விக்ரம் பிரபு, ஷாமிலி இணைந்து நடிக்கும் ‘வீர சிவாஜி’

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் படம் ‘வீர சிவாஜி’. இதில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். இவர்களுடன் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குநர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவவை எம்.சுகுமார் கவனிக்க, இமான் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கணேஷ் விநாயக். இது எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம். “இந்தப் படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் அழகான குடும்ப நிகழ்வுகளும் உண்டு. அதனால் முழு நீளப் பொழுதுபோக்குச் சித்திரம் எனலாம்.

கதாநாயகன் சிவாஜி வாடகைக் கார் ஓட்டுநர். ஒருமுறை புதுவையில் இருந்து கன்னியாகுமரி செல்ல நேரிடுகிறது. அந்தப் பயணத்தின்போது நடக்கும் ஒரு பரபரப்பான சம்பவம் அவனது வாழ்க்கையைத் திடீரெனத் திசை மாற்றுகிறது. “அந்த சம்பவத்தையொட்டி நடக்கும் துணை நிகழ்வுகள்தான் இப்படத்தின் திரைக்கதை. படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு புதுவையில் நடைபெற்றது. பாடல் காட்சிகள் மட்டுமே மீதமுள்ளது,” என்கிறார் கணேஷ் விநாயக்.