கமல்ஹாசனுக்கு ஹென்றி லாங்லாய்ஸ் விருது

இந்திய சினிமாவுக்கு கமல்ஹாசன் செய்த பெரும் பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாடு ஹென்றி லாங்லாய்ஸ் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. கமலின் நடிப்புக்குப் பல விருதுகள் கிடைத்துள்ளது. இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இந்திய சினிமாவை உலகளவில் இடம் பெறச் செய்தவர்களில் இவருக்கு முக்கிய பங்குண்டு. விருது குறித்துக் கமல் கூறும் போது, 'பாரிஸில் ஹென்றி லாங்லாய்ஸ் விருதைப் பெற்றுள்ளேன். இந்த விருதை நான் பெறும்போது என் குரு அனந்து சார் இருந்திருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன்.

காரணம் அவர்தான் ஹென்றி லாங்லாய்ஸ் என்ற பெயரையே எனக்குத் தெரியப்படுத்தியவர்," என்று கூறினார். ஹென்றி லாங்லாய்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற சினிமா வரலாற்று ஆசிரியர். இவர் 1977ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். எனவே அவரது பெயரில் சினிமா சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!