சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பாடல்கள் தயார்

'ரஜினி முருகன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. இதில் அவரது ஜோடியாக 'ரஜினி முருகன்' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷே நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தை ஆர்.டி.ராஜா அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல் இப்படத்தில் இடம்பெறும் பாடல்களும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பணிபுரிந்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் இப்படத்தில் பல வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!