நம்பிக்கை தளராத பரத்

“ரஜினி காந்த், கமல்ஹாசன் என மூத்த கதாநாயகர்கள் பலர் களைப்பின்றி தொடர்ந்து நடிக்கிறார்கள். எனக்கென்ன வந்தது? கடந்த சில வருடங்களாக நான் ரொம்பவும் எதிர்பார்த்த படங்கள் சரியாக ஓடவில்லை. ஆனால் இந்தாண்டு நல்லவிதமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற வெறியில் இடைவிடாமல் வேலை பார்க்கிறேன். பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.”

இப்போது நடிக்கும் படங்கள் குறித்து? “முதலில் வெளியாக உள்ள ‘என் னோடு விளையாடு’ படத்தில் தக வல் தொழில்நுட்ப நிபுணர் வேடம். சாந்தினி ஜோடியாக நடிக்கிறார். “அடுத்து ‘சிம்பா’ படத்தில் பானு மெஹ்ரா ஜோடி. சிம்பா என்பது ஒரு வகை நாயின் பெயர். கஞ்சா புகைப் பவர்களின் கற்பனை உலகைச் சித்திரிக்கும் வேடம். “இந்த வேடத்தில் நடிப்பதற்காக கஞ்சா புகைப்பவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்தேன். நிறைய ஹாலிவுட் படங்களைப் பார்த்து பயிற்சியும் எடுத்துக்கொண்டேன்.

படத்தில் நான் கஞ்சா புகைக்கும்போது கற்பனை செய்யும் சம்பவங்கள் அடுத்து அப்படியே நடக்கும் என்பது மாதிரி வித்தியாசமான திரைக்கதை. முடிவு யாருமே எதிர்பாராத வகையில் இருக் கும்.” ‘பொட்டு’ படத்தில் அகோரியாக நடிக்கிறீர்களா? “இது எனது 28வது படம். அகோரியா க மட்டுமல்ல. ஒரு காட்சியில் பெண் வேடத்திலும் வரு வேன். இயக்குநர் வ டி வு டை யா ன் செமத்தியாக வேலை வாங்கியுள் ளார். “எந்த மாதிரியான வேடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் முன்னைவிட இப்போது அதிகம் பக்குவமாகி உள் ளேன்,” என்கிறார் நடிகர் பரத்.