத்தில் 2005ல் விஷால் நடித்த படம் சண்டக்கோழி. இந்தப் படத்தில் விஷாலுடன் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து லிங்குசாமியும் விஷாலும் இணைந்து சண்டக்கோழி-2 படத்தை எடுக்க முடிவுசெய்துள்ளனர். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் புதுச்சேரியில் தொடங்கவுள்ளது.

அதையடுத்து, காரைக்குடி, கும்பகோணம் போன்ற இடங்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடப்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில், மொத்தம் 60 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் லிங்குசாமி. மேலும், இதுவரை லிங்குசாமி படங்களிலும் விஷாலுடன் இணைந்து நடிக்காத அனுஷ்காவை இந்த சண்டக்கோழி=2 படத்தில் நாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப் பட்டுள்ளதாம். அதோடு, இந்தப் படத்தின் படப்பிடிப்புக் காரணமாக இந்தியில் தான் இயக்கி வந்த ‘பையா’ ரீமேக் படப்பிடிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளாராம் இயக்குநர் லிங்குசாமி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்