‘குற்றமே தண்டனை’ முதல் பார்வை வெளியீடு

‘குற்றமே தண்டனை’ முதல் பார்வை வெளியீடு தேசிய விருது வென்ற ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடிக்கும் புதிய படம் ‘குற்றமே தண்டனை’. இப்படத் தின் முதல் பார்வையை வெளி யிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. இயல்பான திரைக்கதையில், எதார்த்தமான வாழ்வியலை புகுத்தி தனது இயக்கம், ஒளிப் பதிவு திறமையால் ‘காக்கா முட்டை’ எனும் அழகான படைப்பை கொடுத்தவர் மணி கண்டன்.

முதல் படத்திலேயே அனைத்துத் தரப்பு தமிழ்ச் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த வர் இயக்குநராகிவிட்டார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இவரது இரண்டாவது படைப்பான ‘குற்றமே தண்டனை’ திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து வருகி றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். எம்.மணிகண்டனின் அடுத்த படத்தின் நாயகனும், நடிகர் விதார்த்தின் நெருங்கிய நண்ப ருமான விஜய் சேதுபதி இப்படத் தின் முதல் பார்வையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.

‘குற்றமே தண்டனை’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வு

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்