‘நல்ல வாயன் நாற வாயன்’

பாஸ்கர் ராவ்: மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கதை இந்திய அரசாங்கம் ஏற்படுத்திய இட ஒதுக்கீடு முறை, பணத்துக்கும் வாக்களிப்பதற்கும் உள்ள தொடர்பு பற்றிய கதை ‘நல்ல வாயன் நாற வாயன்’. இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டு 68 ஆண்டுகள் ஆன பின்ன ரும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் கூலிகளாகவே ரத்தத்தையும் சிறுநீரகத்தையும் வாக்குச்சீட்டையும்கூட விற்க வேண்டிய நிலையில் இருக்கின்றார் கள். அதற்கு காரணம் அரசியல் அமைப்பா? சமுதாயமா? இல்லை அரசாங்கமா? என்ற கேள்விகளை எழுப்புகிறது இப்படம்.

அது மட்டுமல்லாமல், அக் கேள்விகளுக்கான பதில்களையும் அலசியுள்ளனராம். மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்க ளிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அரசியல்வாதியின் மகன் தன் தந்தையின் ஆசைக்கு இணங்க அரசியலில் நுழைகிறான். தேர்த லில் மக்களுக்கு மதுவையும் பணத்தையும் கொடுக்கும் கட்சிக ளுக்கு மத்தியில் வாக்குச்சீட்டின் மகத்துவத்தை உணர்த்தி தனது கட்சி ஆட்சியைப் பிடிக்க எவ்வாறு வழிவகுக்கிறான் என்பது கதை. நாயகனாக அஜ்மல் நடித்திருக்கிறார்.

முன் பாதியில் பொறுப் பற்ற மகனாகவும் இரண்டாம் பாதியில் பக்குவமடைந்த தொலை நோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். நாயகி ஆரு‌ஷி. மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மை யுடன், தான் ஆசைப்பட்டு படித்து அடைந்த மாவட்ட ஆட்சியர் பதவியைத் துறக்கும் புதுமைப் பெண்ணாக வருகிறார். இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நன்கு படித்து உயர்ந்த தனது வாரிசு கூட சுயநலவாதியாகிப் போனதை நினைத்து வருந்தும் கிராமத்துப் பெரியவராக நாசர் நடித்திருக்கிறார்.

‘நல்ல வாயன் நாற வாயன்’ படத்தில் அஜ்மல், ஆரு‌ஷி, பன்ச்சி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர் சூர்யா. அதனால் மாணவ சமுதாயத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் என்று சூர்யாவை பாராட்டிய நடிகர் ரஜினி காந்த், இளையர்கள் தமிழின் சிறப்பு குறித்து நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். கோப்புப்படம்

23 Jul 2019

'இளையர்கள் தமிழின் சிறப்பை அறிந்திருக்க வேண்டும்'

‘நுங்கம்பாக்கம்’ படத்தில் நடித்துள்ள புது முகங்கள் மனோ, ஐரா. படம்: ஊடகம்

23 Jul 2019

எதிர்ப்புகளைக் கடந்து வெளியீடு காண்கிறது ‘நுங்கம்பாக்கம்’