‘பாகுபலி 2’ல் தீபிகா படுகோன்

தற்போது 'பாகுபலி 2' திரைப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு மும்­மு­ர­மாக நடை­பெற்று வரும் நிலையில் அதில் கௌரவ வேடத்­தில் தீபிகா படுகோனை நடிக்கவைக்க முயற்­சி­கள் நடந்து வரு­கின்றன. எனினும், கௌரவ வேடத்­தில் நடிக்க தீபிகா படுகோன் ஒத்துக்கொண்ட விவரம் இனிமேல்தான் வெளியாக இருக்­கும் நிலையில் அவர் ஹாலிவுட் படத்­தில் மும்­மு­ர­மாக நடித்­துக் கொண்டு இருக்­கிறார். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்­ய­ராஜ், நாசர், ராணா உள்­ளிட்ட பல முன்னணி நட்­சத்­தி­ரங் கள் நடித்த பாகுபலி படம் இரு பாட­கங்க­ளா­கத் தயா­ரிக்­கப் பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியாகி மாபெரும் வர­வேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளி­யா­கும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

இந்திய அளவில் மிகப்­பெ­ரிய வெற்றி பெற்ற படம் 'பாகுபலி'. தெலுங்­கில் தொடர் வெற்றிப் படங்களை இயக்கி வரும் எஸ்.எஸ்.ராஜ­ம­வுலி இயக்­கத்­தில் தெலுங்­கில் மட்டுமின்றி தமிழ், மலை­யா­ளம், இந்தி ஆகிய மொழி­களிலும் வெளியான இப்­ப­டம், அதிக பொருட் செலவில் வெளியான முதல் இந்­தி­யத் திரைப்­ப­டம் என்ற பெருமை­யோடு வெளியாகி, அதிக வசூல் ஈட்டிய முதல் இந்­தி­யத் திரைப்­ப­டம் என்ற சாதனையைப் புரிந்தது.

இந்நிலையில், சிறந்த படத்­திற்­கான தேசிய விருதை 'பாகுபலி' வென்­றுள்­ளது. 63வது தேசிய விரு­து­கள் அண்மை­யில் அறி­விக்­கப்­பட்­டன. அதில் சிறந்த படத்­திற்­கான தேசிய விருது 'பாகுபலி' படத்­திற்கு அறி­விக்­கப் பட்டது. சிறந்த இயக்­கு­ந­ராக சஞ்சை லீலா பன்சாலி தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார். 'பஜீராவோ மஸ்தானி' படத்­திற்­காக அவ­ருக்கு விருது அறி­விக்­கப்­பட்­டது. சிறந்த நடி­க­ருக்­கான விருது 'பிக்கு' படத்­திற்­காக அமிதாப்பச்­ச­னுக்­கும் சிறந்த நடிகைக்­கான விருது 'தானு வெட்ஸ் மானு' படத்­திற்­காக கங்கனா ரணா­வத்­துக்­கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!