‘ஆண்டவன் கட்டளை’யில் பாட இருக்கும் விஜய் சேதுபதி

மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கே. தற்போது ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்கான பாடல்களுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அண்மைக்காலமாக கதாநாயகர்களும் பின்னணி பாடி வருவதால் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியைப் பாட வைக்க முடிவு செய்திருக்கிறார் இசையமைப்பாளர் கே.