விக்ரமின் உளவாளியான நயன்தாரா

விக்ரமுக்கு ஜோடியாக ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தில் விக்ரம் இரண்டு தோற்றங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா இப்படத்தில் ரகசிய உளவாளியாக நடிப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. நயன்தாராவுக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, நயன்தாரா ‘பில்லா’ படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இருமுகன்’ படத்தை ‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் சுவரொட்டிகள் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’