பாண்டிராஜ் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வாய்ப்பு

ஒரு நாயகனை பாண்டிராஜ் தேர்வு செய்துகொண்டிருக்கிறாராம். மற்றொரு நாயகன் மற்றும் நடிகைகளைத் தேர்ந்தெடுத்த பின் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. ‘மெரினா’ படம் இயக்கியவர் பாண்டிராஜ். அதையடுத்துக் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திலும் விமலுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக அவரை நடிக்க வைதிருந்தார். அதன் பின்னர் ‘இது நம்ம ஆளு’, ‘பசங்க-2’, ‘கதகளி’ ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்தாராம். ஆனால் சிவகார்த்திகேயன் அதிக படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் அவரது அழைப்பை ஏற்கமுடியாத நிலையில் உள்ளாராம். அதனால் இப்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரையும் அவருக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிமேனனையும் ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

Loading...
Load next