ஜி.வி.பிரகாஷ் - ஆனந்தி ஜோடி சேரும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

ஜி.வி பிரகாஷ் குமாரை வைத்து ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன், மீண்டும் அவரையே வைத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்னும் தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக நடிக்கிறார் ‘கயல்’ ஆனந்தி. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள இந்தப் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவர இருக்கிறது.