‘விசாரணை’யினால் குவியும் பட வாய்ப்புகள்

வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் அண்மை­யில் வெளி­வந்த ‘விசாரணை’ திரைப்­ப­டம் தமி­ழ­கத்­தில் மட்­டு­மின்றி உலகம் முழு­வ­தி­லும் உள்ள தமிழ் ரசி­கர்­க­ளால் பெரிதும் பாராட்­டப்­பட்­டது. அந்தப் படம் பல அனைத்­து­லக விரு­து­களைக் குவித்துக் கோலி­வுட்­டுக்­குப் பெருமை சேர்த்த நிலையில் அந்தப் படத்­தில் நடித்த நான்கு நண்­பர்­களுக்­கும் நல்ல பெயர் கிடைத்­தி­ருக்­கிறது. படத்­தில் நடித்­தி­ருந்த ‘ஆடு­க­ளம்’ முரு­க­தாஸ் படத்­தின் ஆரம்பத்­தி­லி­ருந்து இறு­தி­வரை ‘விசாரணை’ என்ற பெயரில் காவல் துறை­யி­ன­ரால் துன்­பு­றுத்­தப்படு­வ­தாக காட்­சி­கள் அமைந்­தி­ருந்தன. அதில் இவ­ருடைய நடிப்பு ரசி­கர்­க­ளால் பெரிதும் பாராட்­டப்­பட்­டது.

ஆனால், இந்தப் படத்­திற்­குத் தனது மனைவியை அழைத்துச் செல்ல மறுத்­து­விட்­டா­ராம் முரு­க­தாஸ். திரையில் காவல்­துறை­யி­னர் தன்னைக் கொடுமை­யாக அடித்­துத் துன்­பு­றுத்­து­வதைத் தனது மனைவி பார்த்­தால் திரை­ய­ரங்கத்­தி­லேயே அழு­து­வி­டு­வார் என்­ப­தால் அவரை அந்தப் படத்­திற்கு அழைத்துச் செல்­ல­வில்லை என அண்மை­யில் ஒரு பேட்­டி­யில் தெரி­வித்­தி­ருந்தார். ‘விசாரணை’ வெற்­றிக்­குப் பின்னர் கோலி­வுட்­டில் நகைச்­சுவை வேடங்கள் மட்­டு­மின்றி குண­சித்­திர வேடங்களில் நடிக்­க­வும் பல வாய்ப்­பு­கள் தன்னைத் தேடி வரு­வ­தாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ‘ஆடு­க­ளம்’ முரு­க­தா­ஸ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது. 

15 Oct 2019

‘எனக்கு சவாலான படமாக இருந்தது’

கடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவருகிறார் சசிகுமார். படம்: ஊடகம்

15 Oct 2019

கடனை அடைக்க 8 படங்களில் இடைவிடாது நடிக்கும் சசிகுமார்