நடிகைகளின் விருப்பங்கள் - பூர்ணா

தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், அவை பெரியளவில் வெற்றி பெற்றாலும் கூட, சில நடிகை களுக்குப் படங்களில் நடிப்பது தொடர்பில் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். அந்த வகையில் சில நடிகைகளின் விருப்பங்களைத் தெரிந்துகொள்வோம். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங் களில் நடித்துவருபவர் பூர்ணா. முதலில் மலையாளப் பட உலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார்.

“நான் முதலில் மலையாளப் படங் களில் அறிமுகமானேன். அங்கு எனக்கு முதல் வாய்ப்புக் கிடைத்தபோது நல்ல கதாபாத்திரம் அமைந்திருப்பதாகப் பலரும் கூறினர். அந்த உற்சாகத்தில், நல்ல கதை என்று நம்பி, அடுத்து வந்த வாய்ப்புகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன். “ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும்போதுதான் நான் ஒப்புக்கொண்டது சிறிய கதாபாத்திரம் என்பதே எனக்குத் தெரியவரும். “ஒப்பந்தத்தில் கையெ ழுத்துப் போட்டுவிட்டதால் வேறு வழியில்லாமல் சாதாரண சிறு சிறு வேடங்களில் நடிக்கும் நிலை ஏற்பட்டது. அதுபோல் அங்கு நான் பலமுறை ஏமாந்து விட்டேன்.

“ஆனால் அதன் பிறகு நிலைமை மாறியது. தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. அண்மையில் தெலுங்கில் தயாரான ஒரு பேய்ப் படத்தில் நடித்தேன். இதைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சியில் இறந்துவிட்ட தாகப் புரளி கிளப்பிவிட் டார்கள். அது உண்மை யல்ல. “இன்னமும் கூட என் வளர்ச்சியைப் பிடிக் காதவர்கள், தடுக்கக் கூடியவர்கள் உள்ள னர். தமிழ்த் திரைப்படங் களில் மனதுக்குப் பிடித்த வேடங்களில் நடிக்கிறேன்.

“இந்த ஆண்டு எனக்குத் திருமணம் நடத்தி வைக்கவேண்டும் என்று எனது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடுகிறார்கள். என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் ஒருவர்தான் எனக்கு கணவராக வரவேண்டும். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். “திருமணம் நிச்சயமாகும் வரை நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், அதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம்பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை,” என்கிறார் பூர்ணா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனது ‘புரோக்கன் விங்’ என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகக் கூறியுள்ளார் ஆண்ட்ரியா. படம்: ஊடகம்

19 Oct 2019

ஆன்ட்ரியாவின் கவிதையால் கலங்கும் அரசியல் வாரிசு

தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் மலையாளத்தில் மோகன்லாலுடனும் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

19 Oct 2019

திரிஷாவின் ஆடம்பர காரைப் பார்த்து வியக்கும் திரையுலகம்