‘புத்தர் சிலை பரிசளிப்பு எதிர்பாராத ஒன்று’

உல­கி­லேயே அதிக பாடல்­களைப் பாடி­ய­வர் என்று கின்னஸில் இடம்­பெற்ற பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்­களுக்கு புத்தர் சிலையை பரி­ச­ளித்­தார் கவிஞர் வைர­முத்து. அப்போது அவ­ருக்கு வாழ்த்து சொன்ன வைர­முத்து, உலக சாதனைப் பதி­வேட்­டில் பாடகி பி.சுசீலா அம்மை­யார் அவர்­கள் இடம்­பெற்­றி­ருப்­பது, அவ­ருக்கு மட்டும் பெருமை அல்ல, உல­கத்­தி­லேயே அதி­க­மான பாடல்­களைப் பாடிய பாடகி இந்­தி­யா­வில் இருக்­கிறார் என்­ப­தால் அது இந்­தி­யா­விற்கே பெருமை. "1953ல் தனது முதல் பாடலைப் பாடினார். மேலும் தெலுங்கு, தமிழ், மலை­யா­ளம், கன்­ன­டம், இந்தி, வங்கா­ளம் மற்றும் ஒரியா ஆகிய 7 மொழி­களி­லும் பாடும் திறன் பெற்­ற­வர்.

அவரது தமிழ்ப் பாடல்­களில் உள்ள உச்­ச­ரிப்­பின் துல்­லி­யம், தமிழின் மேன்மை, சொற்­களின் சுத்தம் ஆகியவை அவ­ருக்கு மட்டுமே உரியது. "இவரின் குரல் இல்லை­யென்றால் பல பேருக்­குக் காயங்கள் ஆறி இருக்­காது. பலரது கண்­ணீரைத் துடைத்த குரல், பலரை நிம்­ம­தி­யாக உறங்க வைத்த குரல், பலரை காத­லிக்க வைத்த குரல், பலரது சண்டை­களைத் தீர்த்து வைத்த குரல், பல மேடை­களில் தாலாட்­டிய குரல், சுசீலா அம்மை­யா­ரின் குரல்.

சுசீலா அம்மை­யா­ரின் தலைமுறை தாண்டிய குர­லுக்கு எனது தலை­வ­ணக்­கத்தை நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்," என்றார் அவர். வைர­முத்து பரி­ச­ளித்த புத்தர் சிலையைப் பற்றிப் பேசிய சுசீலா அம்மை­யார் அவர்­கள், "சில நாட்­களுக்கு முன் சிலோ­னுக்கு என்னை அழைத்து அங்கு கம்பன் விருது கொடுத்­துக் கௌர­வித்­த­னர். அந்­நே­ரத்­தில் ஒரு வீட்டின் வாசலில் புத்தர் சிலையைக் கண்டு அதை என் வீட்­டிற்குக் கொண்­டு­வர வேண்டும் என்று விரும்­பி ­னேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!