சுடச் சுடச் செய்திகள்

அரசியலில் குதிக்கிறார் திரிஷா

தமிழ்த் திரையுலகில் பல நடிகைகள் அரசியலில் குதித்துப் புகழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது திரிஷாவும் அரசியலில் குதித்துள்ளார். ஆனால், திரிஷா குதித்தது உண்மையான அரசியலில் இல்லை. தற்போது அவர் நடித்து வரும் அடுத்த படமான ‘கொடி’ படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.
‘காக்கி சட்டை’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வரும் அடுத்த படம் ‘கொடி’. இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். அண்ணன், தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றனர்.
அண்மையில் தனுஷ் கட்சி மேடையில் பேசுவது போன்று புகைப்படம் வெளியானது. இதில் திரிஷா, ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon