‘போக்கிரி ராஜா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஜீவா நடிப்பில் கடைசியாக ‘யான்’ படம் வெளியானது. கடந்த ஆண்டு அவர் நடித்து எந்தப் படமும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தார்கள். இப்போது அவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் முதலாவதாக ‘போக்கிரி ராஜா’ படம் வெளியாகும் என்று கூறப் படுகிறது. இம்மாதம் 26ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும் சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘புலி’ படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இப்படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

‘போக்கிரி ராஜா’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் ஜீவா, ஹன்சிகா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்